அன்பான கனடியத் தமிழ் உறவுகளே. ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக் கொண்டு இருப்பது தமிழினப் படுகொலை தான் என்பதை நிரூபிப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அமைக்கப்பட்ட ழுர்ஊர்சு விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம்இ எமது மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறப்போம்.

இவ்வருடம் ஒக்டொபர் மாதம் 31ம் திகதிக்கு முதல் ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு இழைத்த குற்றங்களை முன் கூட்டியே பதிவு செய்வோம். ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுக்கும் விசாரணைக்குரிய கால எல்லையாக 21.02.2002 முதல் 15.11.2011 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பொழுது உங்கள் தனிப்பட்ட பாதிப்புகளை மட்டும் சமர்ப்பிக்காமல் உங்கள் நீண்ட கால பட்டறிவுகளையும் ஆதாரத்துடன் உள்ளடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான பதிவுகள் தான் விசாரணக்குழு அடுத்த கட்ட விசாரணையான இன அழிப்பிற்குரிய பாதையைத் திறந்து விடும்.

உங்கள் பதிவில் உள்ளடக்க கூடிய விபரங்கள்:

•அடிப்படை சுதந்திரங்களை மீறல்,
•சட்டத்துக்கு புறம்பான கொலை,
•சித்திரவதை,
•துன்புறுத்தல்,
•அச்சுறுத்தல்,
•காணாமல் போதல்,
•பாலியல் வல்லுறவு,
•கொத்துக் குண்டு,
•இரசாயன தாக்குதல்,
•வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்,
•கைது செய்து காணாமல்போனோர்,
•நிலப்பறிப்பு மற்றும் குடிமனை அபகரிப்பு

போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகவோ ஆதாரமாகவோ பதிவு செய்யலாம். இத்துடன் இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம்.

கனடாவில் 2009 ம் ஆண்டுற்குப் பின் அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் ‘போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் (Center for War Victims and Human Rights – CWVHR) ஈடுபட்டுள்ளது. இத் தன்னார்வ தொண்டர் நிறுவனம் இது வரைக்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான வடிவத்தில் மிகவும் கவனமான முறையில் அவ்வாதாரங்களை தொகுத்து வருகின்றது. இன்நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் பதிவை விரைவில் மேற்கொள்ள வேண்டுகின்றோம்.

CWVHR மின்னஞ்சல்: info@cwvhr.org

உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் தொடர்பு இலக்கமான 416.830.7703 ஐ தொடர்பு கொள்ளவும்.

கனடியத் தமிழர் தேசிய அவை.