ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் தளம் ஒன்றின் தேவை அசியமானது என்று உணரப்பட்டபோது, விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசி கூட்டமைப்பு அந்த வெற்றிடத்தை நிரப்பும் என்றே கருதப்பட்டது.

 

ஆனால் 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட மறுசீரமைப்பானது தமிழ்த் தேசியத்தை புறம்தள்ளி சிறீலங்கா அரசுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் சாதகமான ஒரு சூழலை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி உதயமாகியது.

 

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போரானது அரசியல் ரீதியாக முன்நகர்த்தப்பட வேண்டும், அதற்கு மக்களின் ஆதரவுகளைப் பெறவேண்டும், தமிழ் மக்களின் நம்பிகையை பெற்ற அரசியல் கட்சி ஒன்றின் மூலம் தான் அதனை நாம் எட்டமுடியும்.

 

ஆனால் கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தளம் பல பின்னடைவுகளைச் சந்தித்தது. ஊடக பலம், சிறீலங்கா அரசினதும், பிராந்திய வல்லரசுகளினதும் மறைமுக ஆதரவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக பலமுள்ள கட்சியாக தன்னைத் தக்கவைத்துக் கொண்டாலும், தமிழ் மக்களை தன்பக்கம் ஈர்ப்பதற்கு தமிழ்த் தேசியம், அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அது தொடர்ந்து வழங்கி தமிழ் மக்களை தனது பக்கம் வைத்துக்கொண்டது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சென்றதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற கவசமும் அவர்களின் பொய்களை மறைத்து நின்றது.

 

எனவே இந்த மாயைகளைத் தகர்த்து மக்களின் உரிமைப்போராட்டங்களை முன்நகர்த்த வேண்டும் எனில் மக்களிடம் சென்று அவர்களுடன் நேரிடையாகப்பேசி நிலமைகளை விளக்கவேண்டும். அதாவது புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு தமிழரும் உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்கள் ஐந்துபேருடன் பேசுங்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

 

எனினும் அவை உடனடியான பலனைக்கொடுக்கவில்லை, அதற்கான காலம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுத்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள எடுத்த காலமாகும்.

 

ஒவ்வொரு வருடமும் தீர்வு வரும் என கூறி தமிழ் மக்களை ஏமாற்றிய அதன் தலைவரின் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்துகொண்டதன் விளைவுகள் தான் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிம்த் தேசிய மக்கள் முன்னனியின் அதிக முன்னேற்றத்திற்கு காரணமாகியது.

 

கஜேந்திரகுமாருக்கும் அந்த கட்சிக்கும் மக்கள் வழங்கும் ஆதரவுகள் அதிகரித்துச் செல்வதற்கு சான்றாக அண்மையில் இடம்பெற்ற அனைத்துலக பெண்கள் தின நினைவுக் கூட்டத்தைக்கூற முடியும். மிகப்பெருமளவான மக்கள் அதில் கலந்துகொண்டது ஒரு அரசியல் மாற்றத்தை மக்கள் தெரிவுசெய்ய முற்பட்டுள்ளதையே காண்டுகின்றது.

 

தமிழ் மக்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை எந்த நிபந்தனைகளுமின்றி தீர்த்துவைத்து சிறீலங்கா அரசுக்கும் அதன் நீதித்துறைக்கும் அனைத்துக மட்டத்தில் நற்பெயரை பெற்றுக்கொடுத்தது மிகப்பெரும் அதிதிருப்தியை தமிழ் மக்களிடம் ஏற்படுததியுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

 

எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற மாநாடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களை அணிதிரட்டும் ஆளுமையற்றவர் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுதுடன் அரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருவதையே காண்பிக்கின்றது.

 

ஈழம் ஈ நியூஸ்.