தமிழரசுக் கட்சியை ஏன் நாம் தோற்கடிக்க வேண்டும்?

0
509

பல நூறு காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். தமிழர் தாயகத்தை அழிப்பதற்காகத் தமது இறைமையைப் பறிகொடுத்து விட்டு புவிசார் அரசியல் போட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட ஒரு தேசத்தில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். அப்படித்தான் 2018 ஒக்டோபர் மாதத்தில் திடீரென்று மைத்ரி, மகிந்தவை பிரதமராக்கிய போது ஒரு பெரும் நெருக்கடியை சிங்களம் சந்தித்தது.

உள்ளக, வெளியக அளவில்.அது பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. கிட்டத்தட்ட ஒரு அன்னியத் தலையீடு ஒன்று நேரடியாகக் களம் புகுவதற்கான வாய்ப்பு வரை அது நகர்ந்தது. எல்லாவற்றையும் இழந்து ஆனால் நந்திக்கடல் நகர்வினூடாக நமது இறைமையை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அந்தத் தேசத்திலிருந்து பிரிந்து செல்லும் முனைப்புடன் உள்ள நாம் இந்த நெருக்கடிக்குள் எம்மை வலிந்து புகுத்திக்கொள்ளவோ, அவற்றில் ஏதோ ஒரு தரப்பை காக்கவோ முற்படக் கூடாது.

எம்மை விலத்திக் கொள்வதே அனுகூலம். ஆனால் கூட்டமைப்பு வழமை போல் கழுத்தறுத்தது. சிங்களம் எதிர் கொள்ளும் புவிசார் நெருக்கடி என்பது பெரும் பேரழிவின், பெரும் அவலத்தின் பின்னணியில் நந்திக்கடல் உருவாக்கியது. இந்தத் தீவின், பிராந்தியத்தின் மைய அரசியல் குவிந்துள்ள இடம் நந்திக்கடல் தான்..

இனி அதைச் சுற்றித்தான், அதன் நகர்வுகளுக்கு எதிர்வினையாகத்தான் எதிரிகள் காய்கள் நகர்த்த வேண்டியிருக்கும். இதைத்தான் நாம் நந்திக்கடல் கணிதம் என்கிறோம். இதைத் தொடர்ந்து குலைத்து சிங்களத்தைக் காப்பாற்றி வரும் தமிழரசுக் கட்சியை நாம் தோற்கடிக்காமல் வேறு என்னதான் செய்ய முடியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here