உலகத் தமிழர்கள் செய்ய வேண்டிய பணி! – யாதவன் நந்தகுமாரன்

0
672

இலங்கை அரசாங்கம் 2014 மார்ச் ஜெனிவாத் தீர்மானத்தின் பின்னர் 16 தமிழ் அமைப்புக்களையும் அவற்றோடு தொடர்புடைய 424 தமிழர்களையும் விடுதலைப்புலிகளுக்கு உயிர் கொடுப்பதாகக் கூறி தடைசெய்வதாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையை 21.03.2014 இல் வெளியிட்டிருந்தது. இதன் மூலம் அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்துக்காக நியாயம் வேண்டிக் குரல் கொடுத்துவரும் உலகத் தமிழ் அமைப்புக்களையும் அதனோடு தொடர்புடையவர்களையும் பயங்கரவாதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்விடத்தில் தமிழர்களின் சுயநிருணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் எதற்காகப் பயங்கரவாதமாக்கப்பட்டது என்பது குறித்து சிந்தித்தல் தகும். எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழர் எவருமே பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவர். தாயகத்தல் உள்ள அவர்களது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு படையினருக்கும் சிங்களவர்களுக்கும் வழங்கப்படும். வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 424 பேருக்கும் இதுவே நிகழ இருக்கிறது. ஈழத்திலிருந்து இவர்களோடு தொடர்பு கொள்பவர்கள் தடயம் இல்லாமல் அழிக்கப்படுவர்; கிணற்றில் வீழ்ந்து இறப்பர்; தூ க்கில் தொங்கி தற்தொலை செய்வர்.

இந்நிலையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் 2009 முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்புடன் சிங்களமயமாக்கல் துரிதகதியில் தொடரும் இன்றைய நிலையிலும் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் தமிழர் நலன் என்ற விடயத்தை முன்னிட்டு ஒன்றிணைக்க முடியாதுள்ளமை பேரவலமே.

Diaspora65
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 2006 – 2009 கால போர்க் குற்றவாளிகளை இனஅழிப்பில் நேரடியாகப் பங்கு கொண்ட இராணுவ அதிகாரிகளை மட்டும் பட்டியலிட்டு ஐ.நா.விற்கு அனுப்பிவிட்டு திருப்திப்பட்டுள்ளது.

முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கட்டளை அதிகாரிகளைவிட நேரடியாகக் குற்றமிமைத்த சிப்பாய்களின் பெயர்களைக் கூட இன்னும் தமிழர்களால் திரட்ட முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க போர்க்குற்றத்திலும் இனஅழிப்பிலும் பங்குகொண்டவர்கள் இந்த இராணுவ அதிகாரிகள் மட்டுமா என்பது குறித்து தமிழர்கள் சிந்திக்க முடியாமற் போனமை துயரமானது?

அரசுத் தலைவர்கள்‚ அமைச்சர்கள் ‚ பாதுகாப்பு செயலர்‚ அரசாங்க அதிகாரிகள்‚ ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் ‚ மருத்துவர்கள் ‚ புள்ளிவிபரங்களை மறைத்தோர் முதலானோர் 1949 முதல் இன்று 2014 வரை எப்படி தமிழின அழிப்புக்கு உடந்தையாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். இவர்கள் மீது இனஅழிப்பில் நேரடியாக பங்கெடுத்தமை‚ சதித்திட்டம் தீட்டியமை‚ குற்றம் இழைத்தவர்களைப் பாதுகாத்தமை முதலானவற்றை வலியுறுத்தி பயணத்தடை‚ சொத்துக்களை முடக்குதல்‚ குடியுரிமையை இரத்துச் செய்தல்‚ சருவதேச நீதிமன்றில் வழக்குத் தொடருதல்‚ தமிழ் இனப்படுகொலைக்கான சுயாதீன நீதிமன்றை அமைத்து வழக்குப் பதிவு செய்தல் போன்ற விடயங்களை வலியுறுத்திச் செயற்படவும் தொடர்ச்சியாகப் போராடவும் உலகத் தமிழினம் முன்வர வேண்டும்!

உலகம் முழுவதும் சுதந்திரமாக உலாவரும் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி!. இவரது ஆட்சிக் காலத்திலேயே 600 தமிழ் இளைஞர் யுவதிகள் கொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். 1996 இல் யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த போது குடாநாட்டில் காணமற்போன 600 இற்கும் மேற்பட்டவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாக கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் அரசதரப்பு சாட்சியாக மாறி சாட்சியமளித்தான். சாட்சியமளித்து சில மாதங்களின் பின்னர் புதைகுழியை அடையாளம் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட போது தான் தனித்து சடலங்களைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டினான். கிருசாந்தி‚ கிருசாந்தியின் சகோதரன்‚ தாய் மற்றும் அயலவர் ஆகியோரின் சடலங்கள் சோமரத்ன ராஜபக்ச அடையாளம் காட்டிய இடத்தில் அகழ்ந்த போது வெளிப்பட்டது.

