சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள புதிய விசாரணைக்குழுவானது சிறீலங்கா மீதான அனைத்துலக அழுத்தத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க குடியுரிமை கொண்ட சிறீலங்காவின் மூத்த அதிகாரி ஒருவரே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வொசிங்டன் ரைம்ஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

அசோசியட் பிரஸ் எழுத்தாளர் எடித் எம் லெடெரர் 30. 06. 2014 அன்று எழுதிய இந்த பத்தியின் தமிழ் வடிவத்தினை ஈழம்ஈநியூஸ் இங்கு தனது வாசகர்களுக்கு தருகின்றது.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட எறிகணைத்தாக்குதல்களில் சிக்கி 40,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவின் முன்னைய அறிக்கை தெரிவித்துள்ளது. சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சிறீலங்கா அரசு படுகொலை செய்துள்ளது.

மிகவும் ஆற்றல் மிக்க அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார்.

பின்லாந்து நாட்டின் முன்னாள் அரச தலைவரும் நோபல் பரிசு பெற்றவரும், கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவரும் இந்த குழுவில் உள்ளனர். இந்த குழு எதிர்வரும் 10 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

ஆனால் கடந்த 26 வருடங்களாக இடம்பெற்றுவரும் இனப்போரின் இறுதி மாதங்களில் தனது படைகள் பொதுமக்களை தாக்கவில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை தவறானது, வறிய மூன்றாம் உலக நாடு ஒன்றை தண்டிக்க முனைகின்றனர் என சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், தற்போதைய ஐ.நாவுக்கான பிரதிநிதியுமான பலித கோகொன தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் சிறீலங்கா அதிபரை அச்சம் கொள்ளவைத்துள்ளது. போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரின் அதிகாரம் அசைவு நிலையை அடைந்துள்ளது.

GotaOpen_Mouth_J
குறிப்பாக அவரின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமாகிய கோத்தபாய ராஜபக்சா மீதே அதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் தலைவர்களை படுகொலை செய்தது உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அமெரிக்க குடியுரிமையை கொண்டவர்.
சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களின் படுகொலைகளில் கோகொன மற்றும் அவரின் உதவியாளரும், படை உயரதிகாரியுமான ஒருவரின் பங்கு குறித்து அண்மையில் தென்ஆபிரிக்கா மனித உரிமை அமைப்பின் சட்டவியலாளர் ஒருவர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதி இரு நாட்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களான பாலசிங்கம் நடேசன் மற்றும் சி புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டதாகவும், அதன் தவகல்கள் சிறீலங்கா அரசுக்கு பரிமாறப்பட்டதாகவும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் பின்னர் கொல்லப்பட்டுவிட்டனர்.

சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் களத்தில் நின்ற 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிக்கு உட்டதரவிட்டதாக ஆறு மாதங்களின் பின்னர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.

Sarath-Fonseka_-300x225
போரின் பின்னர் அவர் எதிர்த்தரப்புக்கு மாறியிருந்தார், ஆனால் தான் தவறாக தெரிவித்துவிட்டதாக அவர் பின்னர் தெரிவித்தபோதும், அவருக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு விடுதலையானார்.

இராணுவ அதிகாரியான கோத்தபாயா 1990 களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததுடன் அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பாணியாற்றியிருந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு திரும்பி தனது சகோதரரின் தேல்தல் வெற்றிக்காக பணியாற்றினார்.

அவர் சிறீலங்காவில் வசிக்கும் போதும், அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ளதால் அவர் மீது அமெரிக்க சட்டங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் இதுவரையிலும் பயன்படுத்தப்படவில்லை. எனினும் அமெரிக்க நீதித்துறை திணைக்களம் இது தொடர்பில் கருத்துக்களை கூற மறுத்துவிட்டது.

கோத்தபாயா மீதான விசாரணையை மேற்கொள்ள வொசிங்டன் முற்படுவதான சிறீலங்கா முன்னர் குற்றம் சுமத்தியிருந்தது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களின் படி 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் ஒக்லகோமா பகுதியில் உள்ள வெளிவிவகார திணைக்களத்திற்கு தன்னை அழைத்து விசாரிக்க அமெரிக்க முயன்றதாகவும், தன்னை அவர்கள் கோத்தபாயாவுக்கு எதிராக பயன்படுத்த முற்பட்டதாகவும் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

பொன்சேகாவும் அமெரிக்காவின் கிறீன் மட்டையை கொண்டுள்ளார். ஆனால் விசாரணை செய்யப்படுவதற்கு முன்னர் பொன்சேகா நாட்டுக்கு திரும்பிவிட்டார்.

