சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள்

0
351

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல நாடுகள் வாக்களித்துள்ளன. சில நாடுகள் நடுநிலமை வகித்துள்ளன. உண்மைக்கு முன்னால் நடுநிலமை என்பது இல்லை என்பதற்கு அமைவாக நடுநிலமை வகித்த இந்தியாவும், தென்னாபிரிக்காவும் தமிழ் இனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவே கொள்ளப்படவேண்டும்.

இதனிடையே, இந்த தீர்மானம் தொடர்பில் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும், தமிழின உணர்வாளர்களும் விடுத்துள்ள அறிக்கைகள் வருமாறு:

ஆதரவாக வாக்களித்த 23 நாடுகள்:-

ஆர்ஜன்டீனா
ஒஸ்ரியா
பெனின்
பொஸ்வானா
பிரேஸில்
சிலி
கொஸ்டாரிக்கா
கொட்டே டிவைரோ
செக் குடியரசு
எஸ்டோனியா
பிரான்ஸ்
ஜேர்மனி
அயர்லாந்து
இத்தாலி
மெக்சிகோ
மொன்டிநீக்ரோ
பெரு
கொரிய குடியரசு
ரோமானியா
சியரா லியோன்
மெஸடோனியா
ஐக்கிய இராஜ்ஜியம்
அமெரிக்கா

எதிராக வாக்களித்த 12 நாடுகள்:-

அல்ஜீரியா
சீனா
கொங்கோ
கியூபா
கென்னியா
மாலைத்தீவு
பாகிஸ்தான்
ரஷ்யா
சவுதி அரேபியா
ஐக்கிய அரப இராஜ்ஜியம்
வெனிசுவெலா
வியட்நாம்

நடுநிலை வகித்த 12 நாடுகள்:-

பர்க்கினா பஸோ
எதியோப்பியா
காபொன்
இந்தியா
இந்தோனேசியா
ஜப்பான்
கஸகஸ்தான்
குவைத்
மொரோகோ
நம்பியா
பிலிபைன்ஸ்
தென்னாபிரிக்கா

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காத மத்திய அரசுக்கு காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் மற்றும் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.

seeman-87
இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், தமிழர் ஆலுவலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், ”தமிழகர்களுக்கு துரோகம் செய்வதையே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இதற்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது.

எப்போதும் போல இப்போதும் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது” என்று கூறியுள்ளார்.மத்திய அரசின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:”ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பின் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட கோரிய அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

நமக்கு சம்பந்தமே இல்லாத அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஒரு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தினால் இந்தியா செய்த உதவிகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பயந்தே மத்திய அரசு அதனை புறக்கணித்துள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருப்பதன் காரணமாக, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணைக்கு பிறகு தனி ஈழம் உருவாக வழிபிறக்கும்” என்று கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற போர்க்குற்றங்கள் மீது ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இப்போது அங்கீகாரம் தரப்பட்டிருக்கின்றது.”

“அந்த அங்கீகாரத்தைத் தந்த – ஐக்கிய அமெரிக்காவினால் இணைந்து பிரேரிக்கப்பட்டு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நான் வாழ்த்துகிறேன். – என்று அமெரிக்க செனட் வெளி விவகாரக் குழுவின் தலைவர் றொபேட் மெனன்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்திற்கான அமெரிக்க மேலவையின் இரண்டு செனட்டர்களில் ஒருவரான றொபேட் மெனன்டஸ் நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

robert-menendez_us_-293x150
“இலங்கையில் நடந்த விடயங்களுக்கான பொறுப்புக் கூறல் என்பது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. இருதரப்பாலும் செய்யப்பட்ட பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக் கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை ஒரு சுயாதீனமான ஐ.நா. விசாரணை இப்போது சாத்தியமாக்கும் என்று நான் நம்புகின்றேன்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளருக்கு நான் ஒரு மடல் வரைந்திருந்தேன்.

இந்தப் பிரேரணைக்கான எனது ஆதரவை நான் அவருக்கு உறுதிப்படுத்தியிருந்ததுடன், பொதுமக்கள் சமூகம் செயற்படுவதற்கான சூழலின் இயல்புத் தன்மை இலங்கையில் குறைந்து வருவதையிட்டு எனது கவலையையும் நான் அந்தக் கடிதத்தில் அவரது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தேன்.

இலங்கையிலே – ஊடகத்துறையினர், மனித உரிமைகள் காப்பாளர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவர்களுக்கான சூழல் மோசமடைந்து வருவதையிட்டு நான் எப்போதும் மிகவும் கவலையுடனும் கரிசனையுடனும் உள்ளேன்.

அதனால் முக்கியத்துவம் மிக்க இந்த விவகாரங்களைக் கவனத்தில் எடுத்து, அவற்றைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தையும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.”

இலங்கையின் மிரட்டல் காரணமாகவே ஐ.நா. சபையில் பதுங்கியது இந்தியா : பழ.நெடுமாறன்

இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டது என்று யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது.

