“சம்பந்தர் – சுமந்திரன் – விக்கினேஸ்வரன் கூட்டணி” ஒரு இனத்தின் அரசியற் தற்கொலை

0
672

samp-mahiதமிழர்களின் வரலாற்றில் எத்தனையோ சோதனையான காலகட்டங்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் போராடிக்கொண்டிருக்கிறது இந்த இனம். “தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறோம்” என்று கூறியபடியே தமது பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் சோரம்போன அரசியல் தலைவர்களையும் போராளித் தலைவர்களையும் கண்டவர்கள்தான் நாம்.

இந்த இனம் தமது விடுதலை குறித்து கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாமல் கவலைப்படாமல் வாழ்ந்த பொற்காலம்தான் புலிகளின் ஆட்சிக்காலம். இதை எதிரிகளே ஏற்றுக்கொள்வார்கள். எந்த மிரட்டலும் விலைபேசலும் புலிகளை அடிபணிய செய்யவில்லை. மக்களினதும் புலிகளினதும் உளவியல் அலைவரிசை சீராக பயணித்த ஒரு அற்புதமான காலகட்டம் அது.

புலிகளின் ஆட்சிக்கு முன்பும் சரி மே 18 இற்கு பின்பும் சரி இனி வரப்போகும் காலங்களிலும் சரி அத்தகைய போக்கு இனி இருக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

மக்களும் தற்போது இந்த யதார்த்தத்தை உணர்ந்து எந்த பேராசையும் கொள்ளவில்லை. ஆனால் ஒரு 10 விழுக்காடாவது, தமது உளவியல் போக்கை உணர்ந்து அரசியல் செய்வார்கள் என்று நம்பியே கூட்டமைப்பை பின்தொடருகிறார்கள். ஆனால் கூட்டமைப்பு மக்களின் போக்கில் இயங்காவிட்டாலும் பரவாயில்லை வரலாற்றை பின்னோக்கி இழுக்கவும் எதிரிகளினதும் அந்நிய சக்திகளினது நிகழ்ச்சி நிரலிற்கு ஏதுவாகவும் இயங்குவது மட்டுமல்ல மக்களின் உளவியலை ஊனப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.

“தமக்கு தீர்வு எடுத்து தருவார்கள் என்று நம்பிய ஒரு தலைமை தம்மை அழிப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகிறதோ” என்று தற்போது மக்கள் அஞ்சத் தொடங்கியிருக்கிறார்கள். வடக்கு மகாண சபைத் தேர்தலுக்கு பின்பு இதை உணர நேர்ந்தது குறித்து பலர் மவுனமாக அழுது கொண்டிருக்கிறார்கள். மே 18 இற்கு பிறகு எந்த உணர்வையும் வெளிப்படையாக காட்ட முடியாத அவலத்திற்குள் தமிழன் அமிழ்ந்து கிடக்கும் அவலம் இது.

தமிழ் மக்களை குருரமாக பழிவாங்கும் ஒரு தலைமையாக சம்பந்தர் – சுமந்திரன் -விக்கினேஸ்வரன் கூட்டணி திமிறிக்கொண்டு நிற்பதை காணமுடிகிறது.

பின்னோக்கி நீண்ட தூரம் போக விரும்பவில்லை. இந்த மூவரணியின் தமிழின எதிர்ப்பு சிந்தனையை இந்த வார சம்பவங்களை வைத்தே பார்ப்போம்

முதலில் சுமந்திரன்.
Sumanthirans
இவர் தமிழீழ விடுதலைக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வெளிப்படையாகவே எதிரானவர். இதில் எந்த ஒழிவு மறைவும் இல்லை. அனேகமாக இதை அவரே மறுக்க மாட்டார். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சம்பந்தருக்கு அடுத்த நிலையில் இருக்கிறார். இதற்கு பிறகு எப்படி தமிழருக்கு தீர்வு கிடைக்கும்? இதை கேட்டால் எமக்கு முட்டாள் பட்டம் கிடைக்கும். அவல முரண்பாடு என்பது இதுதான். இந்திய – சிறீலங்கா நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தமிழீழ கோட்பாட்டை சிதைக்க சம்பந்தரால் உட்செருகப்பட்ட நபர்தான் இவர்.

