கிழக்கு உக்ரேன் பகுதியில் மலேசியா நாட்டு விமானம் ஏவுகணைமூலம் சுட்டுவீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் தனது முகநூலில் எழுதியிருந்த பத்தியை ஈழம்ஈநியூஸ் தனது வாசகர்களுக்கு தமிழில் இங்கு தருகின்றது. கமரன் அவர்கள் எவ்வளவு சிறந்த அரசியல்வாதி என்பதை இந்த பத்தியை வாசிக்கும் போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

நான் இளைஞனாக இருந்தபோது 1988 ஆம் ஆண்டு லொக்கபியில் இடம்பெற்ற பயங்கரத்தை போன்றதே மலேசிய விமானம் சிதறிக்கிடந்த காட்சிகள், 298 பயணிகளும், அவர்களின் பொருட்களும் கிழக்கு உக்ரேன் பகுதியில் உள்ள கிரபோவோ கிராமத்தின் கோதுமை வயல்களில் சிதறிக்கிடந்தன.

buk
எமது நாட்டைச் சேர்ந்த 10 பேரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை இந்த வாரத்தின் இறுதிநாட்களில் நாம் நினைவுகூரவுள்ளோம். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 பேர் இறந்துள்ளனர். அவர்களில் சிலர் தமது குடும்ப உறுப்பினர்களை முன்னர் காணாமல்போன எம்எச்-370 விமானத்திலும் இழந்திருந்தனர். மலேசியாவைச் சேர்ந்த 43 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 192 பேரும் இதில் கொல்லப்பட்டுள்ளனர். எமது கூட்டணிக்கும், நண்பர்களுக்கும் இது மிகப்பெரும் இழப்பு. அவர்களுடன் நாம் தோளோடு தோளாக நின்றவர்கள்.

அனுதாபத்துடன், கோபமும் வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கோபம் வருகின்றது. மொஸ்கோவினால் தடுத்துநிறுத்தக்கூடிய இந்த மோதலை அது நிறுத்தாது, அதனை மொஸ்கோ ஊக்குவிப்பது குறித்து கோபம் வருகின்றது. மேற்குலக நாடுகளில் சிலவும் இந்த பிரச்சனைக்கான தீர்வைக்காண்பதற்கு பதிலாக அனுதாபத்தை தெரிவித்து செல்வது தொடர்;பிலும் கோபம் வருகின்றது.

கிழக்கு உக்ரேனில் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் திரட்டப்படவேண்டும். ஆதாரங்கள் அதிகளவில் திரண்டுவருகின்றதானது ஒரு தெளிவான முடிவை தெரிவிக்கின்றது. விமானம் நாடுவானில் வைத்து தரையில் இருந்து வான்நோக்கி பாயும் ஏவுகணைமூலமே தாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தீவிரவாதிகளின் பகுதியில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

இது தான் நடந்தது எனில் ஒன்று மட்டும் தெளிவானது, ஒரு இறைமையுள்ள நாட்டை ரஸ்யா சீர்குலைக்க முற்பட்டுள்ளது, அதன் ஒருமைப்பாட்டையும், இறைமையையும் அது மீறுகின்றது. இதற்காகவே ஆயுதக்குழுக்களுக்கு அது பயிற்சியையும், ஆயுதங்களையும் வழங்குகின்றது.

இந்த பின்னடைவை நாம் செயற்திறன் மிக்கதாக மாற்றவேண்டும். குற்றம் மேற்கொண்டவர்களை நீதிக்கு முன் நிறுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்யுகொள்ளவேண்டும். ஆனால் நாம் நீதியையும் தாண்டி மேற்செல்ல வேண்டும்.

சிறிய நாடுகள் மீது பெரிய நாடுகள் அழுத்தங்களை மேற்கொள்ளும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் நாம் நினைவுபடுத்தவேண்டியதில்லை. சர்வாதிகளை அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் நாம் நினைவுபடுத்தவேண்டியதில்லை. ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் ஏற்பட்ட பாடங்களை நாம் நினைவுபடுத்தவேண்டியதில்லை.

david-cameron-300x225
நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். தற்போது கிழக்கு உக்ரேனில் ஏற்பட்டுள்ள நிலை ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுவதற்கு பல காலம் செல்லாது. பாணியாற்றுதில் உள்ள தடங்கல்களை கடந்த புதன்கிழமை மாலை ஐரோப்பிய சபையின் மேசையில் அமர்ந்திருந்தபோது நான் அவதானித்தேன்.

பிரித்தானியாவுடன் இணைந்து சில நாடுகள் முன்னனியில் உள்ளன. நீண்டகாலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த செயற்பாடுகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றோம். ரஸ்யாவுடன் நேரிடையாக புவியியல் தொடர்பில் உள்ள நாடுகளுக்கு என்ன நிகழும் என்ற அனுபவங்கள் உள்ளன. அவர்களின் சுதந்திரமும், இறையான்மையும் விலையாகலாம். அவர்கள் அதனை மறக்கக்கூடாது. சிலர் இதனை சாமளிக்கக்கூடிய பிரச்சனையாகவே கருதுகின்றனர்.