ஆனால் செம்மணிப் புதைகுழியில் இருந்த ஏனைய சடலங்கள் யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி நள்ளிரவில் வாகன வெளிச்சங்கள் மூலம் அகற்றப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டது. அன்று முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த சந்திரிகாவின் இனஅழிப்பு மற்றம் அதன் தடயத்தை அழித்தமை குறித்து நியாயம் வேண்டி தமிழர்கள் உலக மானிடத்தை அணுகவில்லை. பின்னர் பிந்தனுவெவில் 28 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கிராமவாசிகளால் படுகொலை செய்யப்பட்ட போது சந்திரிகாவின் உண்மை முகம் – இனஅழிப்புக்கு உடந்தையாக இருந்தமை மீண்டும் வெளிப்பட்டது. பிந்தனுவெவ பற்றி ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்ட 187 பக்க அறிக்கை இலங்கையின் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி யெழுப்பி, சனாதிபதி சந்திரிகா விசாரணையைத் தடுத்தமையைப் பற்றி தெளிவுபடுத்தி, தமிழர்களுக்கு இலங்கையரசின் உள்நாட்டு விசாரணை மூலம் நீதிகிடைக்காது என்பதை உறுதிசெய்தது. இதன் மூலம் இலங்கையின் சிங்கள நீதித்துறை தமிழின அழிப்புக்கு உடந்தையாக இருந்தமையை அறிந்து கொள்ளலாம்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க‚ மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், மறைந்த சனாதிபதிகள், 1956‚ 1977‚ 1981, 1983 முதலான காலப்பகுதியில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனஅழிப்புக் கலவரங்களுக்கு காரணமாக இருந்த அரசுத் தலைவர்கள்‚ அமைச்சர்கள்‚ நிருவாக அதிகாரிகள்‚ பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள்‚ நீதி வழங்க மறுத்த நீதிபதிகள் மற்றும் 2006 – 2009 காலப்பகுதில் – போரின் இறுதிக்கட்டத்தில் ஆட்சியிலிருந்தவர்கள்‚ சுகாதார அமைச்சராக இருந்த நிமால் சிறிபால டி சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் ஹகந்த லியனகே, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் முதலான பலர் இனஅழிப்பில் நேரடியாகப் பங்குகொண்டுள்ளமை நிரூபிக்கக் கூடியதே.

போரின் ஒரு கட்டத்தில் 2009 சனவரி முதல் 2009 ஏப்பிரல் வரையான காலப் பகுதியில் குறிப்பிட்ட பகுதியால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப் பட்டார்கள். இவர்களுக்கு எல் ஆர் ரி எனப்படும் நிரந்தர கருத்தடை செய்யப்பட்டது. இதிலே சம்மந்தப்பட்ட மருத்துவர்கள், சிங்கள அரச அதிகாரிகள் மற்றும் கட்டளையிட்டவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய இனஅழிப்புக் குற்றவாளிகளே. இதில் பாதிக்கப்பட்டவர்கள்‚ இது பற்றித் தெரிந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

killing
யூதர்கள் தமக்கான பகிரங்க நீதிமன்றை அமைத்து யூத இன அழிப்புல் பங்கெடுத்த மருத்துவர்கள்‚ இராணுவ அதிகாரிகளுக்கு 25 வருடங்களுக்குப் பின்னரும் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். யூதர்கள் 1948 இல் இஸ்ரேல் என்ற தனியரசை உருவாக்கியிருந்தமை இதற்கு வாய்ப்பாக அமைந்தது. தமிழர்களிடம் அரசு தான் இல்லாவிடினும் அமைப்பு சார்ந்து பலத்துடன் இயங்க முடியும். பிறிமனில் நடந்த விசாரணையில் இலங்கையில் தமிழின அழிப்பு நடந்ததையும் தொடர்வதையும் ஏற்றுக் கொண்டு 13 நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். இனஅழிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு பயணத்தடை விதிக்கக் கோரியும் கைதுசெய்து விசாரணை நடத்தவும் கோரி உலகத் தமிழர்கள் தொடர்ச்சியாகப் போராடவேண்டும்.

மேலே குறிப்பிட்டவர்களை இன்ன இன்ன குற்றம் இழைத்தார்கள் என்று காரணத்துடன் பட்டியலிடக் கூட உலகத் தமிழினம் ஒன்று படாதா? குறைந்தது 1000 தமிழினஅழிப்புக் குற்றவாளிகளை, இனஅழிப்பிற்கு உடந்தையாக இருந்தவர்களை, சதித்திட்டம் தீட்டியவர்களைப் பட்டியலிட முடியும்.

