இடிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் மட்டுமல்ல,உங்கள் இந்தியச் சிறையின் கட்டுக்காவலும் தான்…

0
476

jaya-87தமிழக சட்டமன்றத்தின் தீர்மானக்காகிதம் கழிப்பறையின் துடைப்புக்காகிதம் என்று ஜெயலலிதாவிற்கு நன்றாகவே தெரியும்.ஆனால் முள்ளிவாய்க்கால் முற்றம் புறநானூற்றின் புதியபதிப்பு என்று அக்ரஹாரம் அறிவுறுத்தியிருக்கும்.விடுதலலையின் வீரியம் எப்படியிருக்கும் என்று ஆதிக்க வாதிக்கு எப்பொழுதும் புரியாது.

ராஜபக்சே ஒருகாலும் நினைத்திருக்கமாட்டான் காமென்வெல்த் மேடை நம் விடுதலையின் வரலாற்றைப் பேசுமென்று.கதிரவன் உதிக்காத ஆதிக்கப் பேரரசை ஆண்டவன் கூட யாழ்பாணம் சென்று நடிக்கவேண்டியிருக்கும் என்று நாம் மட்டும் நினைத்தோமா?.

நீதி கேட்டுத் தமிழன் வீதியில் நிற்பதை எவனாலும் மறைக்க முடியவில்லை.அதனால் தான் இந்தியாக் கூடத் தமிழன் துயர்துடைக்க இலங்கை செல்வதாக பசப்பவேண்டியதானது.என்னசெய்வது எல்லோரையும் கருணாநிதி ஆக்கிவிடலாம் என்று எத்தனை பாடுபட்டாலும் பிரபாகரன் மூட்டிய பெருநெருப்பு அணைய மறுக்கிறது. இந்தியா என்னும் ஆதிக்கக்கோட்டைக்கு காவல்காரன் வேலை பார்க்க துடிக்கிற வரம் நாம் அடிமையாய் இருந்து பும்பியே ஆகவேண்டும்.
இந்திய தேசியம் பேசும் அரசியல் கட்சி ஒன்றாவது காமென்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்கவேண்டும், இந்தியாவே புறக்கணி! என வீரியமாகப்போராடியதா?.

ஆனால் உலம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்ககள் ஒன்றுபட்டு ஓங்கி முழங்கினார்களே எப்படி?.அது தான் மொழிவழி உள்ள இயற்கையான உறவு.உனது இந்திய உறவு செயற்கையானது,எம்மை அடிமைப்படுத்துவது.இந்தியாவை ஏற்றுக்கொள்வது, அடிமைத்தனத்தை ஒப்புக்கொள்வது!

கார்பரேட் தமிழனுக்கு வேண்டுமானால் இந்தியா புனிதமாக இருக்கலாம்.உழைக்கும் தகமிழனுக்கு அது எப்பொழுதும் எமனாகவே இருக்கிறது.

பிரபாகரன் தெளிவுபடச் சொல்வார் ‘எம்போராட்டம் அறத்தின் பாற்பட்டது,உலக விடுதலை வரலாற்றின் நியாங்களை எமது போராட்டம் தழுவி நிற்கிறது.தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை எனும் பிறப்புரிமையை நாம் என்றும் விட்டுக்கொடுக்கமாட்டோம்’

தமிழீழமக்கள் முப்பது ஆண்டுகள் நடத்திய அந்தப் பெரும் போரை வரலாற்றில் எவனாலும் மறைக்க முடியாது.இந்த கெட்ட கனவை மறைக்க இந்தியாவும்,இலங்கையும் எத்த்னையோ ரஜதந்திரங்கள் செய்கின்றன.என்ன செய்வது உலகத்தின் மனசாட்சி உறங்க மறுக்கிறது.

முள்ளி வாய்க்கால் முற்றம் நம் தமிழின விடுதலைப் போரின் அழியாசாட்சி,அதை அழிக்கத்துடிக்கிறது இந்த அக்கரஹார ஆட்சி!

செருப்பும், சீவக்கட்டையும் தமிழன் கேட்கவில்லை,விலையில்லா கிரைண்டரையும் தொலைக்காட்சியும் கொடுத்துவிட்டு விலை மதிப்பற்ற நம் விடுதலை உணர்வை காவு கேட்கிறதுது திராவிடக் கட்சியின் ஆட்சிகள்.பிரபாகரன் ஒருவாக்கிய பிரளயம் அன்றாடம் இவர்களை உருட்டிப் போடுகிறது.தீர்மான நாடகம் நடத்தி தப்பிக்கப்பார்க்கின்றனர்.

தமிழா உனக்கு என்ன வேண்டும் தேர்தல்,கூட்டு என்னும் கழிசடை அரசியலா?
பிரபாகரன் வழிநடத்திய விடுதலை அரசியலா?
அடிமை என்றும் வாழ்வதே இல்லை!
வீரன் என்றும் சாவதே இல்லை.

கி.வே. பொன்னையன்