இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை ….

0
679

may-17-murugaஇலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை. நியூயார்க் ஐ நா தலைமை செயலகம் மற்றும் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் (விஜய் நம்பியார் ) அலுவலகம் முன்னே மே17 மற்றும் இன உணர்வாளர்கள் போராட்டம்.

பிப்ரவரி 12 முருகதாசன் நினைவுநாளில் தமிழின படுகொலைக்கு துணை போன ஐ நா மற்றும் அதன் பிரதிநிதிகளை கண்டித்து மற்றும் வெறுமனே ஒரு இனபடுகொலையை சாதாரணமாக போர்குற்றம் என்ற சிறு வட்டத்தில் சுருக்கி தனி ஈழ கோரிக்கையை நீர்த்து போக செய்யும் ஐ நாவின் அய்யோகியதனத்தை கண்டித்து உலகம் முழுவதும் மே 17 இயக்கம் ஐ நா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ நா தலைமை செயலகத்தை நம் தோழர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கடும் குளிர் மற்றும் உறை பணியை பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே முற்றுகையிட ஆரம்பித்தனர்.

USTPAC, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மே 17, நாம் தமிழர் மற்றும் பல தமிழின உணர்வாளர்கள் பலர் இம்முற்றுகை போராட்டத்தில் பங்கு பெற்றனர். “We want referendum, We want Tamil Eelam” என்ற நமது கோரிக்கையை விண்ணை தொட முழுக்க மிட ஏற்கனவே அங்கு இருந்த திபெத், மற்றும் ஆப்ரிக்க இளைஞர்கள் ஆதரவு கொடுத்து உற்சாக படுத்தினர்.

ஈழ விடயத்தில் ஐ ந வின் துரோகத்தை வெளியிட்ட Pertrie ரிப்போர்ட் Inner city press ன் ஊடகவியலாளர் Matthew Russell Lee நம் போராட்டத்திற்கு வந்தது நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அவரிடம் நம்முடைய கோரிக்கைகள் மற்றும் மே 17 இயக்கத்தின் அறிக்கை கையளிக்கப்பட்டது.

“இலங்கையில் நடைபெற்ற இனபடுகொலையை வெறும் போர்குற்றம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதை விட அது ஒரு இன படுகொலை என்பதை பதிவு செய்து அதற்க்கு இலங்கையில் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் மக்களிடயே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திர குமாரன் கூறினார்.

பின்னர் தோழர்கள் அருகாமையில் அமைந்துள்ள ஐ நா பாதுகாப்பு தலைமை அலுவலகமான விஜய் நம்பியாரின் அலுவகதையும் முற்றுகையிட்டனர்.

மாணவர் போராட்டதிற்கு கிடைத்த வெற்றி!

இதனிடையே, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏலம் முடிந்திறுக்கும் நிலையில் ஒரு சிங்கள வீரர்கள் கூட ஏலத்தில் எடுக்கப்படாதது மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழகத்தில் போராட்டத்தில் பங்கு பற்றிய மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

boycote-criket
கிரிக்கெட்டில் சிங்கள வீரர்களை நீக்க கோரி நாம் நடத்திய 7 போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கும், அணி உரிமையாளர்களுக்கும், ஸ்பான்ஸர் நிருவனங்களுக்கும், மின் அஞ்சல் மூலம் எதிர்பைத் தெரிவித்த உணர்வாளர்களுக்கும் நம் வாழ்த்துக்கள். ஏற்கனவே தேர்வு செய்யப் பட்டிருக்கும் அந்த சிங்கள வீரரை விரட்டி அடிக்கும் வகையில் நாம் நமது அடுத்த போராட்டத்தை நடத்தி இந்தியாவில் சிங்கள புரக்கணிப்பை முற்றிலும் சாத்தியப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.