நவநீதம்பிள்ளையின் அழைப்புக்கு கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வு அழைப்பு விடுத்துள்ள சர்வதேச விசாரணைக்கு கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் போல் டேவர் பிரேரணை ஒன்று நேற்று முன்வைத்தார்.

ச
ர்வதேசத்தின் முன் இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை கொண்டு செல்வதற்கு கனடா தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று டேவர் குறிப்பிட்டுள்ளார.

இந்தநிலையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிவதில் அந்த நாட்டின் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையை அடுத்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் கனடா தமது உறுதிப்பாட்டை வெளியிடுவதாக கனேடிய நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச விசாரணைகளை நடாத்துவதற்கு காத்திரமான ஓர் பொறிமுறையை இத் தீர்மானம் உருவாக்கவில்லை

27 மார்ச் 2014 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் சிவில் சமூக அமையம் கருத்தில் கொள்கிறது. இந்த தீர்மானத்தை முன் மொழிந்த நாடுகள் மற்றும் அதை ஆதரித்து வாக்களித்த நாடுகளினது முயற்சியை வரவேற்கின்றோம். முழுத் தீர்மானம் தொடர்பில் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்ற இந்திய அரசாங்கத்தின் முடிவும், குறிப்பாக ஐ. நா. மனித உரிமை ஆணையாளருக்கு விசாரணை அதிகாரங்களை வழங்கும் பந்தி தொடர்பில் எதிர்த்து வாக்களித்த இந்திய அரசாங்கத்தின் முடிவும் எமக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

சர்வதேச விசாரணைகளை நடாத்துவதற்கு காத்திரமான ஓர் பொறிமுறையை – சர்வதேச விசாரணை ஆணைக்குழு ஒன்றை – இத் தீர்மானம் உருவாக்கவில்லை என்பது எமக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. மேலும் நல்லிணக்க (LLRC) ஆணைக்குழுவினது கால வரையறைக்குள் ஐ. ந. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை முடக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது. தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும் மீறல்களை விசாரிப்பதற்கு ஆணையாளரின் அலுவலகத்திற்கு வெளிப்படையாக இந்தத் தீர்மானத்தில் ஏற்பாடுகள் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

தீர்மானத்தின் பந்தி ஆறு 13ஆம் திருத்தத்தை பற்றிப் பேசுகிறது. 13ஆவது திருத்தம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அரசியல் தீர்விற்கான அடிப்படையாக ஒரு போதும் அமையாது என்பதை மீள வலியுறுத்த விரும்புகிறோம். தீர்மானத்தின் முகவுரைப் பந்திகள் இலங்கையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் முன் வைக்கும் விளங்கிக்கொள்ளல், தமிழ் மக்களின் பிரச்சனைகளின் தனித்துவமான தன்மையை விளங்கிக் கொள்வதாக இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கின்றது.

தீர்மானம் நிறைவேற்றப் பட்டாலும், அதற்கான விவாதம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் கூட தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன; தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருகின்றன என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தமிழ் மக்களுக்கெதிராக நாளாந்தம் கட்டவிழ்த்து விடப் படும் துயரங்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு துணிச்சலான, திடகாத்திரமான, தீர்க்கமான முடிவுகளை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

(ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைத் தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில் சமூக அமையத்தின் (Tamil Civil Society Forum) அறிக்கை

தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது தமிழினத்திற்கு செய்யும் மற்றொரு துரோகம்: டி.ராஜா

அமெரிக்காவின் தீர்மானம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று கூறிய இந்தியா, வாக்கெடுப்பை புறக்கணித்தது தமிழினத்திற்கு செய்யும் மற்றொரு துரோகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா எம்.பி. தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடந்தது. இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த இந்தியா, வாக்கெடுப்பை புறக்கணித்தது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா எம்.பி. கூறுகையில்,

அமெரிக்காவின் தீர்மானம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று கூறிய இந்தியா, வாக்கெடுப்பை புறக்கணித்தது தமிழினத்திற்கு செய்யும் மற்றொரு துரோகம் என்று தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்கக்கூடியதல்ல என ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவரான நவி பிள்ளை கூறிய பின்பும் இந்தியா இவ்வாறு நடந்து கொண்டிருப்பது கண்டித்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற அனைத்தும் இந்தியாவிற்கு நன்றாக தெரியும். அவை அனைத்திற்கும் இந்தியா துணை நின்றதால் தான் தற்போது தீர்மானத்தை எதிர்க்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த வெட்கக் கேடான முடிவு அவர்களின் துரோகத்தையும், வெளிநாட்டு கொள்கையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதற்காகவே அக்கட்சி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்” என்று ராஜா கூறியுள்ளார்.

ஆனால், இந்திய அரசின் புறக்கணிப்பு முடிவை சுப்பிரமணியன்சாமி ஆதரித்துள்ளதுடன், இதற்காக பிரதமரை தான் வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏமாற்றிவிட்டது: இரா சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்தியா ஏமாற்றிவிட்டது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன்மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்

அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆதரித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் என்று கூறியுள்ளது.

