அமெரிக்க தீர்மானம் : தமிழின அழிப்பில் தொடரும் அமெரிக்க பங்களிப்பு

0
655

war-crime22001 இல் புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல்இ புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல்இ தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல்இ இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ‘ புரொஜக்ட பெக்கன்’ என்ற தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக திட்டத்தை வரைந்தது இந்த அமெரிக்காதான்.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில் தமிழர் சேனைக்கு தடைகள் கொண்டு வந்தது முதல் அமெரிக்காவில் பங்கு சந்தையில் செல்வாக்கு பெற்ற புலிகளின் நிதி வலையமைப்பை சேர்ந்த ராஜ் ராஜரட்ணத்தை உள்ளே தள்ளியது மற்றும் 2002 இல் கேபியை கைது செய்து ஒப்பந்த அடிப்படையில் சிறீலங்காவிற்கு விற்றது வரை அது பெரிய கதை.

தலைவர் பிரபாகரனை தன் போக்கிற்கு வளைத்து ஒரு நிரந்தரத் தளத்தை தெற்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக திருகோணமலையை மையமாக வைத்து உருவாக்கலாம் என்ற கனவில் இருந்த அமெரிக்காவிற்கு சாதகமான எந்த சமிக்ஞையையும் தலைவர் வழங்க மறுத்ததுடன் தன்னிச்சையாக தனி நாடு உருவாக்கும் திpட்டத்தை நெருங்கியதும் அமெரிக்கா விழித்து கொண்டது.

தென்னாசியப்பகுதியில் தான் அழுத்தமாகக் கால்பதிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இடைஞ்சல் என்பதை காலப்போக்கில் உணர்ந்து கொண்ட அமெரிக்கா தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிப்பு செய்ய 2001 இல் ‘ஒப்பரேசன் பெக்கன’ திட்டத்தை வரைகிறது.

புலிகளை அழித்தொழிப்பது மட்டுமல்ல தமக்கு சாதகமான சிங்களத்தலைமையை வைத்து தான் விரும்பியதை சாதிக்கவும் திட்டமிட்டது அமெரிக்கா. அதுதான் ரணிலின் தலைமை.

தலைவா பிரபாகரன் விழித்து கொண்டு அந்த திட்டத்தையும் உடைத்து மகிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்தார். அதுதான் தலைவரின் தூரநோக்கும் இராஜதந்திரமும்..

பின்பு நடந்ததெல்லாம் வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இன்றுவரை அமெரிக்காவால் இலங்கைக்குள் முழுமையாக நுழைய முடியவில்லை.

தற்போது நடக்கும் ஜெனிவா கூத்துக்கள் அமெரிக்காவின் நிரந்தர உள் நுழைவிற்கான பேரம் பேசுதல்களே.. மகிந்தர் இருக்கும்வரை அது முடியாது. இது தலைவர் போட்ட கணக்கு அது பிசக வாய்ப்பில்லை.

எனவே ஆட்சி மாற்றத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு தனது வரைபுகளை அமெரிக்கா வரைய முற்படுகிறது. அது தான் இனஅழிப்பு மறைக்கப்பட்டு மகிந்தரை மட்டும் குற்றவாளியாக காட்டி காலம் காலமாக நடந்து வரும் இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க அமெரிக்கா முற்படுகிறது.

இந்த முறை தீர்மானத்தில் இது அப்பட்டமாகவே தெரிகிறது.

அண்மையில் மக்கள் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா எப்படி தமிழின அழிப்பில் பங்கெடுத்தது என்பது விலாவாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியை இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்

அது வருமாறு:

‘2002இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு நிரந்தர சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. அக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமிடையில் வலு சமநிலை காணப்பட்டது. பேச்சு வார்த்தைகளின்போது இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமத்துவம் கொண்டவர்கள் என்ற அடிப்படையிலேயே இடம்பெற்றன. ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்தன. போர் நிறுத்தம் முறிவுற்றமைக்கும் பேச்சுவார்த்தைகளில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமைக்கும் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் காரணமல்ல. திருப்திகரமான முன்னேற்றம் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டிருந்தது.

