ஐக்கிய நாடுகளின் விதிகளின் படி இலங்கையில் நடப்பது ஒரு இனவழிப்பே

0
626

Nivi-pille_11-04-27இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நவநீதம் பிள்ளை அவர்களிடம் எவற்றினை அங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதனை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதத்தில் தயவாக கேட்டுக்கொள்கின்றார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர், யுத்தம் நடைபெற்ற இடத்தினை பார்வை இடுவதற்கு பல தடவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச்சபையின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை அவர்கள் முயற்சி மேற்கொண்ட போதும் அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. ஏனென்றால் போர் நடைபெற்ற பகுதிக்கு அவர் சென்றால் அங்கு நடைபெற்ற போரின் அவலங்கள் வெளிவந்துவிடும், இதனால் இன அழிப்பு நடைபெற்றது உலகிற்கு தெரிந்து விடும் என்று இலங்கை அரசாங்கம் பயந்து இருந்து.

இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் வன்முறைகள், படுகொலைகள். இவற்றுக்கான சாட்சியங்கள், மற்றும் சான்றுகள் அழிக்கப்படுவதற்கும் மறைக்கப்பட்வதற்கும் நான்கு ஆண்டுகள் இலங்கை அரசுக்கு தேவைப்பட்டது. இதற்ககாவே நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கை வருவதற்கு அனுமதி கொடுக்காமல் இருந்தார்கள். தற்போது போரின் வடுக்கள், சாட்சிகள் மற்றும் சான்றுகளை அழித்து விட்டார்கள். தற்போது அங்கு சென்றால் யுத்தம் நடந்த இடம் என்பதற்குரிய எந்த விதமான தடையங்களும் இன்றி போய் விட்டது. அவ் இடங்கள் தற்போது சுற்றுலா பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. அதுவும் சிங்களவர்களுக்கு மட்டுமே அப்பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் கூட தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நவநீதம் பிள்ளை அவர்கள் அப்பகுதிக்கு சென்று பார்வையிடுவதை விட போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும், அவர்களே இந்த யுத்தத்தின் நேரடி சாட்சிகள். போரினால் விதவையாக்கப்பட்டோர், அனாதைகள் ஆக்கப்பட்டோர், சிதைக்கப்பட்டோர் போன்றோரைச் சந்தித்து போரின் சாட்சியங்களை பெறவேண்டும் எனவும் அவருக்கு எழுதிய கடிதத்தில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனவே இலங்கை அரசாங்கத்தினால் சாட்சியங்கள் அழிக்கபட்டு மூடி மறைக்கபட்டுள்ளவைகளை வெளிக்கொண்டு வருவதற்கு கீழ் குறிப்பிட்டுள்ள முக்கிய விடையங்களை கவனத்தல் வைத்து பணியாற்றுவது முக்கியமானது என அக்கடிதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை அவர்களுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

1. இறுதிப் போரின் மூலம் விதவையாக்கப்பட்ட 90,000 விதவைகளுடனும் நேரடியாகப்பேசி எவ்வாறு அவர்களின் கணவன்மார்கள் காணாமல் போனார்கள் அல்லது கொல்லபட்டனர் என்பதனையும் எப்படி விதவைகள் அரச படை மற்றும் அதிகாரிகளினால் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்பதனை வாக்கு மூலம் பெறவேண்டும்.

2. இறுதி யுத்தத்தின் போது பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் சிறுவர்களிடம் சென்று எப்படி அனாதைகள் ஆக்கப்பட்டீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

3. இறுதி யுத்தத்தின் போது யுத்ததில் காயப்பட்டோர், அங்கவீனமாக்கப்பட்டோர் போன்றோரிடம் சென்று எப்படி காயப்படுத்தப்பட்டனர் என விசாரணகள் மேற்கொள்ளப்பட்டுவதோடு அவர்களிடம், பாதுகாப்பு படையினரால் போர் தவிர்ப்பு வலையம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் எப்படி அரச படையினரால் ஆட்டிலறி மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

4. இறுதி யுத்தத்தின் கொல்லப்பட்ட மக்களின் உற்றார் உறவனர்களிடம் அவர்களின் உறவுகள் எப்படி கொல்லப்பட்டனர் என்பதனை கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

5. வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக இடங்களுக்கு சென்றால் எப்படி சிங்களவர்;களால் தமிழர்கள் அவர்களது பூர்வீக இடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு அதில் சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடியும். இதுவும் ஐக்கிய நாடுகளின் விதிகளின் படி ஒரு இனவழிப்பே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை சென்று வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் தமது பணிகளை செய்ய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.