theepan-norபுரொஜெக்ட் பெக்கன் 2 என்னவென்று பார்க்க முன்பு புரொஜெக்ட் பெக்கன் 1 குறித்து பார்ப்போம். புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் குறித்து நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். இந்த இணைத்தலைமை நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)

 

புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டத்தின் பெயர்தான்  ” புரொஜக்ட பெக்கன்”

 

புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  ஓஸ்லோவில் அனைத்துலக மற்றும் பிராந்திய சதிகள் ஒன்றிணைந்து புரொஜெக்ட் பெக்கான் திட்டம்  இறுதிப்படுத்தப்பட்டது.

 

இதை புலிகளே வெளிப்படையாக அறிவித்தார்கள். தாம் இந்த திட்டத்தின்படி 2009 இற்கு முன்பே அழித்தொழிக்கப்படுவோம் என்றும் அதுவும் கரையோரமாக நிலங்களை இழந்து புதுக்குடியிருப்பு நிலப்பபகுதிக்குள் வைத்து அழித்தொழிக்கப்படுவோம் என்பதை 2007 இலேயே தமது செயற்பாட்டாளர்களுக்கும் 2008 இல் பகிரங்கமாகவும் அறிவித்தார்கள். (பார்க்க கீழே இணைப்பு உள்ளது)

 

இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி

 

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QhpApbc_AJA

 

ஆனால் இங்கு பலரும். வசதியாக அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். இவ்வளவையும் உணர்ந்த புலிகள் ஏன் மாற்றுவழி தேடவில்லை. என்ற கேள்விக்கு இங்கு விடை பகிர நாம் முன்வரவில்லை. ஏனென்றால் எல்லாவற்றையும் உணர்ந்த புலிகள் தம் அழிவை முன்னுணர்ந்து பிராந்திய – பூகோள சதிக்கு எதிராக தமிழர் தேசம் சார்ந்து நடத்திய பகடையாட்டம் அது. அதை ஒரு வரியில் விளக்கம் செய்ய முடியாது.

 

ஒரு ஆய்வாளர் குறிப்பிடுவது போல், துரோகம்இ தோல்விகள், சறுக்கல்கள் சதிகள் மாறிவரும் உலக ஒழுங்கின் நிமித்தமான ஏகாதிபத்திய கூட்டணிகள் – அவை முன்மொழிந்த பயங்கரவாத சாயங்கள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து நேர்மையுடனும் கொள்கைப்பற்றுடனும் விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடிய ஒரு தலைவன் தனது தீர்க்கதரிசனங்களின் சாய்வுகளையும் சரிவுகளையும்  சறுக்கல்களையும் மீறி இந்த இனத்திற்காக பெரும் பேரழிவினூடாக அந்த வரலாற்றுக் காலத்தை எமக்காகத் திருப்பிவிட்ட பகடையாட்டம் அது.

 

ஆனால் அதை நாம் பயன்படுத்திகொள்ளவில்லை என்பதுடன் அந்த ஆட்டத்தை தினமும் கலைத்தும் கொண்டிருக்கிறோம்.

 

நாம் இங்கு பேச வந்த விடயம் அதுவல்ல.. நாம் புரொஜெக்ட் பெக்கன் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழீழம் என்ற நடைமுறை அரசையும் (de facto state) அதன் மக்களையும் இனஅழிப்பு செய்ய புரொஜெக்கட் பெக்கன் திட்டம் எப்படி வரையப்பட்டதோ அதே போன்று தமது அழிவின் பின்னரும் கூட எஞ்சியுள்ள தமிழ்த்தேச அரசியலையும் நிர்மூலம் செய்ய எமக்குள்ளிருந்தே தமிழ் அரசியல்வாதிகளையும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்வர்களையும் வைத்து ஒரு புரெஜெக்ட் வரையப்படும் என்பதையும் புலிகள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள் ((பார்க்க கீழே இணைப்பு உள்ளது)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zVXMzyD_cNc

 

அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான்  ‘ஒப்பரேசன் புரொஜெக்ட் பெக்கன் 2’  என்று நாம் வரையறுக்கிறோம். இதற்கான வரைபுகள் தயார் செய்யப்பட்டு மேற்குலக ஆசியுடன் பிராந்திய சதியின் (இந்தியா) துணையுடன் சிங்களத்தால் எமக்குள்ளிருந்தே விலைபோன கும்பல்களின் துணையுடன் சிங்கப்பூர் மற்றும் தென்னாபிரிக்காவில் வைத்து அது இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 

