இன அழிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனக் குழுமம் அரச தரப்பிலிருந்து தம் மீது திணிக்கப்படும் ஐந்து வகையான சொல்லாடல்கள் குறித்த அதிக கவனத்தை கோருகிறது ‘ நந்திக்கடல்’.

அவையாவன

01.மறுவாழ்வு
02. புனரமைப்பு
03. அபிவிருத்தி
04. இன ஐக்கியம்
05. நல்லிணக்கம்

என்பவையாகும்.

வெளித்தோற்றத்தில் அழிவுற்றுக் கொண்டிருக்கும் இனத்தின் ஊனமுற்ற உளவியலுக்கு நெருக்கமானதாக – பகட்டாகக் காட்சியளிக்கும் இந்த சொல்லாடல்கள் உள்ளடக்கத்தில் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தை முற்றாக அரசியல் நீக்கம் செய்யவும் தொடர் இன அழிப்பிற்குள்ளாக்கவும் அரசு கையிலெடுக்கும் இன அழிப்பு மூலோபாயம் என்கிறது ‘நந்திக்கடல்’.

இதற்கு ஒத்தூதும் அல்லது இதன் மூலோபாய தந்திரத்தை உணராத உள்ளக சக்திகள் குறித்தும் எச்சரிக்கையை கோருகிறது ‘நந்திக்கடல்’.

இதுவே நாம் தமிழரசுக் கட்சியை தொடர் விமர்சனத்திற்குள்ளாக்குவதன் அடிப்படை.

எமது மக்கள் கேட்பது எதையும் இன அழிப்பு அரசு செய்யவும் இல்லை, அதற்கான பொறிமுறைகளை தமிழரசுக் கட்சி உருவாக்கவுமில்லை.

மக்கள் கேட்பது,
01. நில விடுவிப்பு
02. வலிந்து காணாமலக்கப்பட்டோர் தொடர்பான உண்மை நிலை
03. அரசியற் கைதிகளின் விடுதலை
04. இராணுவமயமாக்கலை நிறுத்தி அவர்களை வெளியேறும் கோரிக்கை
05. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்

இதில் ஏதாவது நடக்கிறதா?

நாம் கேட்பது வேறு விதமான ஐந்து கோரிக்கைகள், ஆனால் இன அழிப்பு அரசு நம் மீது திணிப்பதோ பகட்டாகக் காட்சியளிக்கும் ஐந்து வேறு வகையான இன அழிப்பு மூலோபாயங்கள்.

இதன் பின்னும் இன அழிப்பு அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழரசுக் கட்சியை எப்படி ஆதரிக்க முடியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here