கொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது

0
2307

இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மாகாண அரசுகளுக்கான அதிகாரங்களை அதிகரிக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்பட்டு நிற்கின்றது. அதனை அவர்கள் தமது தேர்தல் அறிக்கையிலும் முன்வைத்துள்ளனர்.

ஆனால் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உடன்பாடு தொடர்பில் மோடி அரசு அக்கறை காண்பிக்கவில்லை. தற்போதைய பூகோள நெருக்கடியில் கொழும்பில் உள்ள அரசுடன் நெருக்கத்தை பேணவே இந்தியா முற்பட்டுநிற்கின்றது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனவே தமிழ் மக்களின் பிரச்சனையை எடுத்து சிறீலங்கா அரசுக்கும் தனக்குமுள்ள உறவை சீர்குலைக்க இந்தியா விரும்பாது. எனினும் சிறீலங்காவை ஒரு நெருக்கடியில் வைத்திருக்க தமிழர் தரப்பை இந்திய மறைமுகமாக பயன்படுத்தும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியன் றிசேவ் வங்கி 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலும் 400 மில்லியன் டொலர்களை சிறீலங்காவுக்கு நாணயப் பரிமாற்ற முறைமையின் அடிப்படையிலான வசதியளிப்பின் கீழ் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவை பொருளாதார ரீதியாக காப்பாற்ற இந்தியா முன்னெடுக்கும் பாரிய அர்பணிப்பின் மற்றுமொரு வடிவம் இதுவாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here