இன அழிப்புக்கு உடந்தையாக இருந்த இந்திய‚ ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளை (வைத்தியசாலை அமைவிடத்தின் GPS ஐ படையினருக்கு வழங்கி வைத்தியசாலைகள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்தவர்கள்) அவர்களது குற்றத்தைப் பட்டியற் படுத்தி அவர்களை தண்டிக்காவிடினும் அவர்களைப் பதவியில் சருவதேச அரங்கில் இருந்து அகற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முன்வருமா?

தமிழன அழிப்பின் உச்சமாக 2006 – 2009 காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் மக்களுக்கெதிராகப் பாவித்து பொதுமக்களைப் பாதுகாப்பு வலயங்களுக்குச் செல்லுமாறு அறிவித்து பாதுகாப்பு வலயங்கள்‚ உணவுக்குக்காக – நீருக்காக பொதுமக்கள் ஒன்று கூடிய இடங்கள் மற்றும் வைத்திய சாலைகள் மீது விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகளைவீசியும் மழையென எறிகணை வீசியும் இன அழிப்புச் செய்தவர்களையும் முள்ளிவாய்க்கால் படுகொலையைப் புரிந்து சரணடைந்தவர்களைக் கொல்லக் கட்டளையிட்டவர்களான ராஜபக்சாக்கள் மற்றும் சதியாலோசனை வழங்கியவர்களையும் தமிழர்கள் தமக்கான சுயாதீன நீதிமன்றை நிறுவி நீதியின் முன்னிறுத்தி தண்டித்தல் வேண்டும். இதுவே உலகில் இந்தியாவில் இது போன்ற இன அழிப்புக்கள் நடைபெறுவதைத் தடுக்கும்;

* (THE BINDUNUWEWA MASSACRE IN SRI LANKA – A Cry for Justice)

“The Bindunuwewa massacre of 25 October 2000 is the only massacre of the Tamil minorities in Sri Lanka which exhausted all the judicial processes available in Sri Lanka. It went upto the level of the Supreme Court. The fact that the Supreme Court failed to prosecute a single person for the custodial massacre of 28 inmates and serious injury of 14 others is a shame on any civilized society. The judgement of the Supreme Court of 21 May 2005 acquitting four accused of the Bindunewa massacre – civilians M.A. Sammy, D.M.S. Dissanayake, R.M. Premananda and policeman, S.J. Karunasena, who were earlier convicted by the High Court is most likely to be remembered as the best example of judicial and administrative biases against the Tamil minorities.

How did the Bindunuwewa massacre exhaust all domestic procedures so quickly? The trial of Kumarapuram massacre of 11 February 1996 in which 25 ethnic Tamils including women and small children were massacred by the Sri Lankan army personnel has been continuing at snail pace. The last hearing at the Trincomalee High Court took place on 4 June 2005 and the next hearing is slated for 8 November 2005. One of the eight accused soldiers already died and the rest have been released on bail. All material evidence, including weapons allegedly used in the killing of Tamil civilians in the Kumarapuram massacre, were destroyed when the office of the Government Analyst in Colombo was gutted by fire in 2004.”

“The evidence has been destroyed systematically. During the hearing, the Supreme Court judges gave more importance to the testimonies of the Assistant Superintendent of Police Dayaratna than the testimonies of the victims who were ethnic Tamils. The Supreme Court went to the extent of putting the blame of the massacre on the detainees inciting violence from the peaceful Satyagrahies who were ethnic Sinhalese. Yet surprisingly, not a single so called peaceful Satyagrahi could be arrested despite the presence of 60 fully armed police personnel.

In effect, there was not a single witness to the massacre of the detainees. The Supreme Court even justified the removal of the dead bodies of the detainees – an important piece of evidence – by the police. None of the senior police officers has been indicted. Then Headequarters Inspectr Jayantha Seneviratne is now the Senior Superintendent of Police of of Traffic at Fort Police Station, a significant promotion by all accounts considering that he was indicted both by inquiry of National Human Rights Commission of Sri Lanka and President Commission of Inquiry headed by Justice PHK Kulatilaka.

The Presidential Commission of Inquiry was mandated to investigate extraneous issues, not prosecute the culprits. Therefore, it was clear that President Kumaratunga herself was not interested to provide justice. Not surprisingly, the Sri Lankan government has failed to make the report of the Presidential Commission of Inquiry public. Asian Centre for Human Rights which obtained a copy of the report of the Presidential Commission of Inquiry decided to make it public with this report. The release of the report of the Presidential Commission of Inquiry by the NGOs in Sri Lanka may attract the provisions of the Official Secrets Act in that country.”

Note: See the 187 page full text here: http://tamilnation.co/indictment/genocide95/bindunuwewa.pdf