சம்பந்தரை தமிழ்மக்கள் தாக்கும் காணொளி வெளியாகியது, அடுத்த கட்ட பரிமாணத்திற்குள் விடுதலைப்போராட்டம்

0
645

camoron-jaffகமருனின் யாழ் வருகையின் போது தமிழ் மக்கள் நடத்திய போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல செய்திகளை எழுதியது என்று துணிந்து சொல்லலாம். இனஅழிப்பு அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்தது மட்டுமல்ல இனஅழிப்பின் அனைத்துலக பங்காளிகளுக்கும் சேர்த்து பல செய்திகளை அந்த மண்ணில் வைத்து மக்கள் எழுதினார்கள். அதைவிட முக்கியமானது தம்மை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு விடுத்த எச்சரிக்கைதான். ஆம் இனஅழிப்பு அரசின் காவல்துறை தடுத்திருக்காவிட்டால் இன்று சம்பந்தர் என்ற தமிழ்அரசியல்வாதி தமிழ்அரசியற் பரப்பிலிருந்து மட்டுமல்ல இந்த பூவுலகிலிருந்தே மக்களால் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்.

மக்களை ஏமாற்றும் – ஏமாற்ற நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தமது ஒட்டு மொத்த கூட்டு கோபத்தை வெளிப்படுத்திய வரலாற்றின் முக்கியமான அத்தியாயம் என்றுதான் அந்த நாளை சொல்ல வேண்டும். பொன்னாலை வரதாராஜப்பெருமாள் ஆலய முன்றலில் வைத்து அன்று தமிழ் மக்களின் ஒட்டு மொத்த கூட்டு கோபத்தின் சீற்றத்தை அல்பிரட் துரையப்பா மீது தலைவர் பிரபாகரன் உமிழ்ந்த துப்பாக்கி குண்டுகளின் வழியாக சொல்லப்பட்ட செய்தியை யாழ் நூலகம் முன்பு வைத்து இன்று மக்கள் எழுதப் புகுந்த வரலாற்று நாளாகவே அது இன்று பார்க்கப்படுகிறது.

தமிழ் அரசியல்வாதிகளால் தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம் என்று மக்கள் விசனமுற்றதன் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தெளிவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?v=xBsYLcy5vv4

தமக்கு தீர்வு வாங்கித் தருகிறோம் என்று கூறியபடியே வீர வசனங்களை பேசியபடி வாக்கு வேட்டை நடத்தி பதவிகளையும் பணங்களையும் சுருட்டிவிட்டு எதிரிகளுடன் கொஞ்சி குலாவியது கண்டு மக்கள் கிளாந்தெழுந்து தமிழ் அரசியல்வாதிகளின் கூட்டங்களில் மக்கள் செருப்புக்களை வீசியதும் அவர்கள் வீடுகளுக்கு கற்களை வீசியதும் என்றுதான் அன்று மக்களின் கோபம் வெளிப்படுத்தப்பட்டதும் வரலாற்றில் தெளிவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பும் கோபமும் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமல்ல சிங்களத்தை எதிர்கொள்ளவும் போதாது என்று தமிழ் இளைஞர்கள் உணரத்தலைப்பட்டதன் விளைவுதான் ஆயுதப்போராட்டமாக பரிமாணமடைந்தது. எனவே ஆயுதப்போராட்டத்திற்கு சிங்களத்தை விட தமிழ் அரசியல்வாதிகள்தான் அதிக பொறுப்பு எடுக்க வேண்டும்.

வரலாறு திரும்புகிறது. பிராந்திய பூகோள நலன்கள் ஒரு புள்ளியில் சந்தித்ததன் விளைவாக ஒரு விடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு பிராந்திய மற்றும் மேற்குலக பயங்கரவாத அரசுகளுடன் துணையுடன் அழித்தொழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் தமிழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டிய துயரமான காலகட்டத்திற்குள் தமிழ்மக்களின் விடுதலை வந்து சேர்ந்திருக்கிறது.

நடந்த இனஅழிப்பும் அதன் விளைவான அவலங்களும் மக்களை ஆயுதப்போராட்டத்திலிருந்து நிறையவே அன்னியப்படுத்திவிட்டது. அதனால் தமிழ் அரசியல்வாதிகளின் பின்னால் நான்கு வருடங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வரலாறு மோசமானது. தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் மக்களுக்கு என்றுமே விடுதலை கிடைக்கப்போவதில்லை என்பதை நிருபித்துக்கொண்டேயிருக்கிறது. அதற்கேற்றாற்போல் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களின் எஞ்சியிருக்கும் கடைசி கோவணத்தையும் உருவும் முயற்சியிலேயே இருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக, அதுவும் குறி;ப்பாக வடக்கு மாகாண தேர்தலுக்கு பின்பு நடக்கும் கூத்துக்கள் அதை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணம் செய்து வருகின்றன.

