டார்வினின் கூர்ப்பு கொள்கையும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும்..

0
1194

Darwin-213x300இன்று கூர்ப்புக் கொள்கை என்றழைக்கப்படும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிமுகம் செய்த சிந்தனையாளர் சார்ளஸ் டார்வினின் பிறந்த தினம் ஆகும். இன்றைய நாளில் மீண்டும் அவரது கோட்பாடு இன்னும் விரிவாக பல பல்கலைகழகங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

அவரது பரிணாம வளாச்சிக் கோட்பாட்டின் அடிநாதமாக இருப்பது உயிரினங்களின் இருப்பாகும். இன அழிப்பு குறிப்பாக கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு குறித்து உலகிற்கு கோடு காட்டியவர் இவர்தான். ஆனால் மேற்படி பதங்களை அவர் அப்போது உச்சரிக்கவில்லை.

தற்போது உலகெங்கும் பயங்கரவாத அரசுகள் சிறுபான்மை இனங்களை இன அழிப்பு செய்து வரும் சூழலில் டார்வின் கூர்ப்புக் கொள்கை இன அழிப்போடு தொடர்பு படுத்தி ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

“The Origin of Species by Natural Selection” அதாவது ‘இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ என்ற அவரது ஆய்வு நூலிள்ள கருத்துக்கள்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும். இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார் டார்வின்.

இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன..தக்கன பிழைத்து வாழும் அதாவது தகுதியுள்ளவை உயிர் வாழும் என்கிறார் டார்வின்.

தகுதியும் வலிமையும் இல்லாவிட்டால் நாம் ஒரு இனமாக நிலைத்து நிற்க முடியாது என்கிறது கூர்ப்புக் கொள்கை.

சாணக்கியரின் சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் என்ற தத்துவம் இதையொட்டியதுதான். பின்னாளில் இதையே சற்று நாகரீகமான மொழியில் சிக்மன்ட் ப்ராய்ட் சொல்கிறார் “தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும்’.

பெரும் இன அழிப்புக்குள்ளாகி தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் சிக்கியுள்ள எமது இனத்திற்கு டார்வினின் கூர்ப்பு கொள்கை இன்றைய நாளில் பெரும் எச்சரிக்கையை செய்கிறது.

எனவே எமது விடுதலைக்காக போராடும் அதே வேளை சமகாலத்தில் கட்டமைக்க்பட்ட இன அழிப்பிற்கு எதிராகவும் போராடி தாய்நிலத்தில் எமது இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

இல்லையேல் டார்வினின் விதிப்படி நாம் அழிந்து போவதை எந்த சக்தியாலும் தவிர்க்க முடியாது.

ஈழம்ஈநியூஸ்