சிங்கள படையில் இணைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை விடுவிக்க உடனடியாக செயலில் இறங்குவோம்..

0
647

tamil-slaஇலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அவர்கள் இனஅழிப்பு இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கருவற்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து தமிழ் யுவதிகள் இருவரும் தமக்கு முகாமில் முன்னெடுக்கப்பட்டுவரும் பாலியல் சித்திரவதைகளை வெளிப்படுத்தியதுடன் தமது கருக்களை கலைத்துவிடவும் கோரியுள்ளனர்.

எனினும் இதற்கு மருத்துவர்கள் மறுதலித்துள்ளதுடன் பெற்றோரிற்கு அறிவிக்க முற்பட்டுள்ளனர்.

ஆயினும் வன்னி படைத் தலைமை யகத்திலிருந்து வைத்திய சாலை உயர்மட்டத்திற்கு சென்ற தொலைபேசி அழைப்பினையடுத்து அவர்களிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் நீண்டகால கருத்தடை கருவிகளும் பொருத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

இதே நேரத்தில் சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் 23 வயதான இன்னொரு இளம் தமிழ் பெண்.

தான் இராணுவத்தில் சேர்ந்த பின் தன்னையும் தன்னைப் போன்ற மற்றைய தமிழ்ப் பெண்களையும் முறை வைத்து இரவில் உயரதிகாரிகளின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் அதற்கு உடன்படாத சந்தர்ப்பங்களில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களில் சிலர் கருத்தரித்து பின்னர் அது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு கலைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்கு சிங்களப் பெண் இராணுவச் சிப்பாய்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன்­ ஒரு பெண் தமிழ்ச் சிப்பாய் இராணுவத்தில் இருந்து விலகி ஓடிய போது அவர் பின்னர் பிடிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தமிழ்ப்பெண்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ள ஒரு இன அழிப்பு வடிவமாகவே ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

நடந்த ஆண்டு பெண்களை படையில் இணைக்கும் போதே இந்த எச்சரிக்கை விடப்பட்டது.

அதற்கேற்றாற்போல் பல பெண்கள் தப்பியோடினார்கள். ஆனால் அவர்களை கைது செய்த இன அழிப்பு இராணுவம் அவர்களுக்கு “மனநோய்” என்றும் பேய் பிடித்து விட்டது” என்றும் பல கதைகளை அவிழ்த்து விட்டது.

அப்போதே பெண்கள் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்ட உண்மைகள் தெரிய வந்தபோதும் அந்த பெண்களின் எதிர்;காலம் கருதி அந்த “உண்மைகளை” தமிழர் தரப்பு மறைத்தது.

இதை சிங்களம் தனக்கு சார்பாக பயன்படுத்தி கொண்டது. இதை ஓரளவிற்கு வெளியே கொண்டு வர முற்பட்ட ஒரு மனநல மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டதும் நடந்தேறியது.

“தமிழப்பெண்கள் ஏன் படையில் இணைக்கப்பட்டார்கள்? அதன் இன அழிப்பு பின்னணி என்ன?” என்பது குறித்து பெண்ணிய உளவியலாளரும் தமிழ்பெண்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருபருமான திரு பரணி கிருஸ்ணரஜனி கடந்த ஆண்டு இது தொடர்பாக எமக்கு தெரிவித்த கருத்துக்கள் பிள்வருமாறு

“சிறீலங்கா இராணுவத்தில் ஏற்கனவே சிங்களப் பெண்கள் இருந்தாலும் அவர்கள் “எடுபிடி”களாகவே இருந்தர்களே ஒழிய படையணிகளில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. சிறீலங்கா இராணுவத்தில் சிங்களப் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் ஊரறியாதவை. பெரும்பாலும் அதிகாரிகளின் பாலியல் சித்திரவதைகளை சகித்தே சிங்களப்பெண்கள் பணிபுரியும் நிலை இருக்கிறது. இதனால் பல தற்கொலைகள்இ உளவியல் சிதைவுகள் என்று கறுப்பு பக்கங்களால் சிறீலங்கா இராணுவ வரலாறு இருக்கிறது. தமிழர்களுடன் நடந்த போரின் விளைவாக இவை எல்லாம் மூடி மறைக்கப்பட்டுவிட்டன. சிங்கள பெண்களுக்கே இந்த நிலை என்று சொன்னால் தீவிர இன அழிப்பில் இறங்கியிருக்கும் சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை என்ன செய்யும்.?

தமிழ்ப் பெண்களை படையணியில் இணைத்ததன் பிரதான நோக்கம்

01. தமிழர்களையும் தாம் படையில் இணைத்திருக்கிறோம் என்று உலகத்திற்கு காட்டுவதற்கு.

02. படையணியில் சேர்க்காமல் தமது எடுபிடி வேலைகளுக்கு அமர்த்துவதன் மூலம் சுற்றியுள்ள தமிழ் சமுகத்தையும் அந்த பெண்களையும் “அடிமைகள்” “தோற்றுபோனவர்கள்” என்ற உளவியலுக்குள் தள்ளுவதற்கு..

03. தமது பாலியல் தேவைகளுக்கும் அதன் விளைவாக இனக்கலப்பை உருவாக்குவதற்கும்..

இப்படி நுண்மையான இன அழிப்பு காரணங்கள் நிறைய இருக்கிறது.. ஏற்கனவே இது குறித்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநாவிற்கு கவனப்படுத்திவிட்டோம்.. அனால் அதற்கு முன்பாகவே அந்த பெண்கள் உளவியல் தாக்கத்திற்குள்ளாகி மருத்துவமனையில் சேரும் நிலை வந்துவிட்டது.. ” என்று குறிப்பிட்டிருந்தார்

இன்று அவர் குறிப்பிட்டது போலவே தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கருவுற்ற சம்பவம் நடந்து முடிந்திருக்கிறது.

தற்போது பாதிக்கப்பட்ட பெண்களே வாக்குமூலம் கொடுத்திருக்கும் நிலையில் நாம் துரிதமாக செயற்பட்டு அனைவரையும் மீட்க வேண்டும். நடக்கும் ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இதை கவனப்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களான சாட்சிகளை பாதுகாப்பதுடன் அனைத்து தமிழ் பெண்களையும் சிங்கள படையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்.

கூட்டமைப்பு உடனடியாக அந்த பெண்களை மீட்க அனைத்துலக தலையீடு ஒன்றை கோர வேண்டும். புலம் பெயர் அமைப்புக்கள் துரிதமாக செய்பட்டு எமது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஈழம் ஈ நியூஸ்.