இவர் நான்கு நாட்களுக்கு முன்பு கனடாவில் தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் “தமிழ் மக்களின் இன அழிப்புக்கு தீர்வு என்னவென்பதை பேசுவார்” என்று மக்கள் குழுமியிருக்க, அவர் புலிகளை நுட்பமாக வசைபாடியதுடன் “நடந்தது இன அழிப்பு இல்லை” என்றும் “அப்படி ஐநா உட்பட எந்த ஆவணங்களிலும் இல்லை” என்றும் ஆனால் “முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இன அழிப்பு” என்றும் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் “முஸ்லிம்களுக்கு தீர்வை நாம் வழங்க வேண்டும்” என்றும் நிறையவே உளறியிருக்கிறார்.

நடந்த இன அழிப்பிற்கான நீதியை பெறவும் – தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுக்கவும் தமிழ் மக்கள் நம்பியிருக்கும் ஒரு கட்சியை சேர்ந்தவர், தனது புலியெதிர்ப்பு வக்கிரங்களை நுட்பமாக கொட்டிவிட்டு போயிருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மட்டுமல்ல அந்த காணொளியை பார்த்த – அது குறித்து கேள்விப்பட்ட அனைவருமே “மேற்குலக – இந்திய – சிங்கள கூட்டணியால் அழிக்கப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ளவர்களை குருரமாக பழிவாங்க இந்த கும்பல் முற்படுகிறதோ” என்று மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கிறார்கள். எந்த சந்தேகமும் தேவையில்லை அதுதான் உண்மை.

சரி சுமந்திரனின் மொழியிலேயே நாம் அணுகுவோம். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது என்பது அன்றைய களயதார்த்தம். ஆனால் அதற்காக அதை நியாயப்படுத்த முடியாது. இதற்கு புலிகளே மன்னிப்பும் கேட்டு அவர்கள் மீள குடியேறுவதற்கான ஒப்பந்தங்களும் 2001 சமாதான காலத்தில் எழுதப்பட்டுவிட்டது. இப்போதைய இன அழிப்பு அரசின் நிதி அமைச்சர் ரவூப் கக்கீம்தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்.

அது சரி புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது 1990. புலிகள் தமது பின்னடைவின் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது 1995 இல். அதற்கு பிறகு முஸ்லிம்கள் மீள குடியேறாததற்கு யார் காரணம்? சரி அதையும் விடுவோம். மே 18 இற்கு பிறகும் புலிகளை குற்றச்சாட்டும் அயோக்கியத்தனம்தான் என்ன?

மே 18 பிறகு முஸ்லிம்கள் பலர் மீள திரும்பியது மட்டுமல்ல, வன்னியின் பல பகுதிகளில் தமிழர்களின் நிலத்தில் வகைதொகையில்லாமல் குடியேற்றப்பட்டும் வருகிறார்கள். இன அழிப்பு அரசின் சூழ்ச்சி இது.

அது சரி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க எத்தனையே முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் இருக்கின்றன. ஏன் இன அழிப்பு அரசின் பங்காளிக்கட்சிகளாகத்தானே அவர்கள் இருக்கிறார்கள். தமிழர்களின் பூர்வீக நிலமான கிழக்கு மகாணசபை அவர்கள் கையிலேயே இருக்கிறது. அவ்வளவு ஏன் சிறீலங்காவின் பிரதான அமைச்சு பொறுப்புக்களான நீதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சை முஸ்லிம்களே வைத்திருக்கிறார்கள்.

எந்த அதிகாரமும் இல்லாமல் ஒவ்வொரு துண்டு நிலமாக இழந்து அம்மணமாக நிற்கும் இனத்தை பார்த்து ” நீ எக்கேடாவது கெட்டுப்போ இப்ப முஸ்லிம்களின் பிரச்சினையை பார்ப்போம். அல்லது அதற்காக கண்ணீர் விடு” என்று கிளம்பியிருக்கிறார் சுமந்திரன். என்ன அயோக்கியத்தனம் இது?

முஸ்லிம்களால் கிழக்கில் எத்தனை மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டது. எத்தனை பெண்கள் மானபங்க படுத்தப்பட்டார்கள். அவ்வளவு ஏன் எத்தனை தமிழரின் பூர்விக கிராமங்கள் இன்று சுத்திகரிக்கப்பட்டு முழுமையான முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதை பேச யாருமே இல்லை.