அதாவது புலிகள் மே 18 தமது அழிவுக்கு முன்பே குறிப்பிட்டது போல் தமிழீழம் என்ற நடைமுறை அரசு குறித்த வரலாற்றை மறைத்து “புலிநீக்கம்” மற்றும் “நினைவு அழிப்பு” அரசியல் செயது, சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட தேர்தல் அரசியலுக்குள் மக்களை புதைத்து குறிப்பாக மக்கள் – மாணவர் போராட்டங்களை மேலெழாமல் கவனமாகப் பார்த்து கொள்வதுடன் அதையும் மீறி அது வெடித்தால் அதற்கு வன்முறை பட்டத்தை சுமத்தி இழுத்து ஊத்தி மூடுவதுடன்  மிச்சம் மீதியாக எஞ்சியுள்ள தமிழத்தேச அரசியலை நிர்மூலம் செய்தலே புரொஜெக்ட் பெக்கன் 2 இன் மைய திட்டமாகும். இதற்காக பல தமிழ் அரசியல்வாதிகளும் மெத்த படித்த கனவான்களும் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

மகிந்தவை ஆட்சியை விட்டு இறக்கியதுடன் “புரொஜெக்ட் பெக்கன் 2”  தனது முதல் அடியை எடுத்துவைத்துள்ளது.

 

புரொஜெக்ட  பெக்கன் 1 இன் பங்காளிகளாக வெளித்தரப்பே, அதாவது இணைத்தலைமை நாடுகள் (  co – chairs ) மற்றும் பிராந்திய சதி வலையமைப்பான  இந்தியா உடன்  சிங்களமும் இணைந்து பிரதான பாத்திரத்தை வகித்திருந்தன.

 

ஆனால் துரதிஸ்டவசமாக பெக்கான் 2 இன் பிரதான பங்காளிகளாக தமிழ்த்தரப்பே இயங்குகிறது. தெரிந்தே இந்த புரொஜெக்டில் பங்கெடுப்பவர்கள் பாதி தெரியாமல் பங்கெடுப்பவர்கள் மீதி என்று தமிழ்த்தேச அரசியல்  முழுமையான அழிவுக்குள் சிக்கியுள்ளது.

 

மே 18 இற்கு பிறகு திடீரென தமிழ்த்தேசிய அரசியலுக்குள் குதித்த சில தனிநபர்கள், மற்றும் லெட்டர்பாட் அமைப்புக்கள், மற்றும் ஏற்கனவே இயங்கிய கொள்கையை தூக்கியெறிந்த அமைப்புக்கள் – கட்சிகள் களம், புலம், தமிழகம் என்று தமக்குள் தெரியாமலேயே ஒரு வலையமைப்பாக உருவாகி இந்த புரொஜக்ட் பெக்கன் 2 இல் தம்மை பங்காளிகளாக்கியிருக்கிறார்கள்.

 

மே 18 இற்கு பிறகு நாம் பார்த்து வந்த இந்த நகர்வுகள சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கும் வித்யா படுகொலைக்கு வெடித்த மக்கள் போராட்டத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளும் கனவான் அரசியல் செய்பவர்களும் காட்டிய எதிர்வினையினூடாக  பட்டவர்த்தனமாக அம்பலமாயிருக்கிறது. புரொஜெக்ட் பெக்கன் 2 மையமும் நமபிக்கையுமாக இருப்பவர்கள் இந்த மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்கள்தான்.

 

 

புரொஜெக்ட் பெக்கன் 2 மற்றும் அதன் திட்ட வரைபு அது வரையப்பட்ட முறைமை மற்றும் அதன் பங்காளிகளாக இயங்கும் தனிநபர்கள் அமைப்புக்கள் குறித்து விரைவில் மக்கள் முன் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம். இந்த அவசர புதிவு மக்கள் போராட்டங்களை முடக்கும் சதியை தடுத்து நிறுத்துவதற்காகவே..

 

மக்களுக்கு வகுப்பெடுக்காதீர்கள்..

 

வித்யா படுகொலைக்கு பின்னரான மக்கள் – மாணவர் போராட்டங்களையடுத்து, அந்த போராட்டங்களை மடைமாற்றவும் நீர்த்துப்போக செய்யவும் குறிப்பாக அந்த போராட்டங்களின் கன பரிமாணங்களை சுருக்கி தட்டையாகவும் ஒற்றையாகவம் மாற்றி செயலிழக்க செய்யவும் தமிழ்ப்பரப்பிலிருந்தே பலர் களமிறங்கியுள்ளனர்.

