உலக தமிழர் எழுச்சி போராட்டம் ஆரம்பம்! இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திடு: வைகோ முழக்கம்.

0
586

vaiko-09தமிழகத்தின் பல பாகங்களிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இன்று இடம்பெற்ற தமிழர் எழுச்சிப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அலையெனத் திரண்டனர்.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழின ஆர்வலர்கள், மாணவர்கள், கழகத் தோழர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திடு!

ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்திடு!

ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம் அல்ல, இனப்படுகொலை

தமிழ் இனப்படுகொலை இன்றும் தொடர்கின்றது – மக்கள் தீர்ப்பாயம்

ஈழம் ஒன்றே ஒரே தீர்வு!

இந்தியாவின் கைகளில் ஈழத்தமிழனின் இரத்தம்

சர்வதேசமே! உன் பாவத்தை இனப்படுகொலை விசாரணை, பொதுவாக்கெடுப்பு மூலம் கழுவிடு!

ஈழம் என்னும் நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! என்று முழக்கங்களை எழுப்பி,

ஈழத் தமிழ் இனத்தை பூண்டோடு கருவறுக்கத் திட்டமிட்டுக் கோரமான இனப்படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாத கொடியோன் ராஜபக்ச அரசையும், அவன் கூட்டத்தையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றுக! தண்டனை தருக! அதற்கு சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணையை அனைத்துலகம் நடத்துக! சுதந்திரத் தமிழ் ஈழம் மலர தமிழ் ஈழத்திலும், தரணிவாழ் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்துக! என மனித குலத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுகிற நாள்தான் பிப்ரவரி 26 ஆகும் என்று வைகோ தனது உரையில் குறிப்பிட்டார்.