போதாததற்கு இன்றும் கிழக்கிலும் வன்னியிலும் சட்டவிரோத முஸ்லிம் குடியேற்றங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. ஆனால் ஒரு தமிழன் கூட இன்னும் பறிபோன சொந்த நிலத்தில் மீள குடியேற முடியவில்லை.

இசைப்பிரியாவின் காணொளி வெளியாகி கவலையில் இருந்த மக்கள் மீது சுமந்திரன் தமிழர் விரோத வன்மத்தை கொட்டியிருக்கிறார். அது குறித்து எந்த கவலையும் இல்லை. சமகாலத்தில் வலி வடக்கில் மக்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாகி கொண்டிருக்கின்றன.

இவர்தான் முன்பு மக்கள் போராட முற்பட்டபோது “இது சட்ட பிரச்சினை’ என்று மக்களை போராட விடாமல் தடுத்தவர். இப்போது வீடுகள் இடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் அது குறித்து எந்த கவலையுமில்லை. அறிக்கையுமில்லை. மனதளவில் தமிழின விரோத போக்கு கொண்ட இவர் வீடுகள் இடிக்கப்படுவது குறித்து சந்தோசம்தான் பட்டிருப்பார்.

இவர் அனைத்துலக மட்டத்தில் சந்திக்கும் இராஜதந்திரிகளிடம், புலிகளையும் போர்க்குற்றவாளிகள் என்று குறிப்பிடுவதுடன் இன அழிப்பு விசாரணையை தாம் கோரவில்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் தாம் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் அழுத்தமாக கூறிவருகிறார். பிறகு எப்படி புலத்தில் இருந்து நாம் அனைத்துலக விசாரணையை கோர முடியும்?

இந்த சுமந்திரனிடம் இப்போது ஒரே ஒரு கேள்விதான் நாம் கேட்கிறோம். தேர்தல் மேடைகளில் புலிகளி;ன் இனச்சுத்திகரிப்பு குறித்து பேசியிருக்கலாமே.? ஏன் பேசவில்லை.? மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரியும். இப்போது சுமந்திரன் மக்களின் உளவியலை ஊனப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பது, இன்னும் புலிகளை போற்றிப்பாடித்தான் தாம் வாக்கு கேட்க வேண்டியிருக்கிறதே என்ற இயலாமையிலும் வன்மத்திலும்தான்..

தமிழின விரோதப்போக்கு கொண்ட ஒரு மனநோயாளியாக வக்கிரமடைந்து வரும் சுமந்திரனின் போக்கு இது.

அடுத்து விக்கினேஸ்வரன்.
vikki
இவர் வடக்கு தேர்தலினூடாக உள்நுழையும் போதே தமிழினத்தின் இறுதி அழிவுகாலம் உணரப்பட்டுவிட்டது. இவரது தகிடுதத்தங்களை தனியாக எழுதத் தேவையில்லை. தினமும் அதை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். உதாரணத்திற்கு ஒன்று. பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடப்பதும் அதற்கு மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவதும் இனஅழிப்பிற்கு நீதி கேட்டு நிற்கும் ஒரு இனமாக எமக்கு எத்தகைய பின்னடைவு என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆனால் இது தொடர்பாக இவர் பண்ணும் அலப்பறைகளை காணச் சகிக்கவில்லை. இறுதியாக மன்மோகன்சிங்கை வடக்கிற்கு வருமாறு கடிதம் எழுதியிருக்கிறார். ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் இது குறித்து கேள்வி கேட்டவுடன், “அது மரியாதை நிமித்தம் எழுதப்பட்டது, தேர்தல் நடத்தியதற்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்டது, மநாட்டுக்கு கூப்பிடவில்லை, யாழ்ப்பாணத்திற்கு மட்டும்ததான் கூப்பிட்டோம்” என்று உளறுகிறார்.

13 வது திருத்தம் என்பதே தமிழ் மக்கள் நிராகரித்த ஒன்று. அதை முன்மொழியும் இந்தியாவிற்கு ஏன் நன்றி? எமது இன அழிப்பில் பங்கெடுத்த இந்தியாவிற்கு நன்றி சொல்லும் அயோக்கியத்தனம்தான் என்ன? மநாட்டை புறக்கணிக்க கோரும் இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு?

