ஈழத் தமிழர்களின் விடிவினை பெற்றுக் கொடுக்கக்கூடிய திறவுகோல் தமிழ்நாட்டின் கையில் உள்ளது: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

0
715

obama-tamilஈழத்தமிழர் விடயங்களில் இனியும் சர்வதேசம் பாராமுகமாக நடந்து கொள்ள கூடாது. அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி விடும்.

இதில் தமிழ்நாடு, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பததையும் என்ன முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பினை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

எப்படி கொசோவாவில் நடைபெற்ற செர்பியர்களின் இனச்சுத்திகரிப்பு நீண்ட காலத்துக்கு சர்வதேசத்தின் கண்களுக்கு மறைக்க முடியாமல் போனதோ, அதே போன்று இலங்கையில் நடைபெற்;ற தற்போதும் நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்பையும் சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வந்து ஈழத்தமிழர்களுக்கான விடிவை தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அது அவரால் மட்டுமே முடியும் என்ற பலரும் திடமாக நம்புகின்றார்கள் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.

ஆபத்தான சூழ்நிலையை உலகம் புரிந்துகொண்டு அதற்கேற்ற முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா முதலில் செய்ய வேண்டியது, இலங்கையில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதையும் தமது தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் படும் துன்பத்தினையும், திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் இனசுத்திகரிப்பினையும் வெளிக்கொண்டு வருவதற்கு தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்வதோடு இதனை சர்வதேசத்திடம் கொண்டு சென்று அவர்கள் இப்பிரச்சினையினை உற்று நோக்கச் செய்ய வேண்டும்.

மேலும் தமிழக தமிழர்களும் அவர்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அவர்களும் தங்களின் செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ந்து செயற்படுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்று தாம் திடமாக நம்புவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு அரசாங்கத்தின் இலக்கு எப்போதுமே தமிழர்களின் அடையாளங்கள், கலை கலாச்சரங்களை அழித்து தமிழ்களை நாட்டை விட்டு துரத்துவதன் மூலம் இனப்பரம்பலை ஏற்படுத்தி ஒரு நாடற்ற சிறிய சமூகமாக மாற்றுவது ஆகும்.

இந் நடவடிக்கைகள் கொழும்பு அரசாங்கத்துக்கு ஒரு வகையில் வெற்றியையே கொடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனையே தமிழ்நாடு, சர்வதேசத்தின் முன்னால் காட்டி பிரசாரம் செய்வதற்கான வெற்றிகரமான வழியாக இருக்கலாம்.

இதுவே ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் சர்வதேசத்தின் பார்வை திரும்புவதற்கு முக்கியான பணியாகும். இதற்குரிய முற்சியினை தமிழ்நாடும், அதன் தலைவர்களும் தொடர்ந்தும் எடுக்கவேண்டும்.

கொசோவாவில் உள்ள அல்பீனியர்களுக்கு எதிராக செர்பியர்கள் அடக்கு முறை மற்றும் இனவழிப்பில் ஈடுபட்டபோது அது சர்வதேசத்திற்கு வெளிப்படையாகவே தெரிந்தபடியால் அதனை யூரோப்பியர்கள் புறக்கணிக்காமல் உடனேயே நேற்ரோ (NATO)வை பாவித்து இனவழிப்பினை நிறுத்தி கொசோவே என்னும் நாட்டினை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

அதே போன்று தமிழ் நாடும் அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் தமிழர்களின் பிரச்சினையை மத்திய அரசுக்கும் மற்றும் உலகநாடுகளினதும் அதிக கவனத்திற்கு கொண்டுவர செய்ய வேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.