ஈழப் பெண்களின் வீரம் இன்னும் இன்னும் ஈரமாகவே எம் மண்ணில் வாழ்த்துகொண்டிருக்கிறது

0
513

sivagamiசிவகாமி அம்மையாரே வணக்கம்

புத்திகெட்டு பேதலித்து புலம்புகின்றீர்
விடியவிடிய எண்ணெய் தேய்த்து
ஒழுங்காக தலைகுளித்து வாரும்.
நானும் பெண் என்பதால்
முதலில் என் அனுதாபங்கள் உந்தனுக்கு …………………..

நடுவீதியில் அம்மணமாய் கிடக்கிறது
உன் வார்த்தைகள்
காறி உமிழ்கின்றோம்
காலால் மிதிக்கின்றோம்
கண்ணிருந்தும் குருடாக
காதிருந்தும் செவிடாக
உயிரிருந்தும் பிணமாய்….
வாழ்ந்து கொண்டிருக்கும்
உன்னை நீயே திரும்பிபார் ஒருமுறை!!!
உன் பெண்மை கூட
உன்னைவிட்டு தொலைந்து
நீண்ட நாளாகி இருக்கும் !!!

பெண்மையென்றால் மென்மையென்று
எட்டிநின்று சொன்னவர்ற்கு
சுதந்திர பறவையாக
சுடரேற்றி விட்டவர்கள்
பெண் புலிகள்!
அவர்களின் வீரம்
காற்றையும் விஞ்சியது .
கண்ணிமைக்கும் கணப்பொழுதில்
பகை வென்று வந்தவர்கள்
பல கோடி!!!
பதிலுண்டு எம்மிடத்தில்
பரிதாபம் உன் நிலமை
அறியாத பேதை நீ!!!

எந்த பெண்புலியுடனாவதும்
எப்போதாவது பேசியிருப்பாயா?
மூச்சுகாற்றின்
முகவரி அறிந்தாயா?
தொலைக்காட்சியிலாவது- இறுதி
ஊர்வலங்களை கண்டதுண்டா?
அவா்களின் அன்னையர்களை
கற்பனையிலாவது நினைத்ததுண்டா??

என்ன தகுதி உன்னிடம் உள்ளது
ஈழப்பெண்கள் பற்றி கதைப்பதற்கு ?????????????????????????????????

பொய்களை பொறுக்கிக்கொண்டு
எதற்காகவும் உருமாறி
வாழ்வின் பிடிமானங்களைத் தொலைத்து
பிறர் காலைஉடைத்து
உனது ஊன்றுகோலாக்கி
வாய்சொல்லில் வீரம் பேசும்
உன்னை போல் போலி்ப்பெண்கள் அல்ல…
ஈழப்பெண்கள்

சொந்த மண்விடுதலைக்காய்
வீறு கொண்டு எழுந்தவர்கள்
உயிர்களை இழந்தோம்
உடமைகள் இழந்தோம்
உடல் உறுப்பையும் இழந்தோம் -என்றும்
உரிமையை இழக்க மாட்டோம்.

சத்தங்கள் ஓய்ந்தன…
இரத்தங்கள் காய்ந்தன….
ஈழப் பெண்களின்
வீரம் இன்னும் இன்னும் ஈரமாகவே
எம் மண்ணில் வாழ்த்துகொண்டிருக்கிறது.
ஒராயிரம் நம்பிக்கையின்
காத்திருப்புகளுடன் ……………

தாயகத்திலிருந்து கானவி.