ஒன்றும் தெரியாமல் செய்யவில்லை. நுட்பமாக தமிழின அழிப்புக்கு துணைபோகும் அயோக்கியத்தனம் இது. இதையே காரணம் காட்டி இந்திய ஊடகங்களும் சரி அனைத்துலக ஊடகங்களும் சரி “மன்மோகன் சிங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி மநாட்டிற்கு கூப்பிடுகிறார்” எனவே போக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

கூட்டமைப்பு புறக்கணிப்பதாக சொல்ல, விக்கினேஸ்வரன் மறைமுகமாக அழைக்க, இந்தியா கலந்து கொள்ள இப்போது பொதுநலவாய மநாடு சிறப்பாக நடக்க போகிறது. மக்களை எப்படி எல்லாம் சம்பந்தர் கும்பல் ஏமாற்றுகிறது என்பதற்கு இது ஒரு சான்று.

அடுத்து சம்பந்தன்.

மேற்படி இருவரையும் இயக்குவதே இவர்தான். இவரின் ஒவ்வொரு செயலும் பேச்சும் நுட்பமாக தமிழரின் கடைசி கோவணத்தையும் உருவும் முயற்சிதான். வலிவடக்கு பிரச்சினையில் விக்கினேஸ்வரனை கொண்டு அமெரிக்க தலையீட்டை நுட்பமாக தடுத்த இவர் ” ஜனாதிபதியுடன் பேசி விட்டேன். இனி இடிக்கப்படாது” என்றார். ஆனால் இதை எழுதிக்கொண்டிருக்குமபோது எஞ்சியிருந்த கடைசி கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

எந்த சலனமும் இல்லை ஐயாவிடம். போதாததற்கு இசைப்பிரியா காணொளி வந்து முழு உலகமுமே மிரண்டு போயிருக்க நாலு நாட்களாக எந்த சலனமுமில்லை. “கண்டியுங்கள், அறிக்கை விடுங்கள்” என்று பல பக்கத்திலிருந்து வற்புறுத்தியும் எந்த சலனமுமில்லை. ஒரு கட்டத்தில் “இலங்கை அரசு குற்வாளிகளை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

அடப்பாவிகளா, கொன்றதே அவர்கள்தானே.. கொன்றவனிடம் எப்படி நீதியை கேட்க முடியும்? பச்சை அயோக்கியத்தனம் என்பது இதுதான். நேரடியாகக் குற்றம் சுமத்த வேண்டாம், ஒரு பேச்சுக்காகவாவது, இந்த ஆதாரங்களை கொண்டாவது ஒரு அனைத்துலக விசாரணையை கோரியிருக்க வேண்டாமா? ஆனால் திரும்பவும் இனஅழி;ப்பு அரசை காப்பாற்றும் வண்ணம் கதை பேசுகிறார் இந்த சம்பந்தர்.

இது இந்த மூவரணியின் ஒருவார கால பதிவு.

ஆனால் இவர்களை நம்பித்தான் தாயகத்திலுள்ள தமிழர்களின் தலைவிதி இருக்கிறது என்பதை நினைத்தால் தலை தாறுமாறாக சுற்றுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் தமிழனின் கடைசி கோவணத்தையும் உருவ உருவாகியிருக்கும் ஒரு வெற்றிக்கூட்டணிதான் இந்த மூவரணி.

தற்போது தமிழர்களின் உடனடி எதிரிகள் இந்த மூவரணிதான.; அதில் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. ஒன்று இந்த கூட்டணியை உடைக்க வேண்டும். அல்லது கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வேறு யாராவது கைப்பற்ற வேண்டும்.

அல்லது, இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த கூட்டணியின் அயோக்கியத்தனத்திற்குள் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட தமிழ் மக்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக கூட்டு தற்கொலை செய்தும் கொள்ளலாம்.

ஏனென்றால் இவர்களின் தலைமையை ஏற்பதனூடாக தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு இனத்தின் அரசியல் தற்கொலைதான்..

ஈழம்ஈநியூஸ்.