விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப்போராட்டத்தின் மௌனத்தின் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய உளவுத்துறையின் கைப்பிடிக்குள் சென்றதை தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சுமந்திரன் உள்வாங்கப்பட்டதும், தேசியக் கோட்பாட்டில் உறுதியாக நின்றவர்கள் வெளியேற்றப்பட்டதும் நாம் அறிந்தவையே.

 
எனினும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் இது தொடர்பில் விளித்துக்கொண்டதை எண்ணி தமிழ்த் தேசியக் கூட்டமைபபும், இந்திய உளவுத்துறையும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே தமிழ் மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நகர்வுக்கு அவர்கள் தீயாக பணியாற்ற வேண்டியிருந்தது.

 
அவர்களின் கவனம் முழுவதும் தமிழ்த் தேசியம் தொடர்பில் செயற்பட்டுவருபவர்களின் நடவடிக்கைகளின் மீது தான் குவிந்திருந்தது. அவர்கள் எதனைச் செய்தாலும் அதற்கு சிங்கள அரசின் ஆதரவுடன் தடைகளை ஏற்படுத்துவது அல்லது சிங்கள அரசுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகங்களை அரங்கேற்றுவது என்பதே அவர்களின் தற்போதைய முழுநேர பணியாகிவிட்டது.

 
ஆனால் சமூகவலைத்தளங்கள் பரவிக்கிடக்கின்ற இந்த காலத்தில் தமிழ் மக்களை ஏமாற்றும் இந்த கயவர்களின் பணி அவ்வளவு சுலபமானதாக இல்லை.
வடமாகாணசபைக்கான தேர்தல்கள் அண்மித்துள்ள இந்த நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்களும் உச்சம் அடைந்துள்ளது.

 
தமது அரசியல் ஏமாற்றுத் தனங்களுக்காக அவர்கள் தற்போது எடுத்துள்ள ஆயுதம் திலீபன் என்ற அகிம்சைக்கான போராட்டத்தில் நீர் கூட அருந்தாது உயிர்நீர்த்த ஒரு உன்னதமான போராளி என்பதே உலகத் தமிழ் மக்களின் மனங்களை அதிக வேதனை அடையச் செய்துள்ளது.

 
உலக வரலாற்றில் இடம்பெறவேண்டிய இந்த மாவீரனின் அஞ்சலியை கூட சிங்கள அரசிடம் அடைவு வைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆம் இப்போது திலீபன் சிங்களத்தின் சொத்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால் சிங்களத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பதே இந்திய உளவாளி சுமத்திரன் ஆடிய நாடகத்தின் முடிவு.

 
இந்த நாடகத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் மிகவும் திறமையானது.
முதற்கட்டமாக பல ஆயிரம் தமிழ் மக்களையும், போராளிகளையும் சிங்களப் படைகளுடன் இணைந்து வேட்டையாடிய டக்ளஸ் தேவாநந்தாவுடன் கூட்டுச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உலகத்தமிழ் மக்களின் வரலாறான திலீபனை தனது மாநகர சபை எல்லகை;குள் முடிக்கியது. அதாவது திலீபன் சிங்கள அரசின் ஆளுமையின் கீழ் உள்ள மாநகரசபையின் சொத்தாம்.

 
அதனைத் தொடர்ந்து சிங்கள தேசம் தனது அடுத்த கட்டத்தை மிகவும் திறம்பட மேற்கொண்டது அதாவது காவல்துறை திலீபனின் அஞ்சலிக்கு தடை விதித்தது. அதன் பின்னர் இந்த நாடகத்தின் கதாநாயகன் சுமந்திரன் களமிறங்கினார் (வேண்டுமானால் இந்த இடத்தில் நீங்;கள் பின்னனி இசை ஒன்றை கற்பனை செய்து கொள்ளலாம்).

 
தனது வாதத்திறமையால் சிங்கள அரசிடம் திலீபனின் நினைவிடத்தையும், திலீபனையும் அடைமானம் வைத்தார் அவர். அதன் பின்னர் திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சிங்கள அரசின் அனுமதியை பெறவேண்டும் என்று முழங்கினார்.

 
பின்னர் சிங்கள அரசு அனுமதி தந்துள்ளதாக முடிவுரை எழுதப்பட்டது.

 
ஆனாலும் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு இன்னும் பலர் எம்மத்தியில் உள்ளது தான் தமிழ் இனத்தின் சாபக்கேடு.

 
தற்போது நாம் என்ன செய்யவேண்டும்?

 
தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்கு இந்திய உளவுத்துறையும், சிங்கள பேரினவாத அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற போர்வையில் களமிறங்கியுள்ளது.

 
அதனை அதரிப்பதற்கும் புலம்பெயர் தேசங்களில் சமுகவலைத்தளங்களில் பல துரோகிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் இந்த துரோகக் கும்பலிடம் இருந்து தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட வேண்டும்.

 
அதற்கு ஏற்றவாறு தமிழ் மக்களை தயார்படுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழ் மக்களினதும் கடமையாகும், அதுவே பார்த்தீபனுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

 
ஈழம் ஈ நியூஸ்