tamileelamVildbjerg cup 2013 ன் இரண்டாம் நாளான 02.08.2013 4 போட்டிகளில் விளையாடிய தமிழீழ அணிகள் 3 போட்டிகளில் தோல்வியையும் 1 போட்டியில் வெற்றியையும் தழுவி கொண்டன.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 2 Skarup IF

இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு Skarup IF அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Skarup IF 2 இலக்குகளையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

போட்டியின் இரண்டாம் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 1 இலக்கை எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.

எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 0 : 4 Hong GF

காலை 09:45 மணிக்கு Hong GF அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hong GF அணி 4 இலக்குகளையும் தமிழீழ அணி 0 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 4 Aabyhoj IF

மதியம் 14:25 மணிக்கு Aabyhoj IFஅணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Aabyhoj IFஅணி 4 இலக்குகளையும் தமிழீழ அணி 1இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

போட்டியின் இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கை எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 5 : 2 Roslev IK

மாலை 15:35 மணிக்கு Roslev IKஅணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Roslev IK 2 இலக்குகளையும் தமிழீழ அணி 5 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர்.

சாரங்கன் சிவநாதன் 2 இலக்குகளையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன் ராசசிங்கம் 2 இலக்குகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.