கமருனின் யாழ் வருகையின் போது சம்பந்தர், சுமந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் கூட்டணி நடந்து கொண்ட போக்கு தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையையும் அடித்து நொருக்கி விட்டது. விளைவாகவே மக்கள் நூல் நிலையத்தின் முன்பு வைத்து சம்பந்தரை அடித்து நொருக்க முற்பட்டிருக்கிறார்கள்.

எந்த தாக்கத்திற்கும் சமனானதும் எதிரானதுமான தாக்கம் உண்டு என்ற நியூட்டளின் விதியை மக்கள் பொய்யாக்க விரும்பவில்லை. அன்று சம்பந்தன் தப்பி விட்டார். ஆனால் தொடர்ந்து தப்புவாரா என்பது சந்தேகமே..

உண்மையில் இந்த காணொளியை பார்த்துதான் நடந்த சம்பவத்தை அறிய வேண்டுமென்றில்லை. இணையங்கள் மற்றும் சமூகவலைத்ளங்கள், கைத்தொலைபேசி வழியாக நூல் நிலையம் முன்பு நடக்கும் சம்பவங்களை உலகெங்கும் இருந்து தமிழ் மக்கள் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யாழில் உள்ள தமிழ் ஊடகங்கள் மக்களின் தமிழ் அரசியல்வாதிகள் மீதான இந்த கோபத்தை ஒரு சுயதணிக்கைக்கு உட்படுத்தியது கவலைக்குரிய விடயம். தமிழ் ஊடகங்கள் மக்கள் போராட்டங்களுக்கும் மக்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும்.

அன்று மக்கள் இருந்த கோபத்திற்கு சம்பந்தன், சுமந்திரன், மற்றும் விக்கினேஸ்வரன் அணி தப்பியது ஆச்சர்யம்தான்.

முள்ளிவாய்க்கால் என்பது சிங்களம் மற்றும் பிராந்திய – மேற்குலக சக்திகளுக்கு வைக்கப்பட்ட ஒரு செக். தமிழ் மக்கள் விடுதலைக்கான ஒரு திறப்பு அது. இதன் வழியே நமது இராஜதந்திர காய்களை நகர்த்தினால் விடுதலையை நாம் அடைவது திண்ணம். எனவே இந்த ஆட்டத்தை திசைமாற்றும் தமிழ் அரசியல்வாதிகளை மன்னிக்க முடியாது.

மக்கள் நூல் நிலையத்தின் முன்பு நின்று சம்பந்தரை அடிக்க முற்பட்டதன் ஊடாக அடித்தது ஒரு எச்சரிக்கை மணி. இது தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல தமிழர் விடுதலையுடன் தொடர்புள்ள மாற்று சக்திகள் மற்றும் ஊடகங்கள் அனைவருக்கும் சேர்த்துதான்.

மக்களை இனஅழிப்பு அரசிடம் அடிவாங்க விட்டு விட்டு தமிழ் அரசியல்வாதிகள் வாகனங்களில் தப்பியோடும் காட்சிகளை பார்த்து கொண்டு நீண்டகாலத்திற்கு தமிழ் இளைஞர்கள் பொறுமைகாக்க மாட்டார்கள்.

பொன்னாலையில்; அன்று தலைவர் பிரபாகரன் தொடக்கி வைத்த வரலாறு மீண்டும் ஆரம்பமாவது தவிர்க்கமுடியாதது ஆகிவிடும். “எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்” என்பதை தமிழீழ விடுதலைப்போராட்டம் திரும்ப திரும்ப நிருபித்து கொண்டேயிருக்கிறது.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் திருந்தாவிட்டால் வெகு விரைவில் தலைவர் பிரபாகரனைப்போல ஒரு இளைஞன் தமிழ் அரசியல்வாதி ஒருவர் முன் தோன்றி ஒரு “பொன்னாலையை” வரலாற்றில் எழுதக்கூடும்.

அப்படி ஏதும் நடந்தால், உண்மையில் ஆயுதபோராட்டத்திற்கான தேவையோ அவசியமோ இல்லாத – இராஜதந்திர வழிமுறைகளில் அடைய வேண்டிய தீர்வை மீண்டும் வரலாற்றில் ஆயுத போராட்டமாக மாற்றிய பெருமை தமிழ் அரசியல்வாதிகளையே சேரும்.

எனவே தமிழின விடுதலையில் அக்கறையுள்ள மாற்று சக்திகள், மாணவர்கள், ஊடகங்கள் ஒன்றிணைந்து இந்த விபரீதத்தை தடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் அரசியல்வாதிகளை பின்தொடராமல் ஒருங்கிணைந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க அனைவரும் ஒன்று படவேண்டும்.

ஈழம்ஈநியூஸ்.