முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் இரவு முழுவது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள 83 குடும்பங்களின் காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்படவிருந்தது. எனினும், இன்றைய தினம் குறித்த பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததுடன், ஒருவித பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.

 

இந்நிலையில், தமது காணிகள் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து அந்த பகுதி மக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

 

இராணுவ அச்சுறுத்தல்கள் கெடுபிடிகள் ஆக்கிரமிப்புகளுக்குள் எம் மக்கள் போராட்டம் தொடர்கின்றது.

 

https://www.facebook.com/vsivarathan/videos/10212014869907075/