திரு சுமந்திரன் தன்னை மீண்டும் மீண்டும் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவரோ அல்லது தனது சொந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவரோ இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். ஒரு தலைவராக அல்லது மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கான மிக அடிப்படையான தகமை, தனது சொந்த கருத்துக்களை ஒதுக்கி வைத்து, தன்னையோ தான் சார்ந்த கட்சியையோ நம்பி வாக்களித்த மக்களின் அபிலாசைகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்துவதே ஆகும்.

எது எப்படி இருப்பினும் திரு சுமந்திரன் தனக்கு வாக்களித்த மக்களின் கருத்துக்களை பற்றி எள்ளவவு கூட கவலைப்படாமல், தனது தவறான சொந்த கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருவதுடன், அதனை மக்களிடம் திணிக்க முற்படுவதும் சகிக்க முடியாதது.

மிக சமீபத்தில், 08 மே 2020 அன்று, திரு சுமந்திரன், முன்னாள் ஊடக இயக்குநராக இருந்த திரு சமரவிக்ரமாவுடனான சிங்கள பேட்டியில் கூறிய கருத்துக்களால் அவரது சொந்தக் கட்சியினர் உட்பட தமிழ் அரசியல் வட்டாரம் முழுவதும் கொதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்து அவர் அப்பட்டமாக பொய் சொன்னார், மேலும் தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைபடுத்தினார்;. மேலும் வடகிழக்கு முழுவதும் தமிழர்களிடையே பரவலான கோபத்தையும் சீற்றத்தையும் தூண்டிய இலங்கையின் சிங்கக் கொடி மற்றும் தேசிய கீதத்தை தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதானது அவரது சொந்தக் கட்சியில் உள்ள சக சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து கூட விமர்சனங்கள் ஏற்பட காரணமாகியது.

இது போலவே, 2015 ஆம் ஆண்டில் அவர் சண்டே லீடரில் ஆங்கிலத்தில் தனது கட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் இல்லை என்றும் அவர்களின் சித்தாந்தத்திற்கு உடன்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் தமது கட்சி “பயங்கரவாதத்திற்கு” ஆதரவளித்தில்லை என்று தெரிவிததன் மூலம்; விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்ற கருத்தை மறைமுகமாக வழங்கியிருந்தார். திரு சுமந்திரன் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டதாக காட்டிக்கொண்டு, “புலி ஆதரவு புலம்பெயர்ந்தோருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் கூறியது புலம்பெயர்ந்த தமிழரை கடுமையாக புண்படுத்தியது.

திரு சுமந்திரானுக்கு கடுமையான எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டார். நான் சுமந்திரனின் சிங்கள் நேர்காணலை முழுமையாக பார்க்கவில்லை எனினும், “இது அவரது தனிப்பட்ட கருத்து தமிழ் தேசிய கூட்டணியின் அல்லது இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடாக கருதப்படக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், திரு சம்பந்தனின் சொந்தக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மூத்த உறுப்பினர்கள், பிற தமிழ் கட்சிகளின் தலைவர்கள் திரு சுமந்திரனைப் போலல்லாமல், தமிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான காரணங்களுடன் நீண்டகால தொடர்பினைக் கொண்டவர்கள். அவர்கள் திரு சுமந்திரனின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக தங்கள் கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகிக்கும் திரு சுமந்திரனின் கருத்துக்கள் அவரது சொந்த கருத்தாக கருதி விட்டுவிட கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழரசுகட்சி தலைவர் திரு மாவை சேனதிராஜா “புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று திரு சுமந்திரன் கூறிய கருத்துக்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கோபத்துடன் தெரிவித்தார்.

