ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய தவறிழத்திருக்கின்றது – முன்னாள் சிறிலங்கா கண்காணிப்பு குழுவின் தலைவர்

0
568

slmm-potuதமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததில் ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய தவறிழத்திருக்கின்றது, இப் பெரிய தவறால் தான் ஒரு சமாதானமான தீர்வு காண முடியாமல் போனது என 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் யஹன்றிக்சன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தமை மிகப்பெரிய தவறு. அவ்வாறு விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கான அழுத்தங்களை இலங்கையும் அமெரிக்காவுமே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியிருந்தன.

இவ்வாறு விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டமை, அமைதித் தீர்வு மற்றும் பேச்சுக்களுக்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி விட்டது. தீர்வு காணும் விடயத்தில், பொஸ்னியாவுடன் ஒப்பிடும்போது, மேற்குலகம் குறைந்தளவு அக்கறையையே இலங்கையில் காட்டுகிறது.

இந்தியாவின் அக்கறை முக்கியமானது. ஆனால் இந்தியாவும் இதில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை. இலங்கை அரசுக்கு ஒரு தீர்வு தேவைப்படவில்லை. கோத்தபாய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வரை, ஒரு தீர்வும் கிடைக்காது என அவர் கூறியுள்ளார்.

அதன் முழுமையான வடிவத்தை பின்வரும் இணைப்பில் காணலாம்.

நன்றி: தமிழ்நெற்