இலங்கையை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் நிலையில் இருந்து குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு உலக வங்கி தரமிறக்கியுள்ளது.

உலகவங்கி அனைத்துலக நாடுகளை பொருளாதார அடிப்படையில் நான்கு வகையாக வகைப்படுத்துகின்றது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள்

குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்

மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்

அதிக வருமானம் கொண்ட நாடுகள்

அண்மையில் வெளியிடப்பட்ட புதியவகை தரப்படுத்தலின் அடிப்படையில் இலங்கையின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல சூடான் மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளின் தரமும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் பெனின், இந்தோனேசியா, மொரிசியஸ், நேபாளம், ருமேனியா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில் கோத்தபாயா ராஜபக்சா நிர்வாகம் தனது பொருளாதாரத் திட்டங்களை இதுவரை முன்வைக்கவில்லை என்பது மிகப்பெரும் பின்னடைவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், நாணயமாற்றுவிகிதம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி என்பன கருத்தில் எடுக்கப்படும் மொத்த தேசிய வருமானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த தரப்படுத்தலில் கோவிட்-19 இன் தாக்கம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here