ததேமமு மீதான விமர்சனம் குறித்த விளக்கமும் மாற்று தமிழ்த்தேசிய அரசியல் இயக்கமொன்றின் தேவையும்

0
932

prabaharanததேமமு மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை நிகழ்த்த புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியான நிலாந்தனை மேடையேற்றியது தொடர்பாக ஒரு காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தோம். அதற்கு பல எதிர்வினைகள். நாம் எதிர்பார்த்ததுதான்.

எமது ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களிடம் நேரிடையாகவும் தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் என்று பலதரப்பட்ட எதிர்வினைகள் அவை. நல்ல விடயம். எம்முடன் பேசிய ஒருவருமே நிலாந்தனுக்காக வக்காளத்து வாங்க வரதாவரை சந்தோசமே.! தமிழ்த்தேசியம் குறித்து பேசும் அருகதை நிலாந்தனுக்கு இல்லை என்பதும் அவரை விமர்சிப்பது ஏற்புடையதுதான் என்ற புரிதலும் அகேனமாக அனைவருக்கும் இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.

ஆனால் ததேமமு மீதான நமது விமர்சனத்தை யாரும் ஏற்பதாக இல்லை. இதற்கு நாம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அதற்கு முன்பு சிலவற்றை தெளிவு படுத்த விரும்புகிறோம். சிலர் இணைய வெளிகளில் இந்த விமர்சனம் குறித்து சில வதந்திகளை பரப்பியதாக அறிந்தோம். அதனால் இந்த விளக்கம்.

நாம் ஒன்றும் அனாமதேயமான மொட்டைக் கடதாசி இணையம் நடத்தவில்லை. முகமூடி அணிந்து யாரையும் அவதூறு செய்ததும் கிடையாது. முடிந்தவரை ஊடக அறங்களை கடைப்பிடித்தே வருகிறோம். ஊடகத்தை வியாபாரத்திற்கோ பரபரப்புக்கோ நாம் நடத்தவுமில்லை.

நாம் ஊடக வெளியில் இயங்குவதை விட செயற்பாட்டு தனங்களிலேயே தங்கியிருக்கிறோம். 2009 மே இற்கு பிறகு தமிழீழ விடுதலைக்கான ஒரு தற்காலிக பரப்புரைத்தளம் ஒன்றின் தேவை கருதி தொடங்கப்பட்டதே எமது இணையம் . எந்த நேரத்திலும் எமது இணையத்தை நாம் மூடவும் நேரிடலாம். முன்பு தமிழிலும் பின்பு ஆங்கிலத்திலும் தற்போது மீண்டும் தமிழிலும் என்று மாறி மாறி இயங்கி வருகிறோம்.

இது பலருக்கும் தெரியும். எமது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியும். நாம் ததேமமு குறித்து எழுதியது எமது ஆசிரியர் தலையங்கம். தெளிவாக “ஈழம்ஈநியூஸ்” என்று அதன் கீழ் பதிவு செய்திருந்தும் சில “மேதாவிகள்” அதை அனாமதேய கட்டுரை என்றும் அதை எழுதியது இன்னார் என்றும் கிசுகிசுக்கள் எழுதியதாக அறிந்தோம்.

அது எமது ஆசிரியர் தலையங்கம். நாம் கூடி பேசி சுயநினைவுடன் எழுதியது. அதற்கு முழுப்பொறுப்பு எமது ஆசிரியர் குழு. நாம் எழுதியதில் தற்போதும் தெளிவாகவே இருக்கிறோம். அதை அவதூறு, அனாமதேய கட்டுரை, ஆதாரமில்லாதது என்று யாரும் பிதற்ற வேண்டாம்.

ஒன்றல்ல ஆயிரம் ஆதாரங்கள் நிலாந்தன் குறித்து எம்மிடம் உள்ளது. சம்பந்தப்பட்ட ததேமமு எழுத்து மூலம் மறுப்பு வைத்தால் நாம் ஆதாரங்களை பகிரங்கமாக வைப்போம். நிலாந்தன் ஆதாரம் கேட்டு வரமாட்டார். அதை நாம் அவரிடம் கோரவுமில்லை.

நாம் கேபி, கருணா, டக்ளஸ் வகையறாக்களிடம் எந்த தொடர்பையும் பேணுவதில்லை. அந்த பட்டியலில் உள்ள நிலாந்தனுக்கு மட்டும் நாம் எப்படி சிறப்பு சலுகை அளிக்க முடியும்.?

