தமிழ் இனத்தை முற்றாக அழித்து ஒழிப்பது என்ற இந்திய ஒன்றியத்தின் திட்டத்திற்கு எதிராக தமிழ் இளம் தலைமுறை எரிமலையாக எழுந்து நின்கின்றது. தமிழ் இனத்தின் பிரதான தாய்நிலமான தமிழகத்திற்காக தமிழீழம் உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களின் அதரவுக்கரம் நீண்டுள்ளது.

 

ஒரு இனம் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றப் போராடுகின்றது. இந்த போராட்டத்திற்கு எதிராக தனது இரும்புக்கரத்தை நீட்ட இந்திய மாத்திய அரசு தயாராகி வருகின்றது. அந்த கருத்தைத் தான் இந்திய இனவெறி அரசின் பிரதமர் நரேந்திய மோடிக்கும் தமிழக முதல்வர் பன்னீர்ச் செல்வத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முறிவும், தேக்க நிலையும் காண்பிக்கின்றன.

 

இவ்வாறான ஒரு நிலையைத்தான் பிரித்தானியர்கள் வெளியேறிய பின்னர் தமிழீழம் சந்தித்திருந்தது. தந்தை செல்வா உட்பட பல தமிழ் தலைவர்கள் சிங்கள தேசத்துடன் மேற்கொண்ட பேச்சுக்களை சிங்கள தேசம் புறம்தள்ளியதுடன், சிங்கள தேசத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சாத்வீகப்போராட்டங்களும் தோல்வியில் முடிவடைந்திருந்தன.

 

தொடர் அவமானங்கள், புறக்கணிப்புக்களின் ஊடாக தமிழ் மக்களின் விடுதலைப்போரை சிங்கள அரசே ஆயுதப்போராட்டமாக மாற்றியிருந்தது.

 

இன்று ஏறுதழுவுதலுக்கு எதிராக இந்திய மத்திய அரசு கொண்டுவந்த தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் திட்டத்தைப்போலவே அன்று தமிழாராச்சி மாநாட்டை குழப்ப சிங்கள அரசு சதிசெய்தது. சிங்கள அரசின் அந்த இனவெறித்தாக்குதலில் பல அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தான் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் உச்சம் பெற்றது.

 

அதாவது நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான். முள்ளிவாய்காலில் எம்மை இந்திய தேசம் சிங்கள தேசத்துடன் இணைந்து அழித்தாலும், நாம் போராடித் தான் வீழ்ந்தோம் என்ற பெருமை எமக்கு உண்டு. எதிரியின் காலில் வீழ்ந்து கெஞ்சி எமது உயிர்களை துறக்கவில்லை. எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி எமது போராட்டத்தை உலக வரலாற்றில் பதியவிட்டே எமது போரளிகள் வீழ்ந்தனர். அது தான் இன்றும் ஈழத்தமிழ் மக்கள் உலகில் தலைநிமிர்ந்து நடக்க காரணம்.

 

வெற்றி பெற்ற சிங்கள சிப்பாய்களை விட வீழ்ந்துபோன எம் மாவீரர்களின் நினைவு நாட்கள் தான் உலகம் பூராவும் நடத்தப்படுகின்றன.

 

தமிழ் இனத்திற்கு எதிரான தனது இனவெறியில் இருந்து இந்திய தேசம் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. நேற்று ஈழத்தில் இன்று தமிழகத்தில் இனஅழிப்பு ஒன்று தான் ஆனால் களம் மட்டும் மாறியுள்ளது.

 

தமிழக மக்களின் தற்போதைய போருக்கு காரணம் ஏறுதழுவுதல் மட்டுமல்ல காலம் காலமாக இந்திய மத்திய அரசு மேற்கொண்டுவரும் அடக்குழுறைகளும் பாரபட்சமும் தான் முக்கிய காரணம்.

 

எனவே இந்த போராட்டம் தொடரவேண்டும். வெற்றி கிட்டும்வரை நாம் போராடவேண்டும் எமது அமைதிவழியிலான போர் ஆயுதவழிகளில் முறியடிக்கப்பட்டால் அடுத்த போராட்டத்திற்கான பாதையை நாம் தெரிவுசெய்ய வேண்டும்.

 

ஏனெனில் போராட்டம் ஒன்று தான் தமிழ் மக்கள் முன்னுள்ள ஒரே வழி அதனை தான் இந்திய மத்திய அரசும், அண்டைய மாநிலங்களும் தமிழ் மக்கள் மீது திணித்துள்ளன. எனவே தமிழினம் தன்னை தற்காத்துக்கொள்ள என்ன விலைகொடுத்தும் போராடவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

காலத்திற்கு ஏற்ப போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் உலகில் தமிழினம் நிம்மதியாக வாழும் வரை இந்த போராட்டமானது எமது வாழ்வில் ஒரு அங்கமாக திகழும் என்பதே உண்மை.

 

ஈழம் ஈ நியூஸ்.