வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அன்னையர்கள் மனம் புண்படும் வகையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை!

 

600 நாட்களாக போராடும் அன்னையர்கள் கண்ணீரின் வலி புரியாமல் இரக்கமற்ற கருத்துக்களை பகிர்ந்தமைக்கு சத்தியலிங்கம் பகிரங்க மன்னிப்பை அவர்களிடம் கேட்க வேண்டும்!

 

பிள்ளைகளை பறிகொடுத்து வாழ்வது பெரும் கொடுமை!

 

அதிலும் இருக்கிறார்களா இல்லையா என தெரியாமல் வாழ முடியாமல் செத்து செத்து வாழும் கொடுமை வலி சுமந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!

 

மக்கள் வலியை பதவி பவுசில் குளிர்காய்பவர்களுக்கு உணர முடியாது!

 

அதிலும் அரச பிச்சையில் வாழ்பவர்களுக்கு வாய் சும்மா இருக்காது!

 

தென்னிலங்கை சிங்கள மக்கள், அந்நிய நாட்டு உறுப்பினர்கள் என அரச படையினரிடம் ஒப்படைத்த தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என போராடும் அன்னையரை மதித்து அவர்கள் போராடும் தளத்திற்கு சென்று பார்வையிட்டு துயரில் பங்கேற்று ஆறுதல் சொல்ல முடிகிறது.

 

ஆனால் இருந்த இடத்தில் குப்பை கொட்டும் அரசியல் செய்யும் இவர்களுக்கு தின்றது செமிக்க எதிரிக்கு வால் ஆட்ட வேண்டியிருக்கிறது.

 

பிள்ளைகளுக்காக போராடி 17 பேரை போராடிய 600 நாட்களில் பறி கொடுத்த நிலையில் தொடரும் அன்னையரின், உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

 

“முப்பது வருடகால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்று காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” என ஏளனமாக கூறியுள்ள சத்தியலிங்கத்தின் கூற்று போராடும் அன்னையரின் மனதை வருத்தி கொந்தளிக்க வைத்துள்ளது.

 

மானமுள்ள தமிழன் இப்படி பேச மாட்டான்!

 

தான் தமிழன் என உணராத முகவரி அற்றவர் தான் தமிழர்கள் போராட்டத்தை ஏளனம் செய்து பேசுவான்!

 

வவுனியாவில் பொது நிகழ்வில் உரையாற்றிய இவன் “முப்பது வருடகால யுத்தத்தில் எங்களுடைய சமுதாயத்தில் சமுதாயத்திற்கு ஒவ்வாத பல விடயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

 

ஆனால் அந்த சமுதாயத்திற்கு ஒவ்வாத விடயங்களை செய்தவர்களே அந்த விடயங்களுக்கு எதிர்ப்பாக இப்போது போராட்டங்களை செய்கிறார்கள், அதை பற்றி பேசுகின்றனர்.

 

காணாமல் போனவர்களை எடுத்துக் கொண்டால் இந்த முப்பது வருட கால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்றைக்கு காணாமல் போனவர்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காணாமல் போனவர்கள் ஏன் காணாமல் போனார்கள் எவ்வாறு காணாமல் போனோர் போன்ற பலரின் விடயங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு தெரியும்.

 

ஏனெனில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான் காணாமல் போக செய்தவர்கள்” என தெரிவித்துள்ளான்.

 

மக்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என அரசை தட்டி கேட்க துப்பில்லை!

 

அரசுக்கு வக்காலத்து வாங்கி போராட்டத்தை கொச்சை படுத்துகிறது இந்த அரிய பிறவி!

 

மட முட்டாளுக்கு தெரியுமா போராட்டம் என்பது அரச அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக மக்களுக்குள் இருந்து பிறந்த மக்கள் உணர்வின் உன்னத வெளிப்பாடு என்று?

 

எதிரியின் பிச்சையில் வயிறு வளர்ப்பவர்களுக்கு எதிரிக்கு எதிரான போராட்டங்கள் கசக்கவே செய்யும்!

 

அவரது இக்கருத்து போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சீற்றமடையவைத்துள்ளது!

 

போராட்டத்திற்கு ஆதரவளிக்காவிடினும் அதனை கொச்சைப்படுத்த வேண்டாமென அவர்கள் கோரியுள்ளனர்.

 

வடக்கின் வவுனியா,கிளிநொச்சி மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வருடங்கள் தாண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களின் போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

 

போராடும் மக்கள் குறை கேட்க போயிருப்பானா என்றால் இல்லை. ஆனால் வக்கணையாக அரசுக்கு ஒத்து ஓதுகிறார்.

 

தமிழ் மக்களின் 30 வருட இனவிடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தி பேசியதோடு இன்று தமது பிள்ளைகளுக்காக போராடும் அன்னையரை மனம் நோக வைத்த சத்தியலிங்கம் என்ற அரச ஊதுகுழல் மக்களிடம் இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

 

அதுவரை இவரை மக்கள் என்றுமே ஏற்று கொள்ள கூடாது!

 

மக்கள் முன்னிலையில் பேசும் அருகதை கூட இவருக்கு இல்லை என்பதை மக்கள் உணர்த்தியாக வேண்டும்!

 

நன்றி: சிவவதனி பிரபாகரன்