சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சிப்போராட்டம்.

0
603

uk-flagஎதிர்வரும் 26ம் திகதி தாயகம் ,தமிழகம் , பிரித்தானிய மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஒருமித்த மாபெரும் எழுச்சிப்போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

பிரித்தானியாவில் மாலை நேரம் No 10 downing street பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரோன் இல்லத்துக்கு முன்பாக எழுச்சிப்போராட்டத்தை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத நடவடிக்கைகள், இன படுகொலைகள் , நில அபகரிப்புக்கள் மற்றும் 2009 ஆண்டு மே மாதம் முல்லிவாய்க்காலில் 70,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யபட்டமை போன்றவற்றிக்கு சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உணர்வுபூர்வமான எழுச்சியுடன் உலகமெங்கும் பரந்துவாழும் தமிழரின் மாபெரும் எழுச்சிப்போரட்டம் .அனைத்து பிரிதானிய வாள் தமிழ் மக்களும் ஓன்று திரள்வோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை.