தமிழகம்தமிழீழம் இரண்டும் பிரிக்கமுடியாத உறவுப்பிணைப்பு, எனவே தான் தமிழகத்தின் அரசியல் மாற்றம் தமிழீழத்தின் அரசியலில் பலமாக எதிரொலிக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

 

தமிழீழம் அமைந்தால் அது தமிழகத்திற்கு பாதிப்பு என்ற கொள்கையை முன்வைத்தே இந்தியா அரசு சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு துணைபோனது. ஆனால் தற்போது தமிழீழத்துடன் சேர்த்து தமிழகத்தையும் சிதைத்துவிட இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையும் மிகவும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் வெளிப்பாடே சசிகலாவின் சிறைவாசமும் பன்னீர்தீபாவின் இணைவும்.

 

தமிழகத்தின் அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் எம்ஜிஆர் இற்கு பின்னர் தமது அரசியல் நலன்கடந்து தமிழீத்திற்கு உதவியவர்கள் என்பது மிகவும் குறைவு. ஜெயலலிதாவும், கருணாநிதியும் தமிழீழத்தின் துன்பங்களை கொண்டு தமக்கு அரசியலில் இலாபம் தேட விளைந்தவர்கள்.

 
எனினும் ஜெயாவின் நடவடிக்கைகளின் மூலம் எம்மால் அடையக்கூடிய பலன் தொடர்பாகவே தமிழ் மக்கள் இறுதித் தருணத்தின் அவருக்கு தமது ஆதரவுகளை வழங்கினார்கள். எனினும் தமிழர் அல்லாத ஒருவரிடம் நாம் எமக்கான உரிமைகளை பெற நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

 

ஆனால் தமிழர் அல்லாத ஒருவர் அல்லது முதுகெலும்பற்ற தமிழினத் துரோகி ஒருவரே தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்பது வட இந்திய கொள்கைவகுப்பாளர்களின் திட்டம். எனவே தான் அவசர அவசரமாக இந்திய நீதித்துறை கண்விழித்தது.

 

பன்னீர் என்ற வடஇந்திய கொள்கைவகுப்பாளர்களின் சிலிப்பர் செல் தியாகி ஆக்கப்பட்டார், தீபா என்ற வேற்று இனத்தவர் தமிழர்களின் அடுத்த தலைவியாக சித்தரிக்கப்படுகின்றார். அதாவது ஏழு கோடி தமிழ் மக்களும் உலகத் தரம்வாய்ந்த முட்டாள்கள் என வட இந்திய கொள்கைவகுப்பாளர்கள் நம்புகின்றனர். நாமும் அதனை கைகொட்டி வரவேற்கின்றோம்.

 

ஜெயாவினால் கையொப்பமிடாது கிடப்பின் போடப்பட்ட மோடி அரசின் திட்டங்களை அவர் இறந்தவுடன் பன்னீர் கையொப்பமிட்டு கொடுத்தபோதும் நாம் எமக்கு வரப்போகும் ஆபத்தை உணரவில்லை.

 
ஆந்திராவை ஒரு தெலுங்கர் ஆட்சிபுரியலாம், கேரளாவை ஒரு மலையாளி ஆட்சி புரியலாம் ஆனால் தமிழகத்தை மட்டும் ஒரு தமிழர் ஆட்சிபுரியக்கூடாது என்பது வடஇந்திய கொள்கைவகுப்பாளர்களின் திட்டம். அதற்கான காரணம் அருகில் உள்ள தமிழீழம் என்ற புலிகளின் கோட்டை.

 

இதுவரை செத்துக்கிடந்த இந்திய நீதித்துறையை செயற்பட வைப்பதுபோல் நாடகமாடி தமிழகத்தில் மிகப்பெரும் ஜனநாயகச் சீரழிவை மேற்கொண்டு சத்தமின்றிய ஒரு இனஅழிப்புக்கு இந்திய மத்திய அரசு தயாராகி வருகின்றது.

 

இதனை தடுக்கவேண்டும் என்றால் பன்னீரும், தீபாவும் தமிழகத்தில் இருந்து முற்றாக துடைத்தழிக்கப்பட வேண்டும். மேலும் சிதறும் அதிமுகாவை தமிழர் ஒருவர் கைப்பற்றி வழிநடத்தவேண்டும்.

 
தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசு தடம்புரளும் நிலையில் தான் உள்ளது. அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தி வடஇந்திய கொள்கைவகுப்பாளர்களின் திட்டங்களை தவுடுபொடியாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழக குடிமக்களினதும் கடமையாகும்.

 

மீண்டும் ஒரு ஜெயா உருவாகக்கூடாது என்றால் தீபா என்ற வடஇந்திய கொள்கைவகுப்பாளர்களின் பொம்மை துடைத்தெறியப்படவேண்டும் அது மட்டுமல்லாது அதனை தாங்கிநிற்கும் பன்னீரும் அரசியல் அனாதையாக்கப்படவேண்டும்.

 

எனவே தமிழகத்தின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பானது வெகுவிரைவில் முடிந்துவிடப்போவதில்லை. எதிர்வரும் காலங்களில் தமிழகம் மிகப்பெரும் மக்கள் போராட்டங்களை சந்திக்க தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

ஈழம் நியூஸ்.