மென்மையான சொற்களும், தொடர்பாடல்களும் ஒரு உண்மையான நடவடிக்கைக்கு மாற்றீடாகாது. ஆயுதங்களும், ஆயுதம்தரித்தவர்களும் ராஸ்யாவினதும், கிழக்கு உக்கிரேனினதும் எல்லைகளை கடந்துகொண்டு இருக்கின்றனர். அதனை அவர்கள் நிறுத்தவேண்டும்.

சில அனைத்துலக பிரச்சனைகள் தீர்க்கப்படமுடியாதவை.. ஆனால் இது அதுபோல ஒன்றல்ல. ஆயுதக்ககுழுக்களுக்கான உதவியை ரஸ்யாவின் அரச தலைவர் விளடிமீர் பூட்டீன் நிறுத்தினால், சட்டத்தை நிலைநிறுத்த உக்ரேனை அனுமதித்தால் அங்கு பிரச்சனை தீர்ந்துவிடும். ரஸ்யா மொழி பேசும் மக்களின் பாதுபாப்பை உறுதிப்படுத்துவதும் முக்கியமானதே. இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். ஆனால் பிரிவினைவாதிகளுக்கான உதவிகளை ரஸ்யா நிறுத்தவேண்டும்.

உக்ரேன் தொடர்பான தனது நிலைப்பாட்டை ரஸ்யா மாற்றவில்லை எனில், ஐரோப்பாவும், மேற்குலகமும் ரஸ்யா தொடர்பான தமது அடிப்படை கோட்பாடுகளை மாற்றவேண்டும். இது படைநடவடிக்கை தொடர்பான கருத்தல்ல, ஆனால் எமது சக்தியையும், வளங்களையும், ஆற்றலையும் வெளிப்படுத்தவேண்டிய தருணம்.
mh-17-a
எமது பொருளாதாரம் மிகவும் பலமாக உள்ளது. அதன் வளர்ச்சி உறுதியானது. ஆனால் ரஸ்யாவுக்கு எமது தேவைகளை விட எமக்கு ரஸ்யாவின் தேவை முக்கியமானது என சில சமயங்களில் எண்ணுகின்றோம்.

ரஸ்யாவுடனான மேதல்களை நாம் விரும்பவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரம் மழுங்கிப்போவதை அனுமதிக்க முடியாது.
எனவே என்ன நடக்கவேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.

முதலாவதாக விமானம் வீழ்ந்து நொருங்கிய பகுதிக்கு செல்வதற்கான உடனடி அனுமதி தேவை. அந்த பகுதி பாதுகாக்கப்படவேண்டும். சடலங்கள் அடையாளம் காணப்படவேண்டும். அவை உரிய மரியாதையுடன் உறவினர்களிடம் கையளிக்கப்படவேண்டும். போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகள் தேவை. இது தொடர்பில் ரஸ்யாவிடம் பல தகவல்கள் உள்ளன, அவை முழுமையாக பகிரப்படவேண்டும்.

இரண்டாவதாக, ஆயுதக்குழுக்களுக்கு வழங்கும் பயிற்சியையும், ஆயுதங்களையும் ரஸ்யா நிறுத்தவேண்டும். அவர்கள் உக்ரேன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

இறுதியாக, உக்ரேன் – ஐரோப்பிய ஒன்றியம், உக்ரேன் – ரஸ்யா மற்றும் ரஸ்யா – ஐரோப்பிய ஒன்றியம் என நாம் ஒரு நீண்டகால நட்பை ஏற்படுத்தவேண்டும். நேட்டோவையும், மேற்குலகத்தையும் விஸ்தரிக்கவேண்டும்.

நடைபெற்ற அனர்த்தத்திற்கு ரஸ்யா என்ன பதிலை தரப்போகின்றது என்பதில் தான், இந்த உறவு எத்தகையது என்பது தங்கியுள்ளது. பயங்கர நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான பாதையை ரஸ்யா இந்த தருணத்தில் பயன்படுத்தலாம். ரஸ்யா அதனை மேற்கொள்ளும் என நான் நம்புகின்றேன். அவ்வாறு நடக்காவிட்டால் நாம் தகுந்த பதிலை வழங்கவேண்டும்.

25 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் நேட்டோ மாநாடு இடம்பெற்றிருந்தது. அந்த மாநாடு பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்ததுடன், ரஸ்யாவையும் உலக அரங்கிற்கு கொண்டுவந்திருந்தது.

எதிர்வரும் ஆறு வாரங்களில் மீண்டும் நேட்டோ மாநாடு பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ரஸ்யாவுடனான உறவு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. எந்தப் பதையை தெரிவுசெய்யவேண்டும் என்பது ரஸ்யாவின் கைகளிலேயே உள்ளது.

நன்றி: முகநூல் – டேவிட் கமரன், பிரித்தானியா பிரதமர்.

தமிழாக்கம்: ஈழம்ஈநியூஸ்.