இந்த தீர்மானம் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதிக்கப்பட்ட போது அங்கு சமூகமளித்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐநா ஆணையர் இலங்கை நிலவரம் குறித்து விசாரிப்பார் என்று கூறும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தமது கட்சி வரவேற்பதுடன், அப்படியான ஒரு விசாரணை ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் இலங்கையில் நடத்தப்படுமிடத்து, அதற்கு தமது அமைப்பு பூரண ஆதரவை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா தந்த ஏமாற்றம்

இருந்தபோதிலும், இந்த தீர்மானத்துக்கான வாக்களிப்பில் இருந்து இந்தியா விலகி இருந்தமை, அதற்காக அதன் தூதுவர் கூறிய காரணங்கள், மற்றும் போதுமான நிதி இல்லை என்பதை காரணம் காட்டி அந்த தீர்மானத்தை பின்போடவும், சர்வதேச விசாரணையை தடுக்கவும் பாகிஸ்தான் கொண்டுவந்த எதிர்ப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை ஆகியவை குறித்து இலங்கை தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

எமது இளயோர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து போராட்டத்திற்கு ஆதரவளித்த இந்தியாதான், இறுதியில் அதே இளயோர்களை கொன்றொழிப்பதற்கும் உந்துசக்தியாக இருந்தது!!!

அமெரிக்காவினால் ஜெனிவாவிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காமை ஒட்டுமொத்த தமிழ்மக்கள் முகத்தில் கரிபூசியதற்கு ஒப்பானது.

கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா இம்முறையும் ஆதரவாக வாக்களிக்கும் என்ற நம்பிக்கையுடனே உலகத்தமிழர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பையும் மீறி தமக்கு மாத்திரம் சாதகமான முடிவினை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இந்தியா ஏமாற்றி நடுக்கடலிலே விட்டுச்சென்றிருக்கின்றது.

இலங்கையிலே வாழ்கின்ற தமிழ்மக்களின் உறவில் தொப்புள்கொடி உறவு இந்தியா என்று நம்பி இருந்த மக்களுக்கு இந்தியா செய்த சதி வேலையால் அந்த புனிதமான உறவை சொல்வதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தமிழ்மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

ஜெனிவாத் தீர்மானத்திற்கு ஆதரவாக பலநாடுகள் வாக்களித்திருந்தன. அத்தோடு சில நாடுகளும் எதிராகவும் வாக்களித்திருந்தன. ஆனால் இரண்டும் கெட்டான் நிலையில் மீதமான நாடுகள் விலகி இருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியாவும் விலகியிருந்தது. அதுதான் தமிழ்மக்கள் வெட்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா இந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருக்குமானால் இன்னும் பல நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கும். இது அனைத்து தமிழர்களுக்கும் செய்த மிகப்பெரும் துரோகமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.

வடகிழக்கு மக்களுக்கான இணைந்த தாயகத்தில் நிரந்தர அரசியல் தீர்வைக்கொண்டு வருவதற்காக 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மாகாணசபை முறைமையும் கொண்டுவரப்பட்டது. அது மாத்திரமல்ல எமது இளைஞர்களை ஒன்றிணைத்து பயிற்சிகள் வழங்கி ஆயுதங்களைக் கொடுத்து போராட்டத்திற்கு இட்டுச்சென்று இறுதியில் அதே இளைஞர்களை கொன்றொழிப்பதற்கும் இதே இந்தியாதான் உந்து சக்தியாக இருந்தது என்பதனை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20வருடங்களுக்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி யினரால் நீதிமன்றத்தில் இணைந்த வடகிழக்கைப் பிரிப்பதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இணைந்த வடகிழக்கு இரண்டாக துண்டாடப்பட்டது. அன்று இதனை இணைக்கவேண்டும் என்று பாடுபட்ட இந்தியா இதனை கவனத்தில் எடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்தது.

வடகிழக்கு மக்கள் இராணுவமயமாக்கலினாலும், மனித உரிமை மீறல்களாலும் பல இலட்சம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாது இன்று ஒட்டுமொத்த தமிழர்களும், பல நாடுகளும் பலவழிகளிலும் முயற்சிகள் எடுத்தபோதும் தொடர்ந்தும் மௌனம் காத்த இந்தியா இறுதி நேரத்தில் ஆதரவளிக்காமல் விலகிக்கொண்டதனை பார்க்கும் போது எதிர்காலத்தில் வடகிழக்கு மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வில் தொடர்ந்தும் இந்தியா பங்களிப்புச் செய்யுமா என்பது எல்லோர் மனங்களிலும் சந்தேகத்தினை ஏற்படுத்தயுள்ளது.

இதற்கான ஒட்டுமொத்த பதிலை இந்தியாவிலே நடைபெறவிருக்கும் எதிர்வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உரியவர்களுக்கு உரிய தருணத்தில் கொடுப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

பா.அரியநேத்திரன்
(தென்தமிழீழம்)