உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்காக மிகத்தீவிரமாக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கண்டுபிடிப்புகளும் பரிசோதனை அளவிலேயே உள்ளன.எந்த ஒரு நாடும் இதுவரை கோவிட் 19 வைரஸ்சை ஒழிக்க மருந்து கண்டுபிடித்ததாக அறிவிக்கவில்லை.

இந்தியாவில் இருந்து டன் கணக்கில் அமெரிக்கா இறக்குமதி செய்த மலேரியா தடுப்பு மருந்தான Hydroxilchloroquine குப்பையில் தூக்கிப்போடப்பட்டுவிட்டது.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி எதுவும் நடைபெறாத நிலையில், பாரம்பரிய மருந்துகளே மக்களுக்கு பெரும் ஆறுதல் தந்த வண்ணம் உள்ளன.

சித்தா, ஹோமியோபதி மருந்துகள் விற்பனையில் சக்கைப்போடுப் போடுகின்றன. உலக நோயாளிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அலோபதி மாஃபியா கும்பலால் இதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

தற்போது தினம் ஒரு கொரோனா தடுப்பு மருந்தை அலோபதி மருந்து நிறுவனங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

மத்திய அரசின் ஆதரவோடு ஊடகங்கள் விலைப்பேசப்பட்டு அந்த மருந்துகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு அசித்ரால் மாத்திரைகள் தரப்பட்டுவரும் நிலையில், இன்று கிளன்மார்க் நிறுவனத்தின் fabi flu ஊடகங்கள் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் தினம் ஒரு மருந்தினை அலோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஊடகங்கள் மூலம் அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றன.

இந்த மருந்துகளை இதுவரை எந்த ஒரு மருத்துவரோ, மத்திய மாநில அரசுகளோ, ஐ.சி.எம்.ஆரோ, மத்திய சுகாதாரத்துறையோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்திய ஊடகங்களில் பிரபலப்படுத்தப்படும் இம் மருந்துகளில் ஒன்றைக்கூட உலகின் எந்த ஒரு நாடும் இதுவரை கொரோனா தடுப்பு மருந்தாக அறிவிக்காத நிலையில், எப்படி இம்மருந்துகள் இந்திய சந்தையை மட்டும் குறி வைக்கின்றன ?

டெங்கு, சிக்கன் கூனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த அலோபதி மருந்துகள் தோற்றபோது, பாரம்பரிய மருந்துகளே மக்களைக்காத்தன. அப்போதும் இதேப் போன்ற தடுப்பு மருந்துகளை அலோபதி உலகம் அறிமுகம் செய்து பாரம்பரிய மருந்துகளின் விற்பனையைத் தடுத்தன.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ அறிஞர் தெய்வநாயகம் அவர்கள் எயிட்ஸ் நோய்க்கு சித்தா மற்றும் அலோபதி மருந்துகளை ஒருங்கிணைத்து கூட்டு மருத்துவ சிகிச்சை செய்து பல எயிட்ஸ் நோயாளிகளை சென்னை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் குணப்படுத்திக்காட்டினார்.

ஆனால், திடீரென்று அரசு அதை அங்கீகரிக்க மறுத்ததன் விளைவு, விலை உயர்ந்த அலோபதி எயிட்ஸ் தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வந்தன. தமிழகத்தின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

சித்த மருத்துவத்தை அரசே தோற்கடித்தது குறித்து மருத்துவர் தெய்வநாயகம் அன்று பெரிதும் வருந்தியது அவருடன் நின்ற மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

தற்போதைய கொரோனா போர்களச் சூழலில் மக்கள் பாரம்பரிய மருந்துகளை பெரிதும் உபயோகிக்க தொடங்கிவிட்டனர்.அரசும் வேறு வழியின்றி அதை அங்கீகரித்துவிட்டது.

அங்கீரிக்கப்பட்ட பல சித்த மருத்துவர்கள் மிகக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை அரசு மற்றும் சுகாதாரத்துறையிடம் வழங்கிவரும் நிலையில், அவை திட்டமிட்டு கிடப்பில் போடப்படுகின்றன.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசை இன்றுக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ” கொரோனா நோய்க்கு ஏன் இதுவரை சித்த மருந்துகளின் பரிந்துரைகளை அரசு ஏற்க மறுக்கிறது? எதன் அடிப்படையில் கபசுர குடிநீர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது? அலோபதி லாபியால் இயற்கை மருத்துவம் அழிக்கப்படுமோ என்று இந்த நீதிமன்றம் அஞ்சுகின்றது ” என்று நீதிபதிகள் தமிழக அரசை கேள்விக்கனைகளால் அறைந்துள்ளனர்.

இது குறித்து தினம்தோறும் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் வருகின்றன. அரசு இதற்கு முறையான பதிலைத் தருவதில்லை.

உலகையே தன் பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனாவை சித்த மருத்துவம் முழுமையாக குணப்படுத்திவிட்டால், அது அலோபதி மருந்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

அலோபதி உலகம் கடல். சித்த மருத்துவ உலகம் வெறும் அருவி. ஒருநாளும் அலோபதி மாஃபியா கும்பலை எந்த அரசாலும் வெல்ல இயலாது.

Swine flu எனப்படும் பன்றிக்காய்சலுக்கு இதுவரை அலோபதி உலகம் மருந்தே கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அந்த நோயின் அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு கொடுகப்படும் மருந்து Anti flu மாத்திரைகள். அதன் விலை கிட்டத்தட்ட 300 ரூபாய்.

தற்போதைய கொரோனா பேரிடரில் இந்திய மக்களை பரிசோதனை எலிகளாக்கி அலோபதி மாஃபியா உலகம் கொள்ளை அடிக்க துணிந்துவிட்டது. இதை அமைதியாக மத்திய அரசு வேடிக்கைப்பார்க்கிறது.

இன்னும் ஒரே மாதத்தில் பல்வேறு அலோபதி மாத்திரைகளை மக்கள் உபயோகிக்க தொடங்கிவிடுவார்கள்.

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும்வரை, பாரம்பரிய மருந்துகளை மக்கள் முழுமையாக நம்பிவிட்டால், அலோபதி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

இதில் கொடுமையான விஷயம் என்னத்தெரியுமா? 90 % அலோபதி மருந்துகளின் மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

அத்த சீனாவை எதிர்த்துதான் நம் யோகா சித்தர் ‘நானா மோனா’ தினம்தோறும் வீரவசனம் பேசி வருகிறார்.

இழவு வீட்டில் திருடுவது….என்று நம் தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு…..

# தாகம் செங்குட்டுவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here