உலகம் முழுவதும் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்

0
711

அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும் : பழ.நெடுமாறன்
nedu-hero
உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.

தஞ்சையில் அமையப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறப்புற மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது காலை அரங்க நிகழ்வுகளில் முனைவர் நடராஜன்,சீமான்,பழ.நெடுமாறன் உள்ளிட்ட முதன்மையானவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்கள்.

அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது மாவீரர் தின நிகழ்வில் பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர். விழாவில் நெடுமாறன் கருத்து தெரிவிக்கும் போது முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.

அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்

france_maveerar_nal_20132
தமிழீழ தேசிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு பிரான்சு வாழ் மக்களால் நவம்பர் 27ம் நாள் லெப். கேணல் நாதன். கப்டன். கஐன், கேணல் பரிதி அவர்கள் துயில்கின்ற கல்லறையில் சரியாக நண்பகல் 12.35 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதே சமநேரத்தில் லூ புசே என்னும் இடத்தில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர். திரு. யோசேப் அவர்கள் ஏற்றி 12.40 தேசியக்கொடியேற்றல் இடம் பெற்றது தேசியக்கொடியினை பிரான்சின: கிளைப்பொறுப்பாளர் திரு. சி. பார்த்திபன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
france_maveerar_nal_20133
அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரையும், தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சரியாக 13.35 மணிக்கு மணியோசை ஒலிக்க மாவீரர்களுக்கான அகவணக்கம் இடம் பெற்றன. அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது.
france_maveerar_nal_20138
ஈகைச்சுடரின் முதற்சுடரினை மாவீரர் அன்பு அவர்களின் சகோதர் ஏற்றிவைக்க சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் ,ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம் பெற்றது தாயகவிடுதலைப்போரில் முதற்களப்பலியான மாவீரர் சங்கர் அவர்களின் கல்லறைக்கு பிரிகேடியர். சு.ப. தமிழ்ச் செல்வனின் சிறிய தாயாரும் மாவீரின் தாயார் மலர்மாலை அணிவித்தார். மாவீரர் பெற்றோர், சகோதரர்களுக்கு என விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அமரவைக்கப்பட்டனர்.

நோர்வேயில் மிக எழுச்சியோடு நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு
norway_maveerar_nal_20138
நோர்வேயில் ஒஸ்லோ ஓலசுண்ட் பேர்கன் ஸ்தவங்கர் துரண்கைம் மோல்டே ஆகிய நகரங்களில் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. ஒஸ்லோவில் 27.11.2013 மதியம் 12:45மணிக்கு கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்களோடு மிக எழுச்சியோடு நடைபெற்றது.

தமிழ்மக்களுக்காக தமிழீழத்திற்காக தமிழ்மொழிக்காக தங்களின் இளைய உயிர்களை தியாகம் தந்த சீலர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் கல்லறைகளுக்கு கார்திகை பூக்களால் மரியாதை செய்து மாவீரர்களின் எண்ணங்களை ஈடேற்ற சுடர்வணக்கம் ஏற்றி மக்கள் சத்தியம் செய்துகொண்டனர். 2008 ஆண்டு மாவீரர்நாள உரையில் தேசியத்தலைவரின் ஆணைக்கு ஏற்ப முழுக்க முழக்க இளையவர்கள் முன்னின்று மாவீரர்நாளை மிகச்சிறப்பாக நடாத்தியுள்ளார்கள்.
norway_maveerar_nal_20133
இதேவேளை மாவீரர்நாள் கலைநிகழ்சிகளின் மகுடமாக இருந்தவர்கள் இளையவர்கள் மிகவும் எழுச்சியான நடனங்களை வழங்கி உணர்வையும் உறுதியையும் தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எமது தேசப்புதல்வர்கள் கருவறையில் கருத்தரிக்கும் நாளில் விடுதலை;போரை நகர்த்தி செல்வதர்க்கு பக்க பலமாக இருந்த மக்களுக்கும் இந்நாளை சிறப்புற நடாத்துவதர்கு நிகழ்சிகளை தந்துதவிய றொம்மன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் தொய்யன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் றம்மன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் நர்த்தனகாவிய நடனப்பள்ளி தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் மற்றும் எல்லாவகையிலும் விடுதலைக்கு வடம் பிடித்த அனைவருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

0000
mullai-hero
மாவீரர் நாள் – தமிழீழம் 2013
முல்லைத்தீவில் இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள்