ஆனால் நாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நிலாந்தன் மறுப்பு எழுதினால் அதை முழுமையாக பதிவு செய்யும் ஊடகஅறம் எம்மிடம் நிரம்பவே உள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அவரது துரோகப்பாத்திரம் குறித்த எண்ணற்ற ஆதாரங்களை இணைத்தே அதை வெளியிடுவோம். மின்னஞ்சல்கள், தொலைபேசி ஊரையாடல்கள், புகைப்படங்கள், முகமூடி தரித்த புலிஎதிர்ப்பு கட்டுரைகள், சந்திப்புக்கள் என்று அது பலவகையானது.

nelanthan
எனவே ஊடகவியலாளர்கள் என்ற போர்வையிலுள்ள சில வியாபாரிகளும் பிழைப்புவாதிகளும் எமக்கு பாடம் எடுப்பதை முதலில் நிறுத்துங்கள். தமிழ்த்தேசிய சிந்தனைப்பள்ளி என்பது தமிழ்த்தேச விடுதலை குறித்து ஆக்கபூர்வமாக பேசவே ஒழிய துரோகத்திற்கு விளக்கு பிடிக்க அல்ல.

புலத்தில் உருத்திரகுமாரன் தொடக்கம் தாயகத்தில் சம்பந்தர் வரை நாம் தமிழ்த்தேசியத்திலிருந்து பாதை மாறிய யாரையும் விட்டு வைத்ததில்லை. எனவே ததேமமுன்னணிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது.

வேறு சிலர் நிலாந்தன் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியதை இப்போது பதிவுசெய்வது அறமில்லை என்று சொன்னதாக அறிந்தோம். ஆனால் அவர்களில் சிலர் கூட்டமைப்பு வடக்கு மகாணசபையில் போட்டியிட்டபோது அதன் வேட்பாளர்களான ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றவர்கள் பல வருடங்களுக்கு முன்பு பேசியவற்றை தமிழ் மக்களுக்குள் பரப்பியதன் அர்த்தத்தை சொன்னால் நாமும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். நீங்களெல்லாம் நல்லா வருவீங்க ராசா.. அற்புதமான தமிழ்த்தேசிய சிந்தனை இது.

இனி விடயத்திற்கு வருகிறோம்.

வெளிப்படையாகவே நிலாந்தன் தேசியத்தலைவர் பிரபாகரன் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் உளறிக்கொட்டிய பதிவுகள் இருக்கின்றன. இருந்தபோதிலும்

புலனாய்வு போராளிகளின் ஏராளமான தரவுகளின் அடிப்படையில் நிலாந்தன் குறித்து பல தரப்பையும் எச்சரித்ததுபோல் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ததேமுமு யினருக்கும் எச்சரித்து வந்துள்ளோம். பல ஆதாரங்களையும் முன்பே அனுப்பியும் வைத்தோம்.

ஆனால் கெடுகுடி சொல் கேளாது என்பதற்கு ததேமமு நல்ல உதாரணம். அத்தோடு இந்த நிகழ்வில் நினைவுப்பேருரையை நிலாந்தன் நடத்தப்போவது அறிந்து அதை நிறுத்துமாறும் கேட்டோம். நிறு;தவில்லை.நடத்திய பின் நாம் கண்டன அறிக்கை வெளியிடப்போகிறோம் என்று கூறியது மட்டுமல்ல பல ததேமமு உறுப்பினர்களுக்கு எமது ஊடகத்தில் வெளியிட முன்பு அந்த பதிவை அனுப்பியுமிருந்தோம்.

அந்தளவிற்கு நாம் இறங்கி வந்ததுடன் ஊடக அறத்தையும் பேணினோம். இதில் எந்த தனிப்பட்ட பிரச்சினையுமில்லை. ஒருதமிழ்த்தேசிய இயக்கத்தின் மீது கறைபடிந்து அது மக்களிடமிருந்து அன்னியப்ட்டுபோவதை நாம் விரும்பாததே எமது அனைத்து முயற்சிகளுக்கும் காரணம். ஆனால் விதி வலியது.

இன்று ததேமமு கறைபடிந்த ஒரு இயக்கம். அது மக்கள் முன் செல்லும் தார்மீக அறத்தை இழந்து விட்டது. நாம் வாக்கு அரசியலை தாண்டிய ஒரு அமைப்பு குறித்து சிந்திக்க இன்று ததேமமு வழி வகுத்து விட்டது.

அடுத்து தெரியாமல் கேட்கிறோம், நமக்கும் நிலாந்தனுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா? இல்லை சொத்து பிரச்சினையா? தனிப்பட்ட முறையில் எங்களுக்கு அவரை தெரியாது. அது கூட பலருக்கு புரியவில்லை.

நாம் முன்பே அவரது வாக்குமூலத்தை இணைத்திருக்கிறோம். நேற்று மட்டுமல்ல இன்றும் ஏன் நாளையும் கூட தமிழீழ விடுதலை என்பது விடுதலைப்புலிகளின் தியாகங்களை மதிப்பதனூடாகவும் முள்ளிவாய்;க்காலில் தலைவர் நிகழ்த்தியது மிக முக்கியமான இராஜதந்திர பகடையாட்டம் என்ற புரிதலை அடைவதனூடாகவுமே எட்டமுடியும். அதை சிதையாமல் கொண்டு செல்ல வேண்டிய ஒரு அமைப்பே நமது தற்போதைய தேவை.

