அரசுகளோ அல்லது வேறு குழுக்களோ மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அந்த நாடுகளின் விமானங்களில் பயணிப்பதை தவிருங்கள். அரசுகளின் விடுதிகளை புறக்கணியுங்கள் என மனிதாபிமான செயற்பாட்டாளர் அம்ரா லீ (Amra Lee) கடந்த 27 ஆம் நாள் ரைற்நைவ் (http://rightnow.org.au) என்ற இணையத்தளத்தில் எழுதிய பத்தியில் தெரிவித்துள்ளார்.

அதன் தமிழ் வடிவத்தை ஈழம் ஈ நியூஸ் இங்கு தருகின்றது:

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. சிறீலங்காவில் கடந்த 26 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவானது மிகவும் தரமற்றது, அது அனைத்துலக தரத்தை கொண்டிருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க சிறீலங்கா அரசபடைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்வதில் இருந்து அது தவறிவிட்டது என ஐ.நா அமைத்த நிபுணர் குழு 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

un-geneva
சிறீலங்கா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவுஸ்திரேலியா தனது மௌனத்தை கடைப்பிடித்திருந்தது. ஆனால் அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி மற்றும் தென்கொரியா உட்பட 23 நாடுகள் திர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
2009 ஆம் ஆண்டில் நிறைவடைந்த போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்பதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.

காணாமல்போதல், எதிர்த்தரப்பினர் மீதான தாக்குதல்கள், ஊடகத்துறையினர் மற்றும் நீதித்துறையினர் மீதான அடக்கு முறைகள் தற்போதும் தொடர்வதாகவே அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த நிலையில் அங்கு ஒரு நீதியான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. இது சிங்கள மக்களிடமும், சிறுபான்மை சமூகத்திடமும் இனநல்லிணக்கப்பாடுகளை தோற்றுவிக்காது.

சுற்றுலாத்துறை

எனினும் சிறீலங்காவின் சுற்றுலத்துறை பெரும் வளர்ச்சிகண்டு வருகின்றது. சிறீலங்கா அதிபர் மகிந்த ரஜபக்சாவும், அவரின் சகோதரர்களும் சிறீலங்கா அரசின் மிகவும் முக்கிய பதவிகளை தமது கைகளில் வைத்திருக்கின்றனர். அவர்கள் பொருளதாரா வளர்ச்சியை காண்பித்து மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு முயன்று வருகின்றனர்.

சிறீலங்கா அரசின் நான்காவது மிகப்பெரும் வருமானத்துறையாக சுற்றுலகாத்துறை உள்ளதாக 2012 ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலில் சிறீலங்காவின் அமைதி மற்றும் நீதித்துறைக்கான செயற்பாட்டாளர் பிரட் காவர் தெரிவித்திருந்தார். சிறீலங்காவின் சுற்றுலாத்துறை கடந்த நான்கு வருடங்களில் இரு மடங்காக அதிகரித்திருந்தது. இதன் அதிகாரிப்பானது சிறீலங்கா அரசிற்கு வெற்றியாகவே அமைந்துள்ளது. பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்ட முல்லைத்தீவு கரையோரங்களையும் அது ஆக்கிரமித்துள்ளது.

எனது பயணம்

அண்மையில் நான் சிறீலங்காவுக்கான எனது பயணத்தை மேற்கொண்டபோது அது மகிழ்ச்சியாக அமையவில்லை. போரினால் பாதிப்படைந்த எனது நண்பர்களும், அவர்களின் குடும்பங்களின் நிலையும் மோசமானதாகவே கணப்பட்டது. அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்களை மறந்தால் பயணம் மிகழ்ச்சியாக அமைந்திருக்கும் என்பதே பொதுவான செய்தி. ஆனால் ஒரு மனிதநேயப் பணியாளராக என்னால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

எனது பயணத்தை திறந்த மனதுடனும் எனது அபிப்பிராயங்களுடனுமே மேற்கொண்டிருந்தேன். நகரத்தில் மக்களின் வரவேற்பு மிகவும் மகத்தானதாக இருந்தது. அவர்கள் சுற்றுலாப்பயணிகளின் அமெரிக்க டொலர்களை காண விரும்புகின்றனர். கொழும்பு சென்று அங்கிருந்து பின்னர் கண்டி சென்றபோது எனக்கு ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சென்றிருந்தால் வேறுபட்ட நிலையை அறிய முடிந்திருக்கும். அங்கு மனித உரிமை செய்ற்பாட்டாளர்களுக்கும், அரசுக்கு எதிராக பேசுபவர்களுக்கும் தற்போதும் அச்சுறுத்தல்கள் உள்ளன. வடக்கில் உள்ள மக்கள் வெளிப்படையாக பேச அச்சம் கொண்டுள்ளனர். அவ்வாறு செய்தால் அவர்கள் தாக்கப்படலாம்.