எனினும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்தமையும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தித் தொடர்பாகவும் வாஷிங்டனில் அமெரிக்க அரசு ஏற்பாடு செய்த மாநாட்டுக்கு விடுதலைப் புலிகளை அழைக்க மறுத்தமையும்தான் இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர் குலைந்துபோனமைக்குக் காரணம். இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சமத்துவம் கொண்ட தரப்புகளாக அமெரிக்கா ஏற்றுக்கொள்ளத் தொடர்ச்சியாக மறுத்து வந்தமையின் விளைவுதான் போர் மறுபடி மூண்டெழக் காரணமாக அமைந்தது.

எத்தகைய பேச்சுவார்த்தைகளும் வெற்றி பெறுவதற்கு அரசியல்ரீதியான சமத்துவ நிலையிலேயே இரண்டு தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதும் அச்சமநிலை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதும் அடிப்படையான நிபந்தனைகள் ஆகும். இலங்கைச் சூழலில் இந்த அடிப்படை விதியைத் திட்டமிட்ட வகையில் உடைத்தெறிந்த பொறுப்பு அமெரிக்க அரசையே சாரும்.’

எனவே தமிழின அழிப்பில் பங்கெடுத்த தொடர்ந்து தனது நலன்களுக்காக காய்நகர்த்தும் அமெரிக்கா எப்படி எமக்கு சார்பாக தீர்மானம் கொண்டு வரும் என்று நம்புகிறீர்கள்? தமிழ் மக்கள் விழிப்டைய வேண்டிய தருணம் இது.

தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல்வாதிகளும் சொல்லும் கதைகளை நம்பி ஜெனிவாவின் பின்னால் இழுபடாதீர்கள்.

அப்படியானால் என்னதான் தீர்வு என்று மக்கள் யோசிக்கலாம். தீர்வு இருக்கிறது. இந்த உலக ஒழுங்கை பலம்தான் தீர்மானிக்கிறது. அத்தோடு சுய நலன்கள் சார்ந்துதான் விட்டுக்கொடுப்புக்கள் இருக்கிறது.

எனவே மக்களும் மாணவர்களும் இணைந்த போராட்டம் ஒன்று களம், புலம், தமிழகம் சார்ந்து ஒரு புரட்சியாக முகிழ வண்டும். அந்த திரட்சியும் பலமும் உலக ஒழுங்கில் தமிழீழம் சார்ந்த நலனாக உருவெடுக்கும். எமக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதை விடுத்து பலமற்றவர்களாக ஆங்காங்கே உதிரிகளாக நின்று கொண்டு தெளிவற்ற முரண்பாடான கோசங்களுடன் மேற்குலகத்தின் இந்தியாவின் பின்னால் இழுபடுவது எமக்கு விடுதலையை தராது.

உண்மையிலேயே மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா மற்றும் சிங்களம் தற்போதும் தலைவர் பிரபாகரனுடன்தான் மோதிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அழிவிலும் பின்னடைவில் நின்றும் தலைவர் எல்லோருக்கும் வைத்த பொறி இது. இதை வெட்டியோடி தன்னை காத்து கொள்ள சிங்களத்திற்கும் தெரியவில்லை. உள்நுழைய அமெரிக்காவாலும் முடியவில்லை.

ஜெனிவா கூத்துக்கள் சொல்லும் எளிய உண்மை இது.

எனவே தலைவர் வைத்த பொறியை எமது துருப்பு சீட்டாக கொண்டு எதிரிகள் அதிலிருந்து விடுபட முன்பு மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து தமிழர் பலத்தை உலகிற்கு நிருபிப்போம்.

பேரம் பேசும் சக்திகளாக தலை நிமிர்ந்து நின்று எமது விடுதலையை வென்றெடுப்போம்.

ஈழம்ஈநியூஸ்.