 

எதிரிகளுக்கும் அன்னிய சக்திகளுக்கும்  இந்த போராட்டங்கள் உவப்பானதாக என்றும் இருக்கப்போவதில்லை. ஆனால் தமிழ்ப்பரப்பிலிருந்து ஏன் இந்த அயோக்கியத்தனம் அரங்கேற்றப்படுகிறதென்பதுதான் இங்கு சமான்யர்களின் கேள்வியாக இருக்கிறது.

 

விடை ஒன்றும் பூடகமானதல்ல. மே 18 இற்குப் பிறகு புலி நீக்க, தமிழீழம் என்ற நடைமுறை அரசு குறித்த நினைவு அழிப்பு அரசியலில் குதித்து தம்மை முதன்மைப்படுத்திய, எதிரிகள் மற்றும் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவான  ஒரு அரசியல் அரங்கை திறந்துள்ள சில தமிழ் அரசியல்வாதிகளினதும், மேட்டுக்குடி – கனவான் அரசியல் செய்பவர்களினதும் பதட்டம் இது.

 

அவர்கள் எப்படி மக்கள் போராட்டத்தை ஏற்றுக்கொள்வார்கள்? மக்கள் போராட்டத்தை கையகப்படுத்திவிட்டால் இவர்களது ‘லெட்டர்பாட்’ அரசியல் என்னாவது?   விளைவாக மக்கள் போராட்டங்களை விமர்சிக்கவும் தமது கட்டுக்குள் கொண்டுவரவும் களமிறங்:கியுள்ளார்கள். ஆனால் இதன்வழி மிகப் பரிதாபமாக தம்மை  மக்கள் அரங்கின் முன் அம்பலபடுத்திக்கொண்டிருப்பதை மறந்துவிட்டார்கள். இதை நாம் ஒரு முக்கியமான நிகழ்வாகவே கருதுகிறோம்.

 

‘நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி’ என்றார் கார்ல் மார்க்ஸ். இதை சர்த்தார் தொடக்கம் பிரான்ஸ் பனான் வரை வெவ்வேறு மொழிகளில் விளக்கம் செய்து விட்டார்கள். மக்கள் எப்போதும் தமது போராட்டத்தை வன்முறையாக்கியதில்லை. ஆனால் பயங்கரவாத அரசுகளால் – இனஅழிப்பு அரசுகளால் தமக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் ஒரு தொடர் சூழலில் அவர்களது போராட்டங்கள் வன்முறைக்கான அழகியலுடன் ஒரு கூட்டுக்கோபமாக வெளிப்பட்டுவிடுகின்றன. இது இயல்பான போக்கு. இதை விமர்சிக்க யாரும் அருகதையில்லை.

 

இனஅழிப்புக்கு – அரச பயங்கரவாதத்திற்கு மக்கள் காட்டும் உச்சபட்ச எதிர்வினை இது. ‘வித்யா’ விற்காக வெடித்த போராட்டத்தின்போதும் நடந்தது இதுதான். இனஅழிப்பை புரிந்து தொடர் இன அழிப்பில் ஈடுபட்டுள்ள ‘சிங்கள நீதி’ க்கு எதிரான ஒரு குறியீட்டு தாக்குதலாகவே மக்கள் நீதிமன்றை முற்றுகையிட்டார்கள். அதை தடுக்க முயன்றபோது வன்முறையின் ஒரு சிறிய பகுதியை தமதாக்கி கொண்டார்கள். அதுதான் மக்கள் போராட்டத்தின் பாங்கு – தன்மை. மக்கள்  திட்ட மிட்டு எந்த முன்முடிவுகளின் அடிப்படையிலும் நீதிமன்றை தாக்கவில்லை. தாக்கவும் மாட்டார்கள. நீதி மறுக்கப்பட்ட – இனஅழிப்புக்கு தினமும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் சடுதியான எதிர்வினை அது.

 

இதை கண்டிக்கும், இப்படியான போராட்டங்களை ஏற்க மாட்:டோம் என்ற குரல்கள் படு அயோக்கியத்தனமானது. மக்கள் போராட்டங்களை “கோட் சூட் ” போட்டவர்களை கொண்டு அறவழி குழுக்ளை அமைத்து நெறிப்படுத்தப் போவதாக எழும் கரல்கள் எல்லாம் அயோக்கியத்தனத்தின் உச்சம். மக்கள் போராட்டத்திற்கு, விடுதலை போராட்டங்களுக்கு எதிரான அரச பயங்கரவாதிகளின் குரல் இது. இது இனஅழிப்பு அரசை வெளிப்படையாகவே காப்பாற்றும் முயற்சி.

