ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்களுக்கு பிரித்தானியா – நியூசிலாந்து தமிழர் அஞ்சலி‏

0
623

uk-3ஜெனிவாவில் ஐநா சபை முன்பாகத் தமிழீழ மண்ணின் விடிவுக்காகத் தீயிலே சங்கமித்துத் தன் இன்னுயிரை ஈகம் செய்த ஈகப்பேரொளி செந்தில்குமரனுக்கு லண்டன் வாழ் தமிழ்மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர். பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால்; ஏற்பாடு செய்யப்பட்ட ஈகப்பேரொளி செந்தில் குமரனுக்கான நினைவு வணக்க நிகழ்ச்சியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ஈசச்சுடரினை செயற்பாட்டாளர் கனகரட்ணம் ஐயா அவர்கள் ஏற்ற, செந்தில்குமரனின் திருவுருவப் படத்திற்கு தேசிய செயற்பாட்டாளர் திருமதி யோகம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். மலர்வணக்கத்தைத் தொடர்ந்து செந்தில்குமரனின் உருக்கமான, உறுதியான இறுதி வேண்டுகோளையும் உணர்வு சுமந்த பாடலையும் உள்ளடக்கிய காணொலி காண்பிக்கப்பட்டது.
uk-2
ஐயா பழ நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் கௌதம், ஆகியோரின் உரைகள் காணொலியில் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கவிஞர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் உரையாற்றினார். மேலும் ஈகப்பேரொளி செந்தில்குமரனின் நினைவு சுமந்த உரைகள், கவிதைகள் என்பன இடம்பெற்றன.

ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கு நியூசிலாந்து தமிழ் மக்களின் வீரவணக்கம்

புலமபெயர்ந்து சுவிஸ் மண்ணில் வாழ்ந்த போதும் தேசிய தலைவர் மீது தமிழீழம் என்ற விடுதலைத்தீயில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி மிகவும் தீவிரமாக செயற்பட்டு வந்த செந்தில் குமரன் தமிழீழ விடுதலைக்காக நிதிக்கேட்டு ஐநா முன்றலில் ஈகைப்போராளி முருகதாஸ் திடலில் தீக்குளித்து வீரச்சாவடைந்துளார்.

புலமபெயர்ந்து சுவிஸ் மண்ணில் வாழ்ந்த போதும் மாறாத பற்றுக் கொண்ட தமிழீழ ஆதரவாளர் அவர் என்பது யாவரும் அறிந்ததே குடும்பவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்த போது அதற்கு மேலாக தனது தாயகமும் தனது மக்களுக்கான தீர்வை ஐநாவிடம் வலியுறுத்தி தன்னை அர்ப்பணித்து நமது தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்துளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய குடுபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்வதோடு அவருடைய வீரச்சாவு ஆனது வீண்போகாது என்பது உறுதி பூகோள அரசியல் ரீதியாக எமது பக்கசார்புகள் எமக்கு நடந்த அநீதிக்காக எதிராக உலகம் எங்கிருந்ததும் கண்டனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற சந்தர்பத்தில் நாம் அவரின் வித்துடல் மேல் சத்தியம் எடுத்துக்கொள்வோம் தமிழீழம் அடையும் வரை ஓயாது ஊழைப்போம் என்று நியூசிலாந்து தமிழ் மக்கள் சார்பில் தமிழர் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருகிணைப்புக்குழுவும் மற்றும் நியூசிலாந்து தமிழர் தேசிய பேரவை என்பன தமது வீர வணக்கத்தை சமர்பிகின்றோம்.uk-1