கச்சத்தீவை தமிழகம் மீட்க உலகத் தமிழர்களின் உதவியை நாடி நிற்கும் சீதையின் மைந்தன்!

0
674

katchathivuதமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாயின் எந்த பேயுடனும் கூட்டுவைக்கத்தயங்காத இந்திய மத்திய அரசு, 1970 களில் சிறீலங்கா அரசுக்கு வழங்கிய கச்சதீவை தற்போது இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல என தெரிவித்துள்ளது தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கச்சதீவை சிறீலங்கா அரசுக்கு வழங்கிய பின்னர் 500 இற்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை சிறீலங்கா அரசு சுட்டு படுகொலை செய்துள்ள நிலையில் இந்திய அரசின் தற்போதைய அறிவிப்பு தமிழ் மக்களை கடும் சினங்கொள்ள வைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உருவாகியுள்ள போராட்டங்கள் குறித்த செய்திகளை இங்கு தருகின்றோம்.

கச்சத்தீவை தமிழகம் மீட்க உலகத் தமிழர்களின் உதவியை நாடி நிற்கும் சீதையின் மைந்தன்!

தோழர்களே, கட்சித்தீவு விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய இந்திய நாடு இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது. கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமே அல்ல என்று வாய்க் கூசாமல் பொய் சொல்கிறது. இலங்கைக்கு குற்றேவல் புரிவது மூலம் தமிழக மீனவர்களின் படுகொலையில் உடந்தையாக இருந்துள்ளது இந்தியா. சொந்த நாட்டு மக்களின் நல மீது அக்கறை இல்லாமல் கொலை செய்யும் நாட்டிற்கு ஆதரவாக செயல்படும் நடுவண் அரசு , இந்திய அரசியல் சாசனத்தின் விதிமுறைகளை மீறி உள்ளது.

உயிர்களை காக்கத் தவறிய நடுவண் அரசு அமைச்சர்களை இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கைதும் செய்யலாம். கட்சத்தீவு நமதே என்பதற்கு தமிழகத்திடம் வலுவான ஆதாரம் உள்ளது. இந்தியா அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறது என்பதை நாம் அம்பலப் படுத்தலாம். இதற்கான அனைத்து ஆவணங்களும் , தகவல்களும் கட்சத் தீவு மீட்டு இயக்கத்தின் தலைவர் சீதையின் மைந்தன் அவர்களிடம் உள்ளது. இது குறித்து முழு ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார் அவர்.
seethayin-mainthan
மேலும் இந்திய அரசுக்கு அவர் விடுத்த எச்சரிக்கை கடிதத்தை அவர் வெளியிட உள்ளார் . அதில் இந்தியாவை தோலுரித்து காட்டி உள்ளார் . இந்திய அரசும், காங்கிரஸ் அமைச்சர்களும் பொய் தான் சொல்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு இந்த கடிதத்தில் எழுதி உள்ளார். இவரிடம் உள்ள ஆவணங்கள் கட்சத்தீவை முழுமையாக தமிழகம் மீட்க உதவும் பயனுள்ள தகவல்கள் ஆகும். தமிழக அரசுக்கு இத்தகைய ஆவணங்கள் இருந்தால் உச்சநீதி மன்றத்தில் நமக்கு சாதகமாக தீர்ப்பும் வாங்கலாம். தமிழக அரசே இதன் மூலம் பயன்பெறலாம். அத்தனை விடயங்களை ஆய்வு செய்துள்ளார் சீதையின் மைந்தர். ஒரு அரசு செய்ய வேண்டிய வேலைகளை சீதையின் மைந்தன் செய்துள்ளார்.

இப்போது இவர் வெளியிடப் போகும் இந்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை என்ற கட்டுரை தொகுப்பு மிகவும் முயக்கியமான ஆவணம் ஆகும். இதை வெளியிடும் போதே கச்சதீவை மீட்க தமிழகம் தழுவிய இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்று சீதையின் மைந்தன் விரும்புகிறார் . இதில் மீனவ மாணவ அமைப்புகள் கலந்து கொண்டு பெரும் போராட்ட இயக்கமாக உருவாகி கட்சத் தீவை தமிழகம் மீட்க வேண்டும் என கருதுகிறார். இந்த இயக்கத்தையும் செய்தியையும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல ஏற்கனவே பெரும்பகுதி தனது வருமானத்தை இந்த காரியத்திற்கு செலவு செய்து விட்டார் சீதையின் மைந்தன். தமிழகத்திலும், இந்தியாவிலும் இன்னும் சில கருத்தரங்குகள், வெளியீடுகள், நிகழ்சிகள் செய்ய வேண்டியுள்ளது.

இனி அவரால் செலவு செய்து இந்த ஆவணங்களை வெளியிட முடியாத நிலையில் இவரது நுண்மையான அறிவார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேறு இயக்கமோ, கட்சியோ , தனி நபர்களோ அவருக்கு உதவ முன்வந்தால், கட்சித் தீவை நாம் நிச்சயம் மீட்டுவிடலாம். அந்த அளவிற்கு அவரிடம் ஆதாரங்கள் உள்ளன. இதை படிக்கும் தமிழர் நலம் சார்ந்த நண்பர்கள் , இயக்கங்கள் , அமைப்புகள் சீதையின் மைந்தனின் கட்சத்தீவு மீட்புப் போராட்டத்திற்கு பொருளுதவி செய்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சீதையின் மைந்தன் அவர்களை தொடர்பு கொண்டு பேசவும் 9884227293 http://katchatheevu.com/

கச்சத்தீவு நமதே. தமிழக அரசுக்கு ராமநாதபுரம் மன்னரின் வாரிசு ஆவணங்களை ஒப்படைத்தார்.

கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கச்சத்தீவை குத்தகைக்கு விட்ட ஆவணங்களை, ராமநாதபுரம் மன்னரின் வாரிசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சின்னஞ்சிறிய கச்சத்தீவு. இந்தியாவிடம் இருந்து பெற்ற இந்த தீவுப்பகுதியில் இந்திய மீனவர்களையே மீன்பிடிக்க விடாமல் இலங்கை அடாவடி செய்து வருவதால், கச்சத்தீவு பிரச்னை இப்பொழுது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்த தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு பூர்வீக பாத்தியமாக இருந்து வந்துள்ளது. இந்த தீவு பகுதி கடல்வளம் நிறைந்த பகுதியாகும். இந்த கடல் பகுதியைச் சுற்றிலும் அபூர்வ சங்குகள் கிடைக்கின்றன. கச்சத்தீவு தரைப்பரப்பில் சாய வேர்கள், மருந்து செடிகள் கிடைக்கின்றன. அதோடு எண்ணெய் வளம் நிறைந்த பகுதியாகவும் இது உள்ளது.

இந்த கடல் பகுதியை பயன்படுத்திக்கொள்ள ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் 25.7.1880 அன்று ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி பிள்ளை, அப்துல்காதர் மரைக்காயர் ஆகியோருக்கு ரூ.700க்கு 5 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இதுதவிர 1914ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டு வரை பாம்பனைச் சேர்ந்த முகமது மீரா சாபு மரைக்காயருக்கு ராமநாதபுர சமஸ்தான திவான் சுப்பையா நாயுடு 15 வருட குத்தகைக்கு விட்டுள்ளார்.

இந்த குத்தகை ஒப்பந்த ஆவண நகல்களை, ராமநாதபுரம் மன்னர் சண்முகராஜேசுவர சேதுபதியின் மகன் வழி பேரன் குமரன் சேதுபதி, “மேற்படி கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.