 

மக்கள் இவ்வளவு காலமும் அமைதியாகத்தானே போராடினார்கள். நடந்தது என்ன? திடீரென புலனாய்வாளர்கள் புலிக்கொடியை கொண்டு வந்தார்கள், புலனாய்வாளர்கள் புகுந்து கல்லெறிந்தார்கள். இப்படி அறவழியில் போரடிய மக்களை வன்முறைக்கு வலிய இழுத்தார்கள். ஆனால் மக்கள் மசியவில்லை.

 

இனஅழிப்பு அரசுக்கென்று பல திட்டங்கள் இருக்கின்றன. மக்கள் – மாணவர் பேராட்டங்களை தமது வசதிக்குட்பட்டு அதை நீர்த்து போக செய்ய அனைத்து உத்திகளையும் கையாள்வார்கள். பின்பு போராடியவர்களை கைது செய்வதனூடாக, அவர்கள் குடும்பத்திற்கு அச்சத்தை ஊட்டுவதனூடாக அதை மக்கள் தொகுதிக்குள் கடத்தவும் முற்படுவார்கள். பல்கலை மாணவர்கள் விவகாரத்திலிருந்து அண்மைய நீதி மன்ற விவகாரம் வரை நாம் அதை பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.

 

எனவே எதிரிகள் என்ன உத்தியையாவது கையாண்டு அதை முடக்க வழி தேடட்டும். ஆனால் எமக்குள்ளிருந்து கிளம்பும் எதிhக்குரல்களை நாம் எப்படி இனங்கண்டு களையெடுக்கப்போகிறோம்.? இது மக்கள் புரட்சிக்கு எதிரான புரொஜெக்ட் பெக்கன் 2 இன் பிரதான் கருப்பொருளாகும். தமிழ்ச்சூழலிலிருந்து இவர்களை இனங்கண்டு வெளியேற்றாவிட்டால் நாம் பூண்டோடு அழிவது உறுதி.

 

மக்கள் போராட்டத்திற்கு வன்முறை சாயம் பூசுவதும், அதை கண்டிப்பதும், கைது செய்வார்கள் என்று அச்சுறுத்துவதும் மக்கள்  – மாணவர் – புரட்சிக்கு நிரந்தர குழி தோண்டும் நயவஞ்சக சதியின் மைய சரடாகும். இனஅழிப்பு அரசுக்கு நோகாமல் போராட வேண்டும் என்று இவர்கள் வகுப்பெடுக்கும் பின்னணியை நாம் அறியாமலில்லை.

 

அடுத்து வித்யாவின் படுகொலையை அடு;த்து நடந்த போராட்டங்களை ‘ஒரு வித்தியா’ விற்கான போராட்டமாக சுருக்க இந்த கும்பல் படாதபாடு படுகிறது. உண்மை அதுவல்ல. அது ‘பல நுர்று’  வித்தியாக்களுக்காக நடந்த போராட்டம். வித்தியாக்களின் ‘அண்ணன்களுக்காக’ நடந்த போராட்டம். வித்தியாக்களின் ‘நிலத்திற்காக’ நடந்த போராட்டம். வித்தியாக்கள் நிம்தியாக வாழம் ஒரு ‘தமிழரசு’  வேண்டி நடந்த போராட்டம். இப்படி அடுக்கிக் கொண்டேயிருக்கலாம்.

 

மக்களுக்கு எப்போதும் ஒரு பொறி தேவைப்படும். இனஅழிப்பு அரசுக்கு எதிரான எதிர்வினையைக் காட்ட அந்த பொறியாக வித்யா உருமாறியதுதான் நடந்த உண்மை. இந்த உண்மைகளை மறைத்து திரிக்கும் கனவான் அரசியல்வாதிகளை எப்படி களையெடுக்கப்போகிறோம்.?

 

தமிழீழம், தமிழீழ நடைமுறை அரசு குறித்து பேச மறுக்கும் திடீர் அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் முன்பு புலிகளையும் போராட்டங்களையும் அழிக்க ஏதோ வழியில் துணைநின்றவர்களே.. இன்று தமிழ்த்தேசியம், சுய்நிர்ணயம் குறித்தெல்லாம் பேச தலைப்படுகிறார்கள். அவர்கள் புலிகளின் தமிழீழ நடைமுறை அரசு குறித்து பேச தயங்குவதிலிருந்தும் மக்கள் போராட்டங்களை கண்டிக்கும் போதும் தம்மை வெளிப்படுத்திவிடுகிறார்கள். தமிழ் மக்கள் எதிரிகளை விட இவர்கள் குறித்துதான் கவனத்தோடு இருக்க வேண்டும். மிக ஆபத்தான சக்திகள் இவர்கள் தான்.

