நேற்று (11) இரவு பிரித்தானியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மனித உரிமை அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறீலங்கா அரசின் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

mia
இந்த நிகழ்வை அனைத்ததுலக நீதி மற்றும் நம்பிக்கைக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான செயல்த்திட்டத்தை மனித உரிமைகள் ஆவலரும் ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஜஸ்மின் சூகா முன்னெடுத்து வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பில் பாலியல் வன்கொடுமைகளை சிறீலங்கா அரசு தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. போரின் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை 40 இற்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த கொடுமைக்கு உட்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் இடம்பெற்ற கருத்துரைகளை பின்வரும் காணொளிகளில் நீங்கள் காணலாம்.

தமிழில் ஈழம்ஈநியூஸ்.https://www.youtube.com/watch?v=8_1dGtafJt4&feature=player_embedded