தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நிகழ்வு டென்மார்க் பல்கலைகழக தமிழ் மாணவர்களால் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

 

முதல் நிகழ்வாக பொதுச்சுடர், ஏற்றலுடன் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியெற்றல், அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வும் இடம்பெற்றது, அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்து கொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மாணவர்கள் ஒன்றித்திருந்தனர்.

 

அதைத் தொடர்ந்து மணவர்களால் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது.

 


‘எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாகஇ அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

 


என்ற எம் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கேற்ப, எம்முடன் சேர்ந்தியங்கும் பலதேசிய, பல்துறை சார்பு மாணவருக்கும் எமது போராட்த்தின் அறவிளக்கத்தை புரிந்துணர்வாக்கி, இலட்சிய நெருப்பை இதயத்தில் இருத்தி, தமிழ் மாணவர்கள் நாங்கள் நம் இருப்பை உறுதி செய்வோம், என்று இந்புனித நாளில் உறுதி ஏற்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

நன்றி.

 

தமிழ் மாணவர் ஒன்றியம்.
Århus பல்கலைக்கழகம்.
டென்மார்க்.