 

புரொஜெக்ட் பெக்கன் 2 குறித்து பேச முற்பட்ட இந்த பத்தி புரொஜெக்ட் பெக்கன்  1 நடத்தப்பட்ட முறையின் ஒரு சிறு அலகை பார்ப்பதுடன் தற்காலிகமாக முடித்து கொள்ளலாம்.

 

புரொஜெக்ட் பெக்கன்  1 இன் ஓரளவு விரிவான பகுதியை இந்த இணைப்புக்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்க்கலாம். முழுமையான விபரங்களை நாம் அடுத்த எமது ஆய்வுகளில் இணைக்கிறோம்.

 

http://keetru.com/kannottam/jul09/senthamizhan.php

 

http://puligal.blogspot.fr/2010_05_01_archive.html

 

இந்த புரொஜெக்ட் பெக்கன்  1 இன் முக்கிய ஒரு செயற்பாடாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் ஒரு வரைபு இருக்கிறது. 2005 இலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து பேர் வெடிக்க முன்பே புரொஜெக்ட் பெக்கன்  இல் இந்த பகுதியை கொண்டு வந்த சாணக்கியத்தனத்தை நாம் வியக்காமல் இருக்க முடியாது. ஒரு நடைமுறை அரசை அழிப்பதென்றால் சும்மாவா?

 

இனி விடயத்தை பார்ப்போம். வெளியக அடிப்படையில் புலிகளை பயங்கரவாதிகள் முத்திரை குத்தி அழித்த பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

 

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது அப்படியே நடந்தும் முடிந்தன. அப்போது மக்கள் புலிகளோடு சென்று ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குவார்கள் என்றும் அப்போது இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருக்கும் மக்களை ‘மனிதக்கேடயம்’  என்ற அடிப்படையில் பிரித்து புலிகளை போர்க்குற்றவாளிகளாக்க முடியும் என்று திட்டம் தீட்டப்பட்டது. அப்படியே நடந்தும் முடிந்தது.

 

புலிகளை மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தவில்லை. அப்படி ஒரு சிந்தனையும் இல்லாத, போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம’;   (human shield ) என்ற பதத்தை பயன்படுதத்pயதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த சதிக் கூட்டணிதான்.

 

இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? அந்த திட்டத்தின் பிரகாரமாகவே இன்று புலிகள் மனிதக் கேடய குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள். எந்த அரசியல் – இராணுவ புரிதலுமின்றி குறிப்பாக நிலப்பரப்பு குறித்த புரிதலின்றி இதை வாந்தியாக எடுக்கும் நமது மனித உரிமைவாதிகள், ஜனநாயகவாதிகள்ஈ ஆய்வாளர்கள் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?

 

மாமனிதர் சிவராம் கொல்லப்பட்டது கூட இந்த பெக்கன் திட்டத்தின் ஒரு பகுதிதான். ஏனென்றால் அவர் இருந்திருந்தால் புலிகள் எதிர்கொள்ளும் இந்த மனிதக் கேடய் குற்றச்சாட்டை இராணுவ விஞ்ஞான அடிப்படையில் மட்டுமல்ல பெக்கான் திட்ட வரைபையும் முன்வைத்து அம்பலப்படுத்தியிருப்பார்.
எப்படியெல்லாம் நுட்பமாகப் பார்த்து புரொஜெக்ட் பெக்கன் திட்டம் வரையப்பட்டு, தமிழின அழிப்பு நடந்து முடிந்து,  “தமிழீழ நடைமுறை அரசு” அழிக்கப்பட்டது  என்பதை மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

 

அப்படித்தான் தற்போது “புரொஜெக்ட் பெக்கன் 2”  திட்டமும் மிக நுட்பமாக வரையப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் போராட்டங்களை வன்முறை என்று சித்தரிப்பதும் அதை கண்டித்து அறிக்கை விடுவதும் இதன் ஒரு பகுதிதான்;.

 

எனவே மக்கள் யாரையும் நம்பாமல், எந்த கண்டனங்களையும் காதில் விழுத்தாமல் “ஒரு புரட்சிக்காக”  காத்திருங்கள்.. எந்த வடிவமாக இருந்தாலும் தமிழீழ தேசத்தின் மீது உண்மையான பற்றுள்ள சக்திகள் உங்கள் பின் அணிதிரளும். உங்களைக் காக்கும் பொறிமுறைகளையம் வகுத்து கொள்ளும்..

 

‘மக்கள் சக்தி மாபெரும் சக்தி.. மக்கள் போராட்டமே எதையும் தீர்மானிக்கும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’: தியாகி திலீபன்

 

ஈழம் ஈ நியூஸ்