தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்

0
657

2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தை சிங்கள அரசு ஆயிரக்கக்கில் படுகொலை செய்தபோது அதனை அரசியல் ஆக்கிய திராவிட முன்னேற்றக்கழகமும், சிறீலங்கா அரசின் படுகொலைகளுக்கு எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்ட இந்திய காங்கிரஸ் கட்சியினரும் ஈழத்தமிழ் மக்களின் குருதியில் அன்று வெற்றியும் பெற்றிருந்தனர்.

ஐந்து வருடங்கள் சென்றபின்னர் தற்போது மீண்டும் ஒரு தேர்தல் இந்தமுறையும் தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தி.மு.கவும், காங்கிரசும் களம் இறங்கியுள்ளன. ஆனால் சூழ்நிலை முன்னையது போல இல்லை என்பது தான் அவர்களின் வருத்தம்.

தமிழ் இனம் தனது அடையாளத்தை காப்பாற்றவும், தனது இனத்தை தக்கவைக்கவும் போராட ஆரம்பித்துள்ளது. ஈழத்தில் மலர்ந்த இந்தப்போர் தற்போது உலகம் எங்கும் வியாபித்துள்ளது.

குறிப்பாக தமிழகம் எழுச்சி கொண்டுள்ளது. இந்தியா என்ற ஜனநாயகவிரோத தேசத்தில் தாம் தொடர்ந்தும் இருக்கவேண்டுமா? அல்லது பொஸ்னியா, மொன்ரோநீக்ரோ போன்ற தேசங்களைப்போல பொருளாதார மற்றும் வளமிக்க நாடுகளாக பிரிந்து செல்வதா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழக மக்களின் மனங்களிலும் தற்போது எழுங்துள்ளது.

இந்த கேள்வியின் கருத்து யாதெனில் தமிழக மக்கள் அரசியல் ரீதியில் மிகவும் முதிர்ச்சியான நிலைக்கு சென்றுள்ளனர் என்பதேயாகும். இருக்கும் வழங்களையும், இனத்தின் மானத்தையும் டெல்லியிடம் அடைவுவைத்துவிட்டு பிச்சையெடுத்துவாழ தமிழ் இனம் தற்போது விரும்பவில்லை.

congress98
ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக அமெரிக்;காவின் தீர்மானத்தை கூட எதிர்த்ததுடன், சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவரும் தமிழகம் அதற்கு ஏதுவான ஒரு வலுவான பின்தளம் ஒன்றை அமைக்கவேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளது என்பதே யதார்த்தமானது.

அதன் முதற்படியாக தமிழக மண்ணில் இருந்து காங்கிரஸ் என்ற தமிழின விரோத கட்சி முற்றாக துடைத்தழிக்கப்;படவேண்டும். அதன் பின்னர் அதற்கு துணைபோகும் கும்பல்கள் அகற்றப்படவேண்டும்.

2009 ஆம் ஆண்டு தமிழ் இனம் கெடூரமாக படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தவேளை, கால் மேல் கால் போட்டபடி ‘தமிழ் இனம் சிங்களவர்களுடன் இணைந்து வாழப்பழகிக்கொள்ள வேண்டும்’ என காங்கிரசின் கைக்கூலியான பா சிதம்பரம் ஊடகங்களுக்கு அன்று கூறியதை தமிழ் மக்கள் இன்றும் மறந்துவிடவில்லை.

சிதம்பரத்தின் இந்த கருத்திற்கு விடுதலைப்புலிகளின் ஆவணப்பிரிவுப் பொறுப்பாளர் திரு யோகி அவர்கள் அன்றே பதில் கொடுத்திருந்தார். அதாவது தமிழ் மக்கள் சிங்கள மக்களின் பகுதிக்குள் சென்று அவர்களுடன் இணைந்து வழ்வது தான் தீர்வானால், ஏன் வடஇந்தியர்கள் பாகிஸ்தானுக்குள் சென்றும், பாக்கிஸ்தான் மக்கள் டெல்லியிலும் வந்து இணைந்து வாழமுடியாது. அப்படி வாழ்ந்தால் இந்தியா – பாகிஸ்த்தான் மோதல்கள் இருக்காதே என கேட்டிருந்தார்.

எனினும் இன்று நாம் யோகியையும் இழந்துவிட்டோம். ஆனால் அவரின் இலட்சியத்தை அடையும் வரை இழப்பு என்பது எமக்கு முடிவை கொண்டுவரப்போவதில்லை.

ஸ்கொட்லாந்து தேர்தல் தொடர்பில் பிரித்தானியா பிரதமர் கூறியதை தமிழக உறவுகள் பின்பற்றவேண்டும், உங்கள் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் பேசுங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துங்கள்.

அசைக்கமுடியாத தமிழ் பற்றுக்கொண்டவர்களே இந்த தேர்தலில் வெற்றிபெறவேண்டும். ஏமாற்றுக்காரர்களையும், தமிழ் இனவிரோதிகளையும் முற்றாக துடைத்தெறியுங்கள். தமிழகத்தில் ஒரு ஆசனத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றினாலும் அது எமக்கு தோல்விதான்.

ஈழம்ஈநியூஸ்.