அமெரிக்க ”அயோக்கிய” தீர்மானத்தை எதிர்த்தும், எரித்தும் மாணவிகளின் பேரணி

0
702

நேற்று மாலை தமிழர் கடலருகே அமெரிக்க ”அயோக்கிய” தீர்மானத்தை எதிர்த்தும், எரித்தும் மாணவிகளின் பேரணி காந்தி சிலை முதல் கண்ணகி சிலை வரை நடைபெற்றது.

பேரணியில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பினையும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும் உடனே நடத்தப்பட வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி மாணவிகள் பட்டாளம் புறப்பட்டது.

bala-sudent
அமெரிக்க தீர்மானத்தினை தமிழர்கள் நாங்கள் எதிர்க்கின்றோம் என்பதனை பறைசாற்றும் வகையில் ”அமெரிக்க தீர்மானம்” எரிக்கப்பட்டது. இனப்படுகொலையில் பங்காற்றிய அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தியும், அமெரிக்காவிற்கு எதிரான பொருளாதார போரினை மாணவிகளும் கையிலெடுத்து கொண்டதை குறிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களான கோக்,பெப்சி உள்ளிட்ட பொருட்களை மாணவிகள் தங்கள் கால்களால் மிதித்து சென்றனர்.

பேரணியில் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும், தமிழுணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

bala-stude
2009ல் நடைபெற்ற இனப்படுகொலைக்கு பின் தமிழீழ விடுதலையை முன்னிறுத்தி பெண்களின் பங்களிப்பில் நடைபெற்ற முக்கியமான போராட்டம் என்று தோழர்கள் பலரின் பாராட்டியதன் மூலம் இப்போராட்டம் எதற்காக முன்னெடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை இது அடைந்துவிட்டது என்பது தெரிகிறது.

பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் தொடர் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி எங்களோடு உறுதுணையாக நிற்கும் அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

-பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.