இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக களமிறங்கும் தமிழர் கூட்டமைப்பு !

0
590

வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக தமிழ்த் தேசிய கருத்தியலை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு அதியமான் அவர்கள் திருப்பெரும்பதூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். அவருடைய வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tamil-Munnetra-kalagam
ராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த அழகு மீனா அவர்களின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. மற்ற இரு தொகுதிகளில் வேட்புமனு ஏற்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

ஆகவே மேற்கூறிய இரு தொகுதிகளில் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. திருபெரும்பதூர் தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் , பல்லாவரம், அம்பத்தூர், மதுரவாயில், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் வரும் 10 ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரையில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் ஈடுபட உள்ளனர்.

நம்முடைய கொள்கைகளில் உடன்பாடுடைய நண்பர்கள் எங்களுக்கு தோள் கொடுக்கும் விதமாக எங்களுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாம் . வாக்குச் சாவடி முகவராக (பூத் ஏஜென்ட்) பணியாற்றலாம். ஏதாவது ஒரு வகையில் நம் கூட்டமைப்பிற்கு உதவுமாறு தாய் தமிழ் உறவுகளை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள 9884296327 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

ஒன்றுபடுவோம் . வென்றுகாட்டுவோம் . வாழ்க தமிழ் .