சிறீலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கக்திற்கு அருகில் கொழும்பு ரெலிகிராப் என்ற ஊடகத்தின் ஊடகவியலாளர் ரஜீவ ஜெயவர்த்தனா (63) சடலாகமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (12) காலை சடலம் மீட்கப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய பகுதியில் வசித்துவரும் இவர் முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் குடும்ப விமான நிறுவனமாக மிகின் லங்கா என்ற விமான நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றியிருந்தார்.

அப்போது இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஊடகங்களில் இவர் எழுதி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும்போதும், இவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் சுதந்திர சதுக்கம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here