முகநூல் பதிவொன்றில் ”சாணக்கியன் யார் ?” என்ற தலைப்பில் அவரை அறிமுகப்படுத்துவதாக கூறி அவர் அங்கு உதவி செய்தார், இங்கு உதவிசெய்தார், சொந்த பணத்தில் 50 லட்சம் ரூபாய் வழங்கி யிருப்பவர் அவருக்கு வாக்களியுங்கள் என கூறப்பட்டிருந்தது. அவருக்கு வாக்களிப்பதற்கான நியாயப்பாடுகள் தொடர்பில் இதற்கு அப்பால் அவர்களால் செல்லமுடியவில்லை.

இன்று தமிழ் மக்களின் பித்ததிநிதிகளாக தெரிவுசெய்ய படவேண்டியவர்களின் தார்மிக தகுதிகள் இவையல்ல.இதற்கப்பால் தமிழ் தேசியப் பரப்பில் இந்த சாணக்கியன் யார்? என்றே நாம் பார்க்கவேண்டியுள்ளது.

அவ்வாறு நாம் நோக்குவோமாயின் ,கீழ்வரும் விடையங்களே எமக்கு விடையாக கிடைக்கும்.

*சென்ற தேர்தலில் சிங்கள கட்சியில் போட்டியிட்டவர்.

*கிழக்கில் தமிழின இருப்பை வேரறுக்க முனைந்துநிற்கும் ஹிஸ்புல்லாவுடன் கூட்டுச் சேர்ந்தவர்.

*தமிழ் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் மூச்சு விடாதவர்.

*காணாமல் போனோர் விவகாரம்,அரசியல் கைதிகள் பிரச்சனை,தாயாக பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், சிங்கள பௌத்த மயமாக்கல் என்பன தொடர்பில் இன்றுவரை இந்த தமிழருக்கு ஆதரவாக எந்த கருத்தையும் வெளியிடாதவர்.

*இப்போது கொதிநிலை விடயமாக இருக்கும் சிறிலங்கா அரசு தலைவரால் அமைக்கப்பட்ட தொல்பொருள் தொடர்பான செயலணியின் உள்நோக்கங்கள் தொடர்பில் அனைத்துத்தரப்பிலும் கண்டனங்கள் கவலைகள் வெளிப்படுத்தப்படும் போது இந்த மனிதர் மட்டும் வாய்திறவாமல் இருப்பவர்.

*கிழக்கில் உள்ள அரசியல் கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் அனைவரும் இதற்கெதிராக தமது கண்டனங்களை வெளியிட்டுள்ள நிலையில் மௌன விரதம் கடைப்பிடிப்பவர்.

தமிழரின் உரிமைகள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிதேடல்,போர்க்குற்றம்,இனவழிப்பு போன்ற உயிர்நாடியான விடயங்களை தவிர்த்து சிங்கள மற்றும் ஒட்டுக்குழு அரசியல் வாதிகள் போல் ‘ உதவி’ ,’அபிவிருத்தி’ என்று மட்டுமே பேசுபவர்

*கூட்டமைப்பின் இளையோரணி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகள்,கட்சி முக்கியஸ்தர்கள் என பலதரப்புகளின் எதிர்ப்பையும் மீறி தமிழ் தேசிய விரோதி சுமேந்திரனால் பரிந்துரைக்கப்பட்டு வேட்பாளர் ஆக்கப்பட்டவர்.

எலும்புகளை வீசியெறிந்தால் வாலாட்டக்கூடியவர்கள் தமிழர்கள் என நினைக்கும், நாளை சிங்களவர்களுடன் சேர்ந்துகொள்ளக் கூடிய ஒருவரை(முன்பு அவர்களுடன் சேர்ந்திருந்தவர்) தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டுமென கோருவது தமிழினத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here