சக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் திரு ஈஸ்வரபதம் சரவணபவன், “மனிதகுலத்திற்கு எதிரான செயல்களில் பங்கேற்கவோ அல்லது ஈழப்போராட்டத்தை கேலி செய்யவோ ஒரு தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுகட்சியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று கூறினார். அவர் திரு சம்பந்தனிடம் திரு சுமந்திரனை அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணியும், புகழ்பெற்ற வழக்கறிஞரும் இலங்கை தமிழரசுகட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவருமான திரு கே.வி. தவரசா கூறுகையில், “திரு சுமந்திரனுக்கு ஆயுதப் போராட்டத்தை கொச்சைபடுத்த அதிகாரம் இல்லை. திரு சுமந்திரன் அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவது குணப்படுத்த முடியாத காயங்களை உருவாக்கி தமிழ் மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தியுள்ளது” என மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு சார்லஸ் நிர்மலநாதன் திரு சம்பந்தனிடம் “சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிலையிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்க அனுமதிக்க கூடாது” என கேட்டுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை அமைப்பின் (டெலோ) தலைவர் திரு செல்வம் அடைகலநாதன், “திரு சுமந்திரனின் கருத்துக்கள் முற்றிலும் மன்னிக்க முடியாதவைஇ முழு ஆயுத தமிழ் போராட்டமும் தவறானது என்று சொல்வது முற்றிலும் மன்னிக்க முடியாதது” என்றார்.

மற்றொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் “திரு சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தெரியாமல் பேசுகிறார்” என்றார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் தமிழ்த் கட்சி எம்.பி.யான திரு ஞானமுத்து சிறினேசன், “திரு சுமந்திரனின் கருத்துக்களுக்கு தீர்வு காணும்; பொறுப்பான நடவடிக்கை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை வலியுறுத்தினார். அவர்களின் ஊடக செய்தித் தொடர்பாளரான திரு சுமந்திரனின் கருத்துக்களுக்கு தமிழ்த் தேசியக் கட்சி பொறுப்பு, சிங்கள பேரினவாதிகளை மகிழ்விப்பதற்கான சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் தமிழரசுகட்சி இளைஞர் பிரிவு தலைவரும், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தற்போதைய தலைவருமான திரு வி. சிவகரன் கூறுகையில், “திரு சுமந்திரன், வடக்கில் ஒரு கதையையும், தெற்கில் மற்றொரு கதையையும், தமிழில் ஒரு கதையையும், சிங்கள மொழியில் மற்றொரு கதையையும் சொல்லி அரசியலை வணிகமயமாக்கியுள்ளார்” என கூறினார் அவர் மேலும் “அவ்வப்போது சந்தர்ப்பவாதிகள் தமிழ் தரப்பில் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டணியைவிட்டு பலர் விலகி செல்ல சுமந்திரனே காரணமாக இருந்துள்ளார். மக்களுக்காக கட்சியா? அல்லது கட்சிக்காக மக்களா? என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணி உறுதியான நிலை எடுக்கவேண்டிய காலம் வந்து விட்டது.

சட்டத்தரணி மற்றும் தமிழரசுகட்சி இளைஞர் பிரிவின் துணைத் தலைவரான எஸ். தினேசன், “வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டணி பெற்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக செய்தித் தொடர்பாளர், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுபோன்ற கருத்துக்களை நான் முழுமையாக கண்டிக்கிறேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நிச்சயமாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு டி. ரவிகரன் “தமிழ் மக்கள் சுமந்திரனின் கூற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது விடுதலைப்போராட்டத்தையும் அதில் பங்கு பற்றி மடிந்த மற்றும் அங்கவீனமானவர்களையும் ஏன் தலைவர் பிரபாகரனைக்கூட அவமதிக்கும் செயலாகும்” என கூறினார்.

அவர் மேலும் “தமிழ் தலைவர்களுக்கு எதிரான அட்டூழியங்களை எதிர்த்து தமிழ் தலைவர்கள் பல வழிகளில் போராடினர். தமிழர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அகிம்சை வழிமுறைகளால் தீர்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்க தொடங்கியதையடுத்து புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்ட நிலைமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுவ உதவியது எனவே ஆயுதப் போராட்டத்தையோ அல்லது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையோ யாராவது இழிவுபடுத்தும்போது தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

சிறீசார்பு டெலோவின் பொதுச்செயலாளர் திரு பரராஜசிங்கம் உதயராசா, திரு சுமந்திரன் முழு ஆயுதப் போராட்டத்தையும் நிராகரித்த கருத்துக்களை” கண்டித்ததுடன், “திரு சுமந்திரனின் கருத்துக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்மீது நடவடிக்கை எடுக்குமா?” என்று கேட்டுள்ளார்.

“புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத வழிமுறைகளை நிராகரித்த, திரு சுமந்திரனின் கருத்துக்களால் நான் ஆச்சரியப்பட்டேன்” என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் தலைமை நீதிபதி சி வி விக்னேஸ்வரன் கூறினார். “தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்; எம்.பி.யாக அவர் எப்படி இருக்க முடியும்? என்னுடைய முன்னாள் மாணவர் என்ற முறையில், அவரது கருத்துக்கள் எனக்கு பெரும் அவமானத்தைத் தருகின்றன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் நன்கு அறிந்ததே” எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் “தமிழர்களுக்கு சுயாதீனமான ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான அபிலாசைகளுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியற்ற தன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது. திரு சுமந்திரனுக்கு கட்சியைச் சுற்றியுள்ள வரலாறு தெரியாது! அல்லது அவர் தெரியாது என்று பாசாங்கு செய்கிறாரா? அவர் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும்.

திரு சுமந்திரன் ஒரு ஊழியரைப் போல நடத்தப்படுவதில் பெருமிதம் கொள்ளலாம், ஆனால் தமிழர்கள் சார்பாக பேசும்போது அவருக்கு அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை இல்லை. கொழும்பில் வசதியாக வாழ்ந்தபின், தமிழ் மக்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி திரும்புவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை” என தெரிவித்தார்.

நீதியரசர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கேட்டு அவர்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பது முக்கியம். இல்லையென்றால், அவர் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது சிங்கள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும். நாங்கள் எமது விடுதலைப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சிங்கள மக்களுக்கு எங்கள் தேவைகளை உணர்த்தவேண்டும் தம்பி பிரபாகரன் ஆயுதமேந்தி பேராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பல சிங்கள மக்கள் உள்ளனர்.

தெற்கில் சிங்கள தலைவர்கள் போராட்டங்கள் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான தேவை பற்றி பேசுகிறார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும், இதுவரை செய்த தியாகங்களையும் குறைக்கும் எந்த முயற்சிகளையும் நாம் அகற்ற வேண்டும். சிங்கள மொழியில் என்னிடம் ( விக்னேஸ்வரன்) கேள்வி கேட்கப்பட்டிருந்தால், பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்பட்டது என்பதை நான் தெளிவாகக் கூறியிருப்பேன்” என தொடர்ந்தார்.

“சில நாட்களுக்கு முன்பு ஒரு சிங்கள நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் தமது கட்சி ஆயுதபேராட்டத்தை எப்போதும் குறைகூறியே வந்துள்ளது என்றும் தான் இலங்கை கொடியை ஏற்று சிங்களத்தில தேசிய கீதம் பாட தாயராக உள்ளேன்” என தெரிவித்திருக்கிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது ட்வீட்டரில் பதிவுசெய்திருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “திரு சுமந்திரன் தமிழ் தேசியவாதத்தை மறந்துவிட்டார். அதனால்தான் தமிழ் போராட்டத்திற்கான ஆயுத போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். “வர் இலங்கை சிங்கக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எங்கள் வலி பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 11 ஆண்டுகளாக அவர்களின் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் கட்சியின் அடிப்படை அபிலாசைகளிலிருந்து விலகிச் செல்கின்றன என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். திரு மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை உள்நாட்டுப் போரில் அவர்கள் வகித்த பங்கிற்கு திரு சுமந்திரன் பாராட்டியுள்ளார் ” என கூறினார்.

முன்னாள் புலிகளை உறுப்பினராக கொண்டுள்ள கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமந்திரனை கடுமையாக சாடியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தாங்கள் வழங்கிவரும் ஆதரவை விலக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரித்தும் உள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரைக் கண்டித்ததுள்ளன, “திரு சுமந்திரன் கொழும்புக்கு விசுவாசமானவர், கொழும்பை விரும்புகிறார். அவர் தமிழ் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. சிங்கள மக்கள் அவரை சேர் பொன்னம்பலம் ராமநாதனுக்கு ஒத்த நபராகவே பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் செயல்படுகிறார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பைப் பாதுகாக்க அவர் பணியாற்றுகிறார்” என்று தெரிவித்தன.