ஆனால் நிலாந்தன் முன்பு முகமூடி தரித்தும் பின்பு வெளிப்படையாகவும் தற்போது மிக நுட்பமாகவும் “புலி நீக்கம்” செய்யப்பட்ட அரசியலை தமிழ்த்தேசிய பரப்பிற்குள் திணிக்க களமிறக்கப்பட்டுள்ளார். இது ஒரு அன்னிய நிகழச்சி நிரலின் பிரகாரம் நடப்பதாக நாம் நம்புகிறோம். விரைவில் அதனை ஆதாரங்களுடன் மக்கள் முன் சமர்ப்பிப்போம்.

“புலிநீக்கம”; என்பது சிங்களத்தினது மட்டுமல்ல இந்திய மேற்குலக நிகழ்ச்சி நிரல் என்பது எமது மக்களுக்கு தெளிவாகவே தெரியும். எனவே இந்த போக்கை நாம் எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.

நிலாந்தன் இதுவரை அதை செய்து கொண்டிருந்தபோதும் நாம் அது குறித்து எந்த எதிர்வினையுமாற்றவில்லை. காரணம், தமிழ்த்தேசியப்பரப்பில் கிட்டத்தட்ட அவர் அம்பலப்பட்டுப்போன ஒரு நபர். அத்தோடு அவரது புலியெதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இனி கிடைக்கப்போதுமில்லை. அது வேறு கதை.

ததேமமு அவரை மேடையேற்றியதனூடாக அவரது புலியெதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்க முற்படட்டதுதான் இங்கு பிரச்சினைக்கு அடித்தளமிட்டிருக்கிறது.

எமது முன்னயை பதிவில் நிலாந்தனின் செயற்பாடுகள் குறித்து எழுதியுள்ளதால் மேலதிகமாக இங்கு எழுத விரும்பவில்லை.

BURT-MULLAITIVU1-300x225
மே 18 இற்கு பிறகு பலியெதிர்ப்பு – புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலை நிறுவ பாடுபட்ட ஒரு தனி மனித இயக்கம் நிலாந்தன். தாயகத்தில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புலத்தில் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியங்கள் ஆவணப்படுத்தப்பட நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிலாந்தனின் பங்கு இருக்கிறது.

எனவே தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான தனது வாக்கு மூலங்களை மட்டுமல்ல தன்னால் உந்தப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்திருக்கும் அனைவரினதும் வாக்குமூலங்களையும் ஜெனிவா சென்றடையாமல் தடுப்பது மட்டுமல்ல அதை முழுமையாக மீளெடு;க்காத வரை நிலாந்தனை ஒரு தமிழ்த்தேசிய சக்தி என்று அழைப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே நாம் கருதுகிறோம்.

ததேமமு மீதான எமது குற்றச்சாட்டுக்கள் இந்த அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பரப்பில் கருத்து கூற யாருக்கும் உரிமை உண்டு. நிலாந்தனை யாரும் தடுக்க முடியாது. நாம் இதுவரை தடுக்கவும் இல்லை. ஆனால் தேசியத்தலைவர் பிரபாகரனின் அரசியலின் தொடர்ச்சியை செய்வதாக சொல்லும் ஒரு அமைப்பு தலைவரை “உலகின் மன்னிக்கமுடியாத போர்க்குற்றவாளி” என்று கூறும் ஒருவருக்கு தமிழ் மக்களின் பெயரால் அங்கீகாரத்தை வழங்கும்போதுதான் நாம் கேள்வி கேட்க நேரிடுகிறது.

எனவே நாம் முன்பு எழுதியதில் எந்த மாற்றமும் இல்லை.

நிலாந்தனை மேடையேற்றியதற்கு ததேமமு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது தலைவர்மீதும் போராட்டம் மீதும் சேறடித்து போர்க்குற்ற ஆவணமாக முன்வைத்த நிலாந்தனின் வாக்கு மூலத்தை அவர் மீளப்பெறும் உறுதிமொழியை தமிழ்மக்களுக்கு ததேமமு தரவேண்டும். இல்லையேல் ததேமமு ஐ தமிழ் மக்கள் புறக்கணிப்பதைத; தவிர வேறு வழியில்லை. மாவீரர்களையும் தேசியத்தலைவரையும் கொச்சைப்படுத்தும் நயவஞ்சக பச்சோந்திகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு தேவையில்லை..அதற்கு ஏற்கனவே “கூட்டமைப்பு” என்ற ஒரு கட்சி இருக்கிறது.

எனவே தேர்தல் அரசியலுக்கு அப்பால் புலிகள் விட்டு சென்ற இடத்தை சரியாக நிரப்பும் மாற்று தமிழ்த்தேசிய அரசியல் இயக்கமொன்றின் தேவையை தற்போது உணர்கிறோம். அதை தாயகத்தில் கட்டியெழுப்ப ஒன்று திரளுமாறு மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

மாவீரர்களின் தியாகங்களை மதித்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் வழியில் நின்று தாயகத்தை மீட்டெடுக்க உறுதியெடுப்போம்.

ஈழம்ஈநியூஸ்.