பத்து மாதங்களை கால எல்லையாகக் கொண்ட இந்த விசாரணையானது கோத்தபாயாவை அல்லது ஏனைய அரச தலைவர்களை விசாரணை செய்யுமா என்பதில் தெளிவு அற்ற தன்மையே காணப்படுகின்றது. ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதனையே வலியுறுத்துகின்றனர். விடுதலைப்புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளபோதும் அதன் தலைவர்கள் இறந்துவிட்டனர் அல்லது காணாமல்போயுள்ளனர் இந்த நிலையில் அவர்கள் மீதான விசாரணைகள் சாத்தியமற்றது.

12 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க சிறீலங்கா அரசு மறுத்துவருகின்றது. இந்த குழுவின் ஆலோசகரான பின்லாந்தின் முன்னால் அரச தலைவர் மாட்டி அறிசாரி கொசோவோ பிரச்சனையில் சிறப்பு பிரதிநிதியான செயற்பட்டவர். 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசினையும் பெற்றவர்.

தேமி சில்வியா காட்ரைட் கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளின் போது ஐ.நா விசாரணைக்குழுவின் நீதிபதியான பணியாற்றியவர். அஸ்மா ஜகங்கீர் பாக்கிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் ஆவார்.

இந்த விசாரணை உடனடியாக ஒரு தீர்ப்பை வழங்கப்போவதில்லை. அதனை ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்க்கின்றன. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால் இந்த விசாரணையானது சிறீலங்கா விடயத்தில் அனைத்துலகத்திற்கான ஒரு நுளைவுப் பதையை திறக்கும்.
சிறீலங்காவின் போர்க்குற்றவாளிகள் அமெரிக்காவிற்குள் நுளைவதை தடுக்கவேண்டும் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பல வழக்கறிஞர்கள் கோரிவருகின்றனர்.

war_crimes_unpunished
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த 100 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் காணாமல்போயுள்ளதாக அல்லது கொல்லப்பட்டுள்ளதாக தொன்ஆபிரிக்காவை சேர்ந்த சட்டவாளர் ஜஸ்மின் சூகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தொடர்பில் ஐ.நா அமைத்த குழுவில் அவர் முன்னர் பணியாற்றியவர்.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் திரு நடேசன் மற்றும் புலித்தேவனுடன் அவரின் மனித உரிமை மையம் இறுதி 48 மணிநேரத்தில் தொடர்புகளை பேணியதுடன், சிறீலங்கா அரசுடனும் தொடர்பில் இருந்தது. எனவே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் அனைத்துலகச் சட்டத்திற்கு முரணாக திட்டமிட்டமுறையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

நடேசனும் புலித்தேவனும் 12 பேருடன் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்ததை கண்ட நான்கு சாட்சிகளை இந்த அமைப்பு சாட்சியாக தனது அறிக்கையில் இணைத்துள்ளது. அவர்கள் அனைவரும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் சரணடைந்ததாக சாட்சிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு மணிநேரத்தின் பின்னர் சரணடைந்தவர்களின் சடலங்களே வீதியோரத்தில் கிடந்தன. அதனை சூழ சிறீலங்கா படையினர் நின்றிருந்தனர். அவர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர் என நோரில் கண்டவர் மேலும் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களின் உடலில் தீக்காயங்களும் உள்ளன.
சரணடைந்தவர்களை நோக்கி சிறீலங்கா இராணுவம் இயந்திரத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகவும், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் போரில் இருந்து தப்பிவந்த ஒருவர் தெரிவித்ததாக 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மோதலில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு கூறுகின்றது. அவர்கள் தவறுதலாக சுடப்பட்டதாக கோத்தபாயா கூறுகின்றார், ஆனால் அவர்களை விடுதலைப்புலிகளே பின்னால் இருந்து சுட்டதாக கோகொனா தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் முரண்பாடானவை.

கோகொனாவுடன் தற்போது ஐ.நாவில் பணியாற்றிவரும் சவீந்திர சில்வா எமது கேள்விகளுக்கு பதில் தர மறுத்துவிட்டார். கோகொனா தற்போது வேறு தொனியில் பேசுகின்றார். அங்கு என்ன நடந்தது என தனக்கு தெரியாது என தற்போது கூறுகின்றார்.

விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பான தகவல் தனக்கு கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ள கோகொன அதன் பின்னர் நடைபெற்ற சரணடைவு நிகழ்வு தொடர்பில் தனக்கு தெரியாது என கூறுகின்றார். விடுதலைப்புலிகளை கொல்லுமாறு கோத்தபாயா சில்வாவுக்கு உத்தரவு வழங்கியதை தான் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி: வொசிங்டன் ரைம்ஸ் (30.06.2014)

நன்றி:அசோசியட் பிரஸ் எழுத்தாளர் எடித் எம் லெடெரர்

தமிழாக்கம்: ஈழம்ஈநியூஸ்.