இந்த தேர்தல் முடிவுகள் தூரநோக்கில் எமக்கு பெரும்பாலும் பாதகமானதாகவே அமைந்துள்ளபோதும் இத் தேர்தலில் பங்கெடுத்த கூட்டமைப்பு சில சாதகமான காய்களை நகர்த்தக்கூடிய வெளிகளையும் திறந்திருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று.

கிழக்கு மாகாணசபையை மீள கைப்பற்றக்கூடிய வாய்ப்பு..

37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை வென்றிருந்தாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (7 உறுப்பினர்கள்) ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.
suma
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொது எதிரணியுடன் இணைந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை எந்த நேரத்திலும் இழக்கும் நிலை ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் தற்போதைய நிலவரத்தின்படி 22 உறுப்பினர்களை கொண்டிருந்த ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ள நிலையில் எதிரணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து 11 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி (4 உறுப்பினர்கள்) ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பற்கான முயற்சிகளை மேற்கொண்ருந்தாலும் இறுதி நேரத்தில் அது கை கூடவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.ம.சு. கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கியது.

தற்போது கிழக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

கூட்டமைப்பு இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழர் தாயகத்தின் சுயநிர்ணய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கிழக்கு மகாணசபையை கைப்பற்றும் இராஜதந்திர காய்களை நகர்த்துமா?

காலப்போக்கில் இந்திய மற்றும் அனைத்துலக உதவிகளுடன் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மகாணசபைகளை இணைக்கும் முயற்சிக்கு இதுவே அடித்தளமாக இருக்க முடியும்.

கூட்டமைப்பு சிந்திக்குமா?

ஈழம்ஈநியூஸ்.