வவுனியாவில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது 715 வது நாளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ~~சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை தமிழ் அரசியலில் இருந்து நீக்கிய பின்னர் தமிழர்களுக்கு முதலில் சுதந்திரம் கிடைக்கும்.” என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பதாகையை ஏந்தி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களை திரு சுமந்திரன் அவர்களை “புலம்பெயர் புலி;கள்” என்று குறிப்பிடுவது மிகவும் புண்படுத்தக்கூடியது மற்றும் மன்னிக்க முடியாதது, இது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் குறித்து இலங்கை உளவுத்துறையின் அதே கருத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார் என்ற உண்மையை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

இது போலவே பிப்ரவரி 2017 இல் தன்னை கொலை செய்யும் முயற்சிக்கான திட்டமிடல் வெளிநாட்டில் நடந்துள்ளது என்று ஒரு போலியான குற்றச்சாட்டையும் அவர் புலம் பெயர் தமிழ் மக்கள் மீது சுமத்தியிருந்தார்.

புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இவ்வாறு புலி முத்திரை குத்துவதானது, அவர்கள் இலங்கை திரும்பும்போது கைது செய்யப்ட்டு சித்திரவதைக்கு உள்ளாவதற்கு வழிகோலி உள்ளது. STF பாதுகாப்பை பெறுவதற்காக திரு சுமந்திரனால் அரங்கேற்றப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி நாடகம் தான் இந்த கொலைமுயற்சி என்றபதற்கான நம்பகமான தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த சதியில் பலிக்கடாவாக்கப்பட்ட, யப்பாவியான 5 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, இன்னும் சிறையில் சித்திரவதை அனுபவித்து வருவதற்கான முழுப்பொறுப்பம் திரு சுமந்திரன் ஏற்க வேண்டும். இந்த 5 முன்னாள் புலி உறுப்பினர்களை மட்டுமல்லாமல் இலங்கைக்கு திரும்பியதும் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் ஆர்வலர்களையும் சித்திரவதை செய்யப்படுவதற்கும் இவரே உடந்தையாகிறார்

சுருக்கமாக சொல்வதானால், திரு சுமந்திரன் எப்போதுமே தனக்கும் அவரது தமிழ்த் தேசியக்கட்சிக்கும் வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையானது. தனது சமீபத்திய நேர்காணலின் மூலம், ஏற்கனவே இழப்பின் வேதனையால் பாதிக்கப்பட்டு, நீதி இல்லாமல் விடப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் இதயங்களில் ஆறாத காயத்தையும் வலியையும் அவர் உருவாக்கியுள்ளார்.

தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரும் அவரது கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் கருத்துக்களை மதிக்கத் தவறிவிட்டார். தனது சொந்த கருத்துக்களை ஒதுக்கி வைக்க இயலாமையை நிரூபிப்பதன் மூலம், அவர் தனது சொந்த மக்களை ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

தனது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும் கருத்துக்களையும் விற்கும் ஒரு தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்த அவர் அனுமதிக்கப்படக்கூடாது. சுயேட்சையாக நிற்கவோ அல்லது தனது சொந்தக் கருத்துக்கள் அடிப்படையில் தனது சொந்தக் கட்சியை உருவாக்கவோ அவருக்கு முழு சுதந்திரமும் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழர்களின் ஆணையை அவர் மதிக்க முடியாததால், அவர் உடனடியாக தனது பதவியை துறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டும்.

அவரிடம் சுயகௌரவம் கொஞ்சமானது எஞ்சியிருநடதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை நீக்குவதற்கு முன்பு அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தவறினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணைப்படி செயல்பட வேண்டும், அவரை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் அல்லது தமிழர்களிடமிருந்து அனைத்து ஆதரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழக்க நேரிடும்.

திருமதி. மனோன்மணி சதாசிவம்.
மூத்த சட்டத்தரணி;, பிரபல நொத்தாரிசு,
பதில் நீதவான், உயர் நீதிமன்றம், வவுனியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here