“அம்மாவை காலால் உதைத்தார்கள்” – விபூஷிகாவின் மனதை உருக்கும் மன்றாட்டம்!

0
623

தருமபுரத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட விபூஷிகா என்ற சிறுமியின் தாயார் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அதன் பின்னர் ஆவணம் ஒன்றில் கையொப்பம் பெற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக விபூஷிகா சாட்சியம் வெளியிட்டுள்ளார்.

தனது தாயார் கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் தனது நிலை தொடர்பிலும் மனதை உருக்கும் வகையில் வீபூஷிகா மனதை உருக்கும் வகையில் மடல் ஒன்றை வரைந்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

15-03-2014,

கனம் ஐயா அவர்களுக்கு,

நான் விபூசிகா,

தாழ்மையுடன் வேண்டுகோள் விடுப்பது யாதெனில்,

எனது அம்மாவையும் விடுதலை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்னையும் எனது அம்மாவையும் 13-03-2014 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் பொய்க் குற்றம் சுமத்தி அதிக இராணுவப் பாதுகாப்புடனும் பொலிஸ் பாதுகாப்புடனும் பாரிய குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் போல எம்மை நடாத்தி என்னைப் பயமுறுத்தியும் எனது அம்மாவை கால்களால் அடித்தும் தலைமயிரை பிடித்து இழுத்தும் கன்னங்களில் அறைந்தும் எம்மை பொய்யான தகவல்கள் தகவல்கள் எழுதப்பட்ட கடிதத்தில் என்னிடம் இருந்தும் எனது அம்மாவிடம் இருந்தும் கையொப்பம் பெறப்பட்டன.

ஆனால் நானோ எனது அம்மாவோ எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. எனது அம்மா ஒரு அப்பாவியென்றும் எனது மூன்று ஆண் சகோதர்களை ஏற்கனவே பிரிந்த நிலையில் தற்பொழுது எனது பூப்புனித நீராட்டுவிழா காலப் பகுதியில் எனது அம்மாவை கைது செய்துள்ளமையால் நான் எந்த ஒரு உதவியுமின்றி எனது அம்மா இருந்தும் நான் ஒரு அனாதையாக இருக்கிறேன்.

ஆகவே எந்த வழியிலாவது எனது அம்மாவின் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டை மீளப் பெற்று எனது அம்மாவை என்னுடன் மிக விரைவில் சேர்ந்து வாழ உதவுமாறு மிகவும் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு உண்மையுள்ள

பா.விபூஷிகா
Vepuseka-1