jalliஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு என ஒரு தரப்பும், மிருக வதை என இன்னொரு தரப்பும் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையில் இது தமிழர், விவசாயம் சார்ந்த வாழ்வியல். உணவுச் சங்கிலியின் பிணைப்பு..

 

மாடுகளை பூட்டி ஏர் உழுது வந்தோம். சாணம், அதன் மூத்திரம் உள்ளிட்ட கழிவுகளால் வயல்வெளிகள் பல பயன்களை பெற்று அருமையான உணவை பெற்று வந்தோம். தேவைக்காக கால்நடைகளின் எண்ணிக்கை யும் பெருகின.டிராக்டர் என்று வந்தது.. மாடுகள் பங்கு படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

 

இப்போது கண்ணை உறுத்துவது காங்கேயம், புளியங்கு ளம் உள்ளிட்ட சில வகை வீரியம் மிக்க காளைகள் ரகங் கள்தான்…

 

மேய்ச்சல் நிலம் அதிகமுள்ள பிரதேசங்களைவிட தமிழகத்தில் மட்டும் கால்நடைகள் அதிகம் இருப்பது, பிரதானமாக இனப்பெருக்க விஷயத்தில் சளைக்கவே சளைக்காமால் ஜமாய்க்கும் திறன் உள்ள ரகங்கள்தான்.

 

வலுவான வம்சங்களை தலைமுறை தலைமுறையாய் கொடுக்கும் இவற்றை காலி செய்துவிட்டால் வெளிநாட் டு ரகங்கள் இங்கே படிப்படியாக கொண்டுவரப்படும்.

 

அப்புறமென்ன, ஒரு கட்டத்தில் அவன் கன்னுகுட்டி அவன் தீவனம், அவன் மருந்து மாத்திரை என அவன் காலை மட்டுமே நக்கிக்கிடக்கவேண்டும்.. பால் உள்பட பல விஷயங்களின் நிலவரம் எவ்வளவு கலவரமாக போகும் என்பது உங்கள் முடிவுக்கே விட்டுவிட வேண் டியதுதான்…

 

ஜல்லிகட்டுக்கு தடைக்கான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு போட்ட மனு. மாதக்கணக்கில் நிற்கிறது..கோடிக்கணக்கில் செலவு செய்யும் ஒரு அமைப்பு மனு போட்டால். மறுநாளே விசாரணைக்கு வருகிறது.. தடையும் கிடைக்கிறது..

 

ஜல்லிகட்டு நடத்தாவிட்டால் காளைகளை வளர்க்கவே முடியாதா என்று கேள்வி ஒன்றை பலமாக கேட்கிறார் கள். சாகசம் சார்ந்த வாழ்வியலும் உலகின் முக்கிய அம்சம் என்பதை மறந்தவர்களின் கேள்வி இது. இதை பற்றி விளக்க ஆரம்பித்தால் போய்க்கொண்டே இருக்கும்..

 

வருடத்திற்கு சில ஆயிரம் பேர்மட்டுமே ஐஏஎஸ் தேர் வில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் எழுதுபவர்களின் எண்ணிக்கையோ பல லட்சம். சில ஆயிரம்பேருக்கு தானே வாய்ப்பு என்று கருதி பல லட்சம் பேர் ஒதுங்கியா போய்விடுகிறார்கள்… அதேபோலத்தான் இதுவும்..

 

ஜல்லிக்கட்டிற்கு வரும் காளைகள் சில ஆயிரம்.. ஆனால் அந்த சாகச மனநிலையோடு அவற்றை வளர்த்து பராமரிப்பவர்களின் எண்ணிக்கை பல லட்சம்..

 

எல்லாம் சரி,, இதையெல்லாம் கண்ட நாய்களுக்கு ஏன் சொல்லி தமிழன் விளக்கவேண்டும் என்று முடிக்கக் தோன்றுகிறது. ஆனால் நாகரீகம், கலாச்சாரம், பாரம் பரியம் போன்றவற்றை கரைத்து குடித்திருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் போதனைகள் நினைவுக்கு வருவதால் அப்படி முடிக்க இயலவில்லை.

Elumalai Venaktesan