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பண்ருட்டியில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் மாவீரர்களுக்கு மாவீரர் தின பாடல் ஒலிக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் ஈகத்தினை நெஞ்சில் உறவுகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசிய செய்தித்தொடர்பாளர் வெற்றிவேலன் மாவீரர் தினத்தை விரைவில் தடையின்றி நடத்தவேண்டிய காலத்தை உருவாக்கவேண்டும் என்றார்.
kadalur-1
சிறப்புரையாற்றிய கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மாவீரர் தினத்தை பற்றியும், ஈழத்தின் இன்றைய நிலையை பற்றியும், தமிழகத்தின் அரசியல் நிலை பற்றியும், நாம் இங்கே அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் எழுச்சியுடன் உரையாற்றினார். நிகழ்வில் கடலூர் கார்த்திக், செங்கோலன், பிரசன்னா பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் பாட்சா, பண்ருட்டி நகர இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் விநோத்குமார், பண்ருட்டி 12வது வார்டு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், அண்ணாகிராமம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வீரகண்டமணி, உதய.கணேஷ், வீரக்குமார் உட்பட திரளான நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.

000000

தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் தின பொதுகூட்டம் சென்னை கீழ் அயனம்பாக்கம் மூவர் சிலை அருகில் கட்சியின் பொதுச்செயலாளர் க.அதியமான் தலைமையில் நடைபெற்றது.
ponnamaravathy-vilage
அயனம்பாக்கம் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தமிழினத்திர்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒளி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இம்மானுவேல் அழகிரி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமுக பொதுச்செயலாளர் க அதியமான் எழுகதிர் ஆசிரியர் அருகோ,வழக்கறிஞர் குப்பன் தமிழர் பண்பாட்டு மைய தலைவர் ராஜ்குமார் பழனிச்சாமி தமிழர் விடுதலை இயக்க சொள சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மறைந்த மாவீரர்களின் தியாகங்கள் பற்றியும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது பற்றியும் பேசினர். இதில் மாவட்ட செயலாளர் சண்முகம், எஃப்ரிம் சுப்பரமணி அயப்பாக்கம் சண்முகம் பாலா ரவி சீனிவாசன் கார்திக் சுரேஸ் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

000000000

பொன்னமராவதி ஒன்றியம், செம்மலாப்பட்டி கிராமத்தில் மாவீரர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு-2013!

டென்மார்க்கில் மாவீரர்நாள் மிகவும் உணர்புபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்நாள் நிகழ்வானது பொதுச்சுடறேற்றலுடன் ஆரம்பமானது.அதன் பின்பு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் அகவணக்கம் நடைபெற்றது.
denmark-1
தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் விளக்கேற்றும் பொழுது மாவீரர்துயிலுமில்லல் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதன்பின்பு பொதுமக்களால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரர்களின் எழுச்சிகானங்களோடு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் தியாகத்தை வீரத்தை உணர்த்தும் பாடலுக்கான எழுச்சி நடனங்கள் கவிதைகள் நாடகங்கள் சிறப்புப்பேச்சுகள் இடம்பெற்றன.
denmark-5
உலகறிந்த எம்தலைவர் உரைப்பதையே உறுதி மொழியென ஏற்று உறுதிபூண்டு கொள்கை மாறாமல் உயிரை விட உரிமை மேலென நேசித்த உத்தமர்கள் மாவீர்கள் அம் மாவீர்களின் கனவு நிறைவேறும் வரை ஓயாது செயற்படுவோமென இளையோர்களால் உறுதி கூறப்பட்டது.நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் மாவீரர் நாள் நிகழ்வு நிறைவு பெற்றுது.

கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள்
toron-2
மாவீரர் நாள் தமிழீழ விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள்ஆகும். இம்மாவீரர்கள் எம் வரலாற்றின் அழியா நினைவுச் சின்னங்கள். எம்மினம் வாழ தம் வாழ்வை தியாகம் செய்த தியாச்சுடர்கள்.இவர்களின் உன்னத தியாகத்தை போற்ற எமக்கு கிடைத்த ஒரு உன்னத நாளே இம் மாவீரர் நாள். இம்மாவீரர் நாள் வழமை போல்இம்முறையும் கனடாவில் நடைபெற்றுது.

00000
dubai
மாவீரர் தின நிகழ்வுகள் துபாயிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.