தமிழர் தாயகப் பிரதேசத்தை பிரதிநித்துவப் படுத்தும் அனைத்து தமிழ் தலைவர்களும் ஏன் அனைதுதுத் தமிழர்களும் தாயகப் பிரதேசம் என்பது தனியான ஒரு மாவட்டமோ அல்லது பகுதியோ அல்ல என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். தமிழர் தாயகம் என்ன்பது வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு தேசமே என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டுமன்றி அது மனதில் ஆளப் பதியவும் வேண்டும்.

 

இன்று வடக்கில் நிலவுகின்ற அடக்கு முறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எந்தவகையிலும் குறைவில்லாத அளவில் அங்கும் அக்கிரமங்கள் நடந்து வருகின்றன. இதற்கு முந்திய காலங்களிலும் கிழக்கு மாகாணம் சந்தித்த பேரழிவுகள் வேறு எவற்றுடனும் ஒப்பிட முடியாதவை.

 

ஆயினும் தமிழருக்கு இழைக்கப் பட்ட இழைக்கப் படுகின்ற அநீதிகள் என்ற அடிப்படையில் நாம் வடபகுதிக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை கொடுக்கிறோமா என்பது கேள்விகக் குறியே.

 

இதற்கும் அப்பால் இனஅழிப்பு , போர்க் குற்றங்கள் என்ற பதங்கள் இன்று முள்ளிவாய் காலுடன் மட்டுமே முடங்கிப் போய்க்கிடக்கிறது. அதற்கு முன்னர் பலதசாப்தங்களாக திட்டமிட்டு அரங்கேற்றப் பட்டுவந்த படுகொலைகள், கொடூரங்கள் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை.

 

போர்க்குற்றம்,இனஅழிப்பு எனவரும்போது எமது தாயகப் பகுதிகள் எங்கும் ,ஏன் அவற்றிற்கு வெளியிலும் நிகழ்ந்த கொடூரங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்,வெளிப்படுத்தப்பட வேண்டும்.

 

இன்று தமிழ் தரப்பின் பிரதிநிதிகளாய் இருப்பவர்கள் தமது பகுதி,மாவட்டம், தொகுதி என்றில்லாமல் பொதுவில் குரல் கொடுக்க வேண்டும் செயலாற்ற வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றே.

 

ஆயினும் பலர் தாம் பிரதிநித்துவப் படுத்தும் மக்களின் துயரங்களை, அங்கு பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் அநீதிகளை,ஆக்கிரமிப்புகளை எதிர்க்க ஆகக் குறைந்தது கதைக்கக் கூட மாட்டாதவர்களாக இருக்கிறார்கள்.

 

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிந்துவப் படுத்தும் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.

 

அங்கு மீண்டும் மிகத் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் புத்த பிக்குகளின் தலமையில் இராணுவ ஆசிர்வாதத்துடன் தீவ்ரப்படுத்தப்பட்டுள்ளன. அதுபோலவே முஸ்லீம்களால் தமிழர்களின் காணிகள் அடாத்தாக அபகரிக்கப் படுகின்றன.முன்னர் தனித் தமிழ் கிராமங்களாக தனித் தமிழர்களைக் கொண்டிருந்த பல கிராமங்கள் இன்று இஸ்லாமியப் பெயருடன் தனி முஸ்லீம் கிராமங்களாக மாறியுள்ளன.

 

கல்வி,வேலைவாய்ப்பு என்பவற்றில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். அதுபோலவே அபிவிருத்திப் பணிகளிலும் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப் படுகின்றன.

 

மட்டக்களப்பில் உள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவதில்லை.( இதற்கு திரு.அரியநேந்திரன் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.)

 

திரு. யோகேஸ்வரன் அவர்கள்கோவில்,கும்பாவிசேகம்,திறந்துவைப்பு,பரிசளிப்பு என்பதுடன் திருப்பதிப் பட்டுக் கொள்வதாகவும் அதற்குமேல் அவருக்கு எந்தப் பிரஞையும் இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

பொன்.செல்வராசா எம்.பி ஊருக்கும், உறவுகளுக்கும் உழைப்பவராக,வேலைவாய்ப்பு,இடமாற்றம் என்று வேண்டியோருக்கு வேலை செய்பவராக அவர் பிசியாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதற்கு அப்பாலும் சம்பந்தர் ஐயாவிற்கு வேண்டியவராகவும் இருப்பதாக அறிய முடிகிறது.

 

இதற்கு மேலும் அங்கு கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கிறார்கள். பேச்சற்று,செயலற்று. ஆனாலும் அவர்களில் சிலர் 50 இலட்சத்திற்ற்கு ஆடம்பர வாகனம் வாங்கும் அளவிற்கு, கொழும்பில் தொடர்மாடி வீடுகள் வாங்கும் அளவிற்கு “வளர்ந்திருக்கிறார்கள்”.

 

கூடமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவர்களுக்குமிடையில் எந்தவொரு பொது வேலைத்திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

கிழக்கில் கூடமைப்பின் பிரதிநிதிகள் தெரிவு சம்பந்தருக்கு விருப்பமுடையத்தை இருக்கலாம் ஆனால் அது எனது இனத்திற்கு ஏற்றதாய் தெரியவில்லை.

 

கூட்டமைப்பு தனது செயல்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிரதிநிதிகள் எமது இனத்தின் மீட்சிக்கு குரல் கொடுக்கத் தயங்காதவர்களாக ,அதற்காக செயற்படத் தயங்காதவர்களாக இருக்கவேண்டும்.

 

வடக்கில் உள்ளவரர்கள் கிழக்கிற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரடியாக அறியவேண்டும்.அதுபோல் கிழக்கில் உள்ளவர்கள் வடக்கு செல்லவேண்டும். ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படடயில் இவர்கள் இணைந்து செயலாற்றவேண்டும்.

 

இப்படியானதொரு செயல்ப்பாடு கடந்த காலங்களில் இல்லாமல் போனதன் விளைவை நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.