அடிமை நிலை தகர்க்க ஐ.நாவில் ஒன்றுகூடுவோம் – தமிழ் இளையோர் அமைப்பு

0
617

german-tamilஎமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழர்களுடைய விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு தமிழீழத்தில் வாழும் எமது உறவுகள் சொந்த நாட்டிலே சிங்களபேரினவாதத்தால் அகதிகளாக> அடிமைகளாக> அவர்களுடைய குரல்கள் நசுக்கப்பட்டு> ஒடுக்கப்பட்டு> கருத்துரிமை மறுக்கப்பட்டு சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

எமது உயிரினும் மேலானா தாயகப்பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி> தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார பண்பாட்டு சின்னங்கள் அழிக்கப்பட்டு பௌத்த சிலைகளை நிருபி சிங்கள பெயர் மாற்றங்களை செய்து முழுமையாக எமது உயிரினும் மேலான தாயகப்பூமியை ஆக்கிரமித்து மற்றும் தமிழ் தேசியத்திற்கு மிகவும் ஆபத்தை உண்டாக்கக்;கூடிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது சிங்களபேரினவாதம். சிங்களபேரினவாதத்தின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தி எமது தாயக நிலத்தை மீட்டெடுக்க கூடிய ஒரே சக்தியாக இன்று புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையே திகழ்கின்றது.

அன்பான தமிழுறவுகளே! „போராட்ட வடிவங்கள் மாறலாம்> ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை’ என்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைய எமது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஓர் அரசியல் போராட்டமாக உருவெடுத்து வீறு நடைப்போடுகின்றது. „மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற கருத்திற்கமைய தமிழர்களுக்கு சார்பான சிறிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இன்று சர்வதேசரீதியில் மாறிவரும் அரசியல் மாற்றங்கள் அவதானித்து சர்வதேசரீதியில் எமக்கு சாதகமான பாரிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி தமிழீழத்தில் நிகழ்தப்பட்டது போர்குற்றம் அல்லது மனிதவுரிமை மீறல்லல்ல அது ஓர் திட்டமிட்ட தமிழினவழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு கூறவேண்டியது புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகவும் காலத்தின் கட்டாயமாக திகழ்கின்றது.

அந்த அடிப்படையில் எதிர்வரும் 10.03.2014 திங்கள் அன்று சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமிழினவழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் எழுச்சி நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளார்கள். அன்றைய தினம் மனிதநேய நடைப்பயணத்தை முன்னெடுக்கின்ற மனிதநேயப் பணியாளர்களும் தமிழச் சிற்றூர்திப் பயணமும் ஐ.நா.வின் மனிதவுரிமை திடலை வந்தடையவுள்ளது. ஆந்த மாபெரும் எழுச்சி நிகழ்வில் இந்த உலகப்பந்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும்; கலந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகும். களமாடி மடிந்த மாவீரர்களினதும் சிங்கள பேரினவாதத்தால் இனவழிப்பிற்கு உள்ளாகப்பட்ட மக்களுக்கும் அனைத்து தமிழர்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் வரலாறு காணாத மாபெரும் எழுச்சிப் போராட்டமாக இந்த எழுச்சி நிகழ்வு அமையவேண்டும். மேலும் எமது மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் „எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில்> காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.’ ஆகையால் அனைத்து தமிழ் உறவுகளையும் தமிழினவழிப்பிற்கு நீதி கேட்டும் மாபெரும் எழுச்சி நிகழ்வில் அனைத்து தமிழுறவுகளையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி மிகவும் உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

இவ்வண்ணம்

ஊடகப்பிரிவு

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி