ட்ரோஜான்கள் என்றும் ட்ரோஜான்களே, புலிகள் என்றும் புலிகளே

0
627

theepan-praba” I urge the Council to take bold steps in understanding the 60-year-long genocide and investigate it through an independent international investigation.

We seek concrete actions to safeguard our children from becoming permanent victims to the genocide. We do not want our children to end up as a lost generation. ” Ms. Ananthi Sasitharan

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை தேவை என்பதை ஐ.நா மனித உரிமை அவையத்தில் பதிந்த தோழர். ஆனந்தி அவர்களுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

மிகுந்த அச்சுறுத்தலுக்கு இடையிலும் அச்சப்படாமல் இனப்படுகொலைக்கான சர்வதேச சுதந்திர விசாரனையை தயக்கமின்றியும், குழப்பமின்றியும் பேசி இருக்கிறீர்கள்….

அமெரிக்க தீர்மானத்தினை ஆதரிக்கிறோம் , எதிர்பார்க்கிறோம், என்றோ, அல்லது சிலர் பேசுவது போல “ இருதரப்பினரையும் (இலங்கை-புலிகள்) விசாரி” என்றோ பேசாதது மகிழ்ச்சியை அளிக்கிறது.

புலிகளை சர்வதேச விசாரணை வளையத்திற்குள் கொண்டு சென்று முடக்க பலர் இங்கே உறக்கமின்றி வேலை செய்கிறார்கள். அமெரிக்க தீர்மானத்தில் வருடம் தோரும் படிப்படியாய் முன்னேற்றம் வருமென்றார்கள், 2012 இல் இருந்து கழுதை தேய்ந்து கரப்பான் பூச்சியாக மாறி இருக்கிறது.

தற்பொழுதும் கூட அமெரிக்க தீர்மானத்தில் (இருதரப்பு ) போர்க்குற்ற விசாரணை கிடைத்தால் போதும் என்கிற நிலைப்பாட்டினை அனைவரிடத்திலும் பரப்புகிறார்கள். ஆனால் இருதரப்பு விசாரணையைப் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. புலிக்ளையும் ஏன் விசாரிக்கவேண்டுமென கோருகிறார்கள் எனக் கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது.

பின்னே, புலி எதிர்ப்பினை நேரடியாக பேசினால் என்ன எதிர்வினை கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்கும் புத்திசாலிகள் அல்லவா இவர்கள்..

புலிகள் எதிர்ப்பு பேசியவர்கள், இந்திய அதிகாரப் பிடியில் இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்கள் இருவர், புலிகள் பயங்கரவாதிகள் என மனித உரிமைமீறல் பிரச்சனை பேசியவர்கள், அமெரிக்கா மூலம் நிதி உதவி பெரும் என்.ஜி.ஓக்கள், எந்த ஒரு மக்கள் திரள் போராட்டத்தினையும் நடத்தாத அமெரிக்கா வாழ் ஒருசில தமிழ் அமைப்புகள் என அனைவரும் அமெரிக்க தீர்மான ஆதரவு அல்லது அதன் மூலமாக தீர்வு என்று ஓரணியில் நிற்கிறார்கள்..

இந்த தீர்மானத்தில் ஒருவேளை சர்வதேச விசாரணை வந்தாலும்,ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என தீர்மானம் முன்வைப்பதை இதுவரை இவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை.. அமெரிக்காவின் பிராந்தியக் கொள்கையும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதையே முன்வைக்கும்பொழுது எப்படி இவ்வாறு ஆருடம் சொல்கிறார்கள் என தெரியவில்லை… இந்தக் குழுவில் சிலர் முன்னணி மார்க்சியவாதிகளாக அறிப்பட்டவர்களாக இருப்பதுதான் ஆகப்பெரும் துயரம்.

அமெரிக்கா மனசு மாறும், திருத்தம் தமிழருக்கு ஆதரவாக கொண்டு வர இயலும் என நம்புபவர்கள், அமெரிக்கவின் வெளியுறவு கொள்கை-பாதுகாப்பு கொள்கையில் என்ன மாற்றத்தினை இந்த 5 வருடங்களில் கொண்டு வர இயன்றது என்பதை வெளிப்படையக பேசினால் நல்லது. அல்லது இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து தீர்மானம் கொண்டு வரவேண்டுமென்றவர்கள் இந்தியாவின் கொள்கை மாற்றத்திறகாக என்ன வகையான முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது என்று சொல்வார்களா? .. இந்திய அரசு என்று யாரும் பொறூப்பேற்காத தேர்தல் காலத்தில் யாரிடம் நெருக்கடி கொடுக்கப்போகிறார்கள்? ..

புலிகள் மீதும் விசாரணை என்று நடக்கும் பொழுது நேரில் சென்று வாதாடுவார்களோ என்னவோ தெரியவில்லை..

ஈழத்தின் இன்றய நெருக்கடியில் “இனப்படுகொலைக்கு சர்வதேச சுதந்திர விசாரணை வேண்டுமென” கோரிக்கை வைத்த ஆனந்தி சசிதரனுடைய தைரியத்தினை பாராட்டியாகவேண்டும்.

ட்ரோஜான்கள் என்றும் ட்ரோஜான்களே, புலிகள் என்றும் புலிகளே.

திருமுருகன் காந்தி