இராணுவமயமாக்கப்பட்ட சுற்றுலாத்துறை

SLA-mullai
வடக்கில் சிறீலங்கா அரசு ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட சுற்றுலாத்துறையையே நடாத்தி வருகின்றது. அங்கு தான் இறுதிக்கட்டப்போரில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன. முன்னர் விடுதலைப்புலிகளின் தளமாக விளங்கிய முல்லைத்தீவில் பல பத்தாயிரம் மக்கள்கொல்லப்பட்ட இடத்தில் சுற்றுலாவிடுதி அமைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் விடுதி ஒன்றில் பணியாற்றிவரும் பிரித்தானியா நபர் ஒருவருடன் உரையாடிபபோது அவருக்கு அங்கு இடம்பெற்ற போர் தொடர்பாக அடிப்படை விடயங்கள் கூட தெரியவில்லை. எல்லாம் மறைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை புறக்கணிப்பது என்பது தவறான முடிவாக இருக்கலாம் ஏனெனில் அது மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கலாம் ஆனால் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளை தவிர்ப்பது தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவேண்டிய முடிவாகும். அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் பிற்றர் கிறெஸ்ரிக்கு எகிப்திய அரசு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கிய போது எகிப்துக்கான சுற்றுலாத்துறை புறக்கணிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

எனவே உங்களின் பயணத்தை திட்டமிடும்போது சிறு ஆய்வு செய்யுங்கள், கூகுள் இணையத்தில் தேடுங்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை என்பன மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிடுகின்றன. அது உங்கள் நாடு தொடர்பாகவும் இருக்கலாம்.

அரசுகளோ அல்லது வேறு குழுக்களோ மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அந்த நாடுகளின் விமானங்களில் பயணிப்பதை தவிருங்கள். அரசுகளின் விடுதிகளை புறக்கணியுங்கள்.

சிறீலங்காவில் அரசு இரு விமான நிறுவனங்களை கொண்டுள்ளது. 11 ஆடம்பர விடுதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன் கடற்பயண கப்பல் சேவை, 180 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணை, மூன்று கிறிக்கெட் மைதானங்கள், கொல்ப் மைதானம் உட்பட திமிங்கிலங்களை பார்வையிடும் இரு தளங்களையும் சிறீலங்கா அரசு கொண்டுள்ளது.

பல நிறுவனங்கள் சிறீலங்கா அரச தலைவருக்கு நெருக்கமானவை. சிறீலங்கா அரச தலைவரின் மைத்துனர் நிசந்தா விக்கிரமசிங்காவும் ஒரு விமான நிறுவனத்தை கொண்டுள்ளார்.

எகிப்திலும் தேசிய விமான சேவையை அரசு தன்வசம் வைத்துள்ளது.

அரச உடமைகளை தவிர்த்து பொதுமக்களுக்கு சொந்தமான சேவைகளை நாடுங்கள் இது அவர்களின் பொருளாதார வசதியை அதிகாரிக்கும். எனினும் சில அரசுகள் இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டுள்ளன. எனவே நீங்கள் பயணம் செய்யும் நாடுகளின் மனித உரிமை விவகாரங்களை கருத்தில் எடுங்கள். மக்களின் கருத்துக்களை கேளுங்கள், ஆனால் அரசியல் விவகாரங்களை அதிகம் பேசி அவர்களை ஆபத்தில் தள்ளாதீர்கள்.

கோப்பி விதைகளை உற்பத்தி செய்வதில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீதான நியாயமற்ற தன்மைகள் குறித்து கவலை கொள்ளும் அவுஸ்திரேலிய மக்கள் தமது டொலர்களை செலவிடும் முன்னர் அந்த நாடுகளின் மனித உரிமை மீறல்களை ஏன் கருத்தில் எடுப்பதில்லை.

சிறீலங்கா தொடர்பான தகவல்களை பின்வரும் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.srilankacampaign.org/tourismdilemma.htm

இந்த பத்தி எழுத்தாளரான அம்ரா லீ (யுஅசய டுநந) ஒரு மனிதாபிமான செயற்பாட்டாளர். மனிதவியல் மற்றும் மோதல்கள் தொடர்பான துறையில் உயர்கல்வியை (Masters in Applied Anthropology and Participatory Development – Conflict) பெற்றவர். மேலும் சட்டவியல் துறையில் (Graduate Diploma in Legal Practice and Bachelor of Arts (Development)/Laws) அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (The Australian National University) பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர்.

நன்